தீயகுணங்கள்

 


தீயகுணங்கள்


அநீதி


உண்மையான முஸ்லிம் யாருக்கும் அநீதி இழைக்க மாட் டான். அநீதி இழைப்பது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகிறான்: உங்களில் யாரேனும் அநீதி இழைத் தால் அவருக்கு கடுமையான வேதனையை நாம் சுவைக்கச் செய்வோம். (25:19)


ஹதீஸ் குத்ஸியில் அல்லாஹ் கூறுவதாக வந்துள்ளது: என்னுடைய அடியார்களே! அநியாயம் செய்வதை எனக்கு நானே தடை செய்துள்ளேன். அதை உங்களுக்கு இடையே யும் தடை செய்யப்பட்டதாக ஆக்கியுள்ளேன். எனவே நீங்கள் யாரும் யாருக்கும் அநியாயம் செய்ய வேண்டாம். (முஸ்லிம்)


அநீதி மூன்று வகைப்படும்:


1. அடியான் தன் இறைவனுக்கு செய்யும் அநீதி: இது அவனை நிராகரிப்பதால் ஏற்படுகிறது.


அல்லாஹ் கூறுகிறான்: நிராகரிப்பாளர்கள்தாம் அக்கி ரமக்காரர்கள். (2:254) மேலும் அல்லாஹ்வுக்கு இணை வைப்பதாலும் இது ஏற்படுகிறது- வணக்கங்களில் சில வற்றை அல்லாஹ் அல்லாதவருக்குச் செய்வது போல. 'நிச்சயமாக இறைவனுக்கு இணைவைப்பது மாபெரும் அநீதியாகும்' (31:13)


2. ஒருவன் பிறருக்கு அநீதியிழைப்பது: இது அவர்களின் கண்ணியம், உடல், பொருள் ஆகியவற்றுக்கு நியாயமின்றி பங்கம் விளைவிப்பதால் ஏற்படுகிறது. 'ஒவ்வொரு முஸ்லி முடைய உயிர், உடமை, மான மரியாதை ஆகியவை பிற முஸ்லிமின் மீது ஹராமாகும் என நபி (ஸல் ) அவர்கள் கூறி னார்கள். (புகாரி ) யாரேனும் தன் சகோதரருக்கு அவரு டைய பொருளில் அல்லது கண்ணியத்தில் அநீதி இழைத் திருந்தால் திர்ஹமோ, தீனாரோ பலன் தராத அந்த நாள் வருவதற்கு முன்பு இன்றே அவரிடம் சென்று மன்னிப்புக் கேட்டுக் கொள்ளட்டும். அநீதி இழைத்தவனிடம் நன்மை கள் இருந்தால் அவன் இழைத்த அநீதி அளவுக்கு அதிலி ருந்து எடுக்கப