முக்கியச் செய்தி
மார்க்கப் பதிவுகள் சேகரிக்கப்படுகின்றன...

இஸ்லாமிய நூலகம்

சொடுக்கி வழிகாட்டியைத் திறக்கவும் ➔
தொடர்ந்து படிக்க Education
Recent Posts
15 பதிவுகள்
Pages
25 பக்கங்கள்
Random Posts
15 பதிவுகள்
All Tags
அனைத்து லேபிள்கள்
Connecting to the creator
Best Articles
Best Friends
Gaza People
Best Topics

பதிவுகள்

ஏற்றப்படுகிறது...

பாவங்களை பகிரங்கப்படுத்தாதீர்கள்

 


பாவங்களை பகிரங்கப்படுத்தாதீர்கள்


கண்ணாடிக்கு முன்னால் நீங்கள் நிற்கும்போது கண்ணாடி மறைத்திருக்கும் தன்னுடைய குற்றங்களை உங்களிடம் பகிரங்கப்படுத்துவதில்லை. நான் என் குற்றங்களை ஒப்புக் கொள்கிறேன் என்ற பெயரில் நீங்கள் மறைவில் செய்யும் குற்றங்களை நீங்களாக முன்வந்து வெளிப்படுத்தாதீர்கள். நீங்கள் மறைவாகச் செய்யும் பாவங்களை இறைவன் மன்னித்து விடுகிறான். அதற்காக இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரி திருந்துங்கள். மீண்டும் அக்குற்றத்தைச் செய்யத் துணியா தீர்கள். உங்கள் குற்றங்களை நீங்களாக வெளிப்படுத்துவது பிறரையும் அதுபோன்ற குற்றங்களைச் செய்யத் தூண்டலாம். அது உங்களுக்கு தண்டனையை அளித்துவிடும்.




“என் சமுதாயத்தாரில் (பாவம் செய்த) அனைவரும் (இறைவனால்) மன்னிக்கப்படுவர்; (தம் பாவங்களைத்) தாமே பகிரங்கப்படுத்துகிறவர்களைத் தவிர ஒருவர் இரவில் ஒரு (பாவச்) செயல் புரிந்துவிட்டுப் பிறகு காலை யானதும் அல்லாஹ் அவனுடைய பாவத்தை (பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவிட்டிருக்க, 'இன்னாரே! நேற்றிரவு நான் (பாவங்களில்) இன்னின்னதைச் செய்தேன்" என அவனே கூறுவது பகிரங்கப்படுத்துவதில் அடங்கும். (அவன் செய்த பாவத்தை) இரவில் (பிறருக்குத் தெரியா மல்) இறைவன் மறைத்துவிட்டான். (ஆனால்,) இறைவன் மறைத்ததைக் காலையில் அந்த மனிதன் தானே வெளிச்ச மாக்கி விடுகிறான்" என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


அறிவித்தவர்: அபூ ஹுரைரா(ரலி) நூல்: ஸஹீஹ் அல் புகாரீ, ஹதீஸ் எண்: 6069


"உங்களில் ஒருவர் தம் இறைவனை (மறுமையில்) நெருங்குவார். எந்த அளவிற்கு என்றால் இறைவன் தன் திரையை அவரின் மீது போட்டு (அவரை மறைத்து) விடுவான்.


"நீ (உலகத்தில்) இன்னின்ன (பாவச்) செயல்களைச் செய்தாயா?" என இறைவன் கேட்பான்.


"ஆம்" என அவர் கூறுவார்.


"இன்னின்ன (பாவச்) செயல்களைச் செய்தாயா?" என இறைவன் (மீண்டும்) கேட்பான்.


“ஆம்" என அவர் கூறி தம் (பாவச்) செயல்களை ஒப்புக் கொள்வார்.


“இவற்றையெல்லாம் உலகில் நான் (பிறருக்குத் தெரியா மல்) மறைத்திருந்தேன். இன்று அவற்றிலிருந்து உன்னை மன்னித்துவிடுகிறேன்' என இறைவன் கூறுவான்" என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


அறிவித்தவர்: இப்னு உமர்(ரலி)


நூல்: ஸஹீஹ் அல் புகாரீ, ஹதீஸ் எண்: 6070



குற்றத்திற்காக வருந்துங்கள் ! திருந்துங்கள்!!


கண்ணாடிக்கு முன்னால் நீங்கள் நின்று, அது உங்களின் குறையை எடுத்துரைத்தால் உடனடியாக அதைத் திருத்திக் கொள்வதற்குத் தயாராகிறீர்கள். உங்களின் சகோதரர் உங்களுக்குக் கண்ணாடி, அவர் உங்களிடம் காணப்படும் குறையைச் சுட்டினால் முழுமனதுடன் அதை ஏற்றுக் கொண்டு திருத்திக் கொள்வதற்குத் தயாராகுங்கள். வருத்தப்படுவது மட்டும் தீர்வாகாது. திருந்துவதுதான் தீர்வாகும். ஆனால், மனம் உடைந்து விடாதீர்கள்; நிராசையடைந்துவிடாதீர்கள்.


