முக்கியச் செய்தி
மார்க்கப் பதிவுகள் சேகரிக்கப்படுகின்றன...

இஸ்லாமிய நூலகம்

சொடுக்கி வழிகாட்டியைத் திறக்கவும் ➔
தொடர்ந்து படிக்க Education
Recent Posts
15 பதிவுகள்
Pages
25 பக்கங்கள்
Random Posts
15 பதிவுகள்
All Tags
அனைத்து லேபிள்கள்
Connecting to the creator
Best Articles
Best Friends
Gaza People
Best Topics

பதிவுகள்

ஏற்றப்படுகிறது...

மன, சரீர நோய்களுக்கு சஞ்ஜீவி

 


மன, சரீர நோய்களுக்கு சஞ்ஜீவி


மனச் சோர்வுக்கும், தீய கற்பனைகளுக்கும் இடம் தராமலும் அடிபணியாமலும் இருக்கும் மன உறுதி யானது, மன நோய்களுக்கு மாத்திரமின்றி உடல் சம்பந்தமான நோய்களுக்கும் ஏற்ற சஞ்சீவியாகும். ஏனெனில் மனிதன் எப்பொழுது வீணான கற்பனைகளுக்கு அடிபணியவும், பீதி, நோய்கள் போன்றவற்றால் ஏற்படும் தாக்கங்களுக்கும், துன்பங்களுக்கும், மற்றும் வெறுப்பூட்டும் சம்பவங்களாலும், அவ்வாறே தன்னிடமிருந்து தன்னுடைய விருப்பத்திற்குரிய பொருட்கள் தவறி விடும் போதும் உண்டாகும் கோபத்திற்கும் மனக் குழப்பத்திற்கும் இடமளிக்கின்ற போது, அவை துக்கம் துயரங்களிலும், மன நோயிலும், உடல் நோயிலும் அவனை சிக்க வைத்து விடுகின்றன. மேலும் வாழ்வில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் நரம்புத் தளர்ச்சியையும் அவை ஏற்படுத்தி விடுகின்றன.


ஆனால் எப்பொழுது மனிதன் வீணான கற்பனைகளுக்கு இடம் கொடுக்காது, அவன் அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை வைத்து அவனிடம் தன் சகல பொறுப்புக்களையும் ஒப்படைத்து விடுவானோ, அப்பொழுது அவனின் கவலைகள் அவனை விட்டும் அகன்று விடும். மேலும் அவனிடம் குடி கொண்டுள்ள பல வகையான உடல், உள நேய்களும் நீங்கி விடும். அத்துடன் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத, மனப்பலமும், மன மலர்ச்சியும், மகிழ்வும் அவன் வாழ்வில் ஏற்பட்டு விடும். ஆனால் தீய கற்பனைகளுக்கும், எண்ணங்களுக்கும் அடிமைப் பட்டவர்களின் நிலையோ பரிதாபமானது. அவர்களில் பலர் நோய்வாய்ப்பட்டு ஆஸ்பத்திரி களில் தஞ்சமடைந்துள்ளனர். இவ்வாறு இதன் தாக்கத்திற்குப் பலவீனர்கள் மாத்திரமின்றி, பலசாளிகளும் இலக்காகியுள்ளனர். மேலும் பலர் பைத்தியங்களாக ஆகியுள்ளனர். ஆகையால் இத்தகைய அவலங்களிலிருந்து அல்லாஹ் யாருக்குப் பாதுகாப்பளித்தானோ அவர்களையும், மேலும் யாருக்கு மனதுடன் போராடும் மனவலிமையை அவன் கொடுத்தானோ அவர்களையும் தவிர வேறு எவராலும் இவற்றின் பிடியிலிருந்து பாதுகாப்புப் பெறவோ, நிவாரணம் பெறவோ இயலாது.


‎‫وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ (الطلاق/3)‬‎


"எவர் அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைக்கின்றாரோ, அவருக்கு அவனே (முற்றிலும்) போதுமானவன்." (65:3) என்று அல்லாஹ் கூறுகின்றான்.


இவ்வுலகிலும் மறு உலகிலும் அடியானுக்குத் தேவையான சகல விடயங்களுக்கும் அல்லாஹ் ஒருவனே போதுமானவன் என்பதே இவ்வாக்கின் விளக்கமாகும். எனவே பூரணமாக அல்லாஹ்வை நம்புகின்ற ஒருவனை யாராலும் வீணான கற்பனையால் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த இயலாது.ஏனெனில் இவை யாவும் மனதின் பலவீனத்தாலும், அடிப்படையற்ற பயத்தாலும் ஏற்படுகின்றவை என்பதையும், யார் அல்லாஹ் வின் மீது பூரணமாக நம்பிக்கை வைக்கின்றாரோ அவனை நிச்சயமாக அல்லாஹ் பாதுகாப்பான் என்பதையும் அவன் அறிவான். எனவே இத்தகைய மனப் பிராந்தி எதுவும் அவனை சோர்வடையச் செய்யாது என்பது நிச்சயம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்