பணிவு
ஒரு முஸ்லிம் தன்னைத் தாழ்த்திக் கொள்ளாமல் பணிவுடன் நடந்துகொள்ள வேண்டும். ஒருபோதும் பெருமையுடன் நடந்துகொள்ளக் கூடாது.
அல்லாஹ் கூறுகிறான்: நம்பிக்கையாளர்களில் எவர்கள் உம்மைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்களோ அவர்களி டம் பணிவாய் நடந்து கொள்ளும். (26:215)
அல்லாஹ்வுக்காக பணிவுடன் நடந்துகொள்ளும் எவரை யும் அல்லாஹ் உயர்த்தாமல் இருப்பதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) மேலும் அவர்கள் கூறிய தாவது: அதாவது நீங்கள் பணிவுடன் நடந்து கொள்ளுங் கள் - ஒருவர் மற்றவரை விட பெருமை பாராட்டாமலும் ஒருவர் மற்றவருக்கு அநியாயம் செய்யாமலும் இருப்பதற்காக என அல்லாஹ் எனக்கு வஹீ அறிவித்துள்ளான். (முஸ்லிம்)
வறியவர்கள் மற்றும் ஏழைகளுடன் அமர்வது, அவர்களி டம் தன்னை உயர்வாகக் காட்டிக் கொள்ளாமலிருப்பது, மக்களுடன் முகமலர்ச்சியுடன் நடந்து கொள்வது, பிறரை விட தன்னைச் சிறந்தவராக கருதாமலிருப்பது ஆகியவை பணிவின் வெளிப்பாடுகளாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்கள் இச்சமுதாயத்திற்கு நபியாக இருந்தும் தமது வீட்டைப் பெருக்குபவர்களாகவும், ஆட்டிலிருந்து பால் கறப்பவர்களாகவும், கிழிந்த ஆடையைத் தாமே தைத்துக்கொள்பவர்களாகவும், தமது வேலைக்கார ருடன் உணவு உண்பவர்களாகவும், கடைவீதிக்குச் சென்று பொருட்களை வாங்கிவருபவர்களாகவும், முஃமின்களில் பெரி யவர், சிறியவர், செல்வந்தன், ஏழை என்ற பாகுபாடில்லாமல் அனைவருடனும் கைலாகு செய்பவர்களாகவும் இருந்திருக் கிறார்கள்.
நாணம்
நாணம் ஈமானின் கிளைகளில் ஒன்றாகும். நாணம் நன் மையே தரும். புகாரி, முஸ்லிமில் இதற்கு சான்று உள்ளது. இத்தகைய சிறந்த குணத்திற்கு நபி (ஸல்) அவர்களே ஒரு முஸ்லிமுக்கு முன்மாதிரியாகும். காரணம் நபி (ஸல்) அவர்கள் அதிகம் நாணமுறுபவர்களாக இருந்தார்கள். அபூஸயீத் (ரலி) கூறினார்கள்:... நபி (ஸல்) அவர்கள் தாம் வெறுக்கும் ஒன் றைக் கண்டால் அதை அவர்களின் முகத்திலிருந்து நாங் கள் அறிந்து கொள்வோம். (புகாரி)
ஒரு முஸ்லிமிடம் இருக்கும் நாணம் அவன் சத்தியத் தைச் சொல்வதற்கும், கல்வியைத் தேடுவதற்கும், நன்மை யை ஏவி, தீமையைத் தடுப்பதற்கும் தடையாக இருக்காது. இந்த நாணம் உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்களிடம் 'உண்மையை உரைக்க அல்லாஹ் வெட்கப் படமாட்டான்! ஒரு பெண்ணுக்கு கனவில் ஸ்கலிதம் ஏற்பட் டால் அவளுக்கு குளிப்பு கடமையாகுமா?" என்று கேட்பதற் குத் தடையாக இருக்கவில்லையே! அதற்கு நபி (ஸல்) அவர் கள், ஆம்! இந்திரியத்தை அவள் கண்டால் குளிப்பு கடமை யாகும் என்று பதிலளித்தார்கள். (புகாரி)
ஆயினும் ஒரு முஸ்லிம் தீய செயல்களைச் செய்வது, தன் னிடம் ஒப்படைக்கப்படுகின்ற பணிகளில் தவறு செய்வது, மக்களின் இரகசியங்களை வெளிப்படுத்துவது, அவர்க ளுக்கு தீங்கிழைப்பது ஆகியவற்றுக்கு நாணம் நிச்சயம் தடையாக இருக்கும். அல்லாஹ்வுக்கு நாணமுறுவதே மிகச் சிறந்தது! எனவே முஃமின் தன்னைப் படைத்தவனுக்கு நாணமுற வேண்டும். அவன் தான் அவனை உருவாக்கி, அருட்கொடைகளையும் வழங்கியிருக்கிறான். ஆகையால் அவனுக்கு கட்டுப்படுவதிலும் அவனுடைய அருட்கொடை களுக்கு நன்றி செலுத்துவதிலும் குறை வைப்பதற்கு அவன் வெட்கப்பட வேண்டும்.
நாணமுறுவதற்கு மக்களை விட அல்லாஹ்வே மிகத் தகு தியானவன்! என நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள். (புகாரி)


0 கருத்துகள்
Welcome to your comment!