மனிதன் தவறு செய்யக்கூடியவன்தான். நீங்கள் தவறே செய்யாமல் வாழமுடியாது. அப்படியானால் நீங்கள் வானவராகத்தான் இருக்க வேண்டும். எனவேதான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பின்வருமாறு கூறினார்கள்.


“ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்யக் கூடியவர்களே! அவர்களில் சிறந்தவர்கள் தம்முடைய பாவங்களுக்காக மனம் வருந்தி திருந்துபவர்கள் ஆவர்" என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


அறிவித்தவர்: அனஸ்(ரலி)


நூல்: திர்மிதீ மற்றும் இப்னு மாஜா


இறையருளைவிட்டும் நிராசை அடைந்து விடாதீர்கள். இறைவன் பாவங்களை மன்னிப்பவன்; கருணையாளன்.

“தமக்குத்தாமே தீங்கிழைத்துள்ள என் அடியார்களே! ஏக இறைவனின் அருளில் நம்பிக்கையிழக்காதீர்கள்! ஏக இறைவனே பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கிறான். அவனே மிக்க மன்னிப்பவன்; நிகரற்ற கருணையாளன்” எனக் கூறும்.


எனவே, (மனிதர்களே!) உங்களுக்கு தண்டனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இரட்சகனின்பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்! (தண்டனை வந்த) பின்னர் உதவப்பட மாட்டீர்கள்.


திருக்குர்ஆன் 39:53, 39:54



புரட்சியின்றி புதிய உலகம்


இன்றைய உலகம் பொறாமை, போட்டி, வஞ்சகம், பகைமை, சுயநலம் முதலியவற்றால் சூழ்ந்துள்ளது. மனிதன் மனிதனை அழித்தொழிக்கும் அவல நிலைக் காணப்படுகிறது. மனிதம் மதிக்கப்படுவதில்லை. அன்பு பரிமாற்றங்கள் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பொருள் முதல்வாதமே மனிதனின் குறிக்கோளாய் உள்ளது. மனிதன் மனிதனாக வாழ்வதற்கும் அனுமதிக் காமல் அமைதிக்கு எதிராக எதிர்ப்பலை வீறுநடை போடுகிறது.


அமைதியை நிலைநிறுத்துகிறோம் என்ற பெயரில் ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது படை எடுப்பதும், அங்குள்ள குழந்தைகள், பெண்கள், நோயாளிகள், வயோதிகர்களைக் கொன்று குவிப்பதும் அந்நாட்டு வளங்களை கொள்ளையடிப்பதும் இன்று சர்வ சாதரணமாகிவிட்டது. இந்நிலை மாறுமா என பாதிப் பிற்குள்ளான நெஞ்சங்கள் பரிதவிக்கின்றன.


மனிதன் இப்படித்தான் வாழவேண்டும் என்பது மறைந்து எப்படியும் வாழலாம் என்ற மனநிலைக்கு மனிதர்கள் மாற்றப்பட்டுவருகிறார்கள். வாழும் கலை மனிதனுக்குத் தெரிவதில்லை. மனிதத்தை அழித்தொழிக்கும் கலைதான் இன்று கொடிகட்டிப் பறக்கிறது. இந்த நிலையை மாற்றியமைப்பதற்கு ஒரு புரட்சி தேவை என சூலுரைக் கப்படுகிறது.அமைதிவேண்டும் ஒரு கூட்டம் அமைதியைக் கெடுத்து வருகிறது. உலக அமைதிக்கு உத்திரவாதம் தனி மனிதனின் மாற்றத்தில்தான் இருக்கிறது. தனி மனிதன் மாறும்போது அவன் சார்ந்துள்ள குடும்பம் மாறுகிறது. அவனுடைய குடும்பம் மாறும்போது அவன் வசிக்கும் பகுதி மாறுகிறது. அவன் வசிக்கும் பகுதி மாறும்போது அவன் வசிக்கும் நாடு மாறுகிறது. இப்படி ஒவ்வொரு மனிதனும் தன் குடும்பம் தன் பகுதி என மாற்றத்திற்குத் தயாராகும்போதுதான் உலகமே மாற்றத்திற்குத் தயாராகும். இந்த மகத்தான மாற்றம் அமைதியாக நடப்பதற்கு நீங்கள் உங்களின் பங்காக பிறரை உங்களின் கண்ணாடியாய் நீங்கள் ஆக்கிக் கொள்ளுங்கள். நீங்களும் பிறருக்குக் கண்ணாடியாய் இருங்கள். வெற்றி நிச்சயம். புரட்சியின்றி நாம் ஒரு புதிய உலகத்தை உருவாக்கலாம்; இறைவன் நாடினால்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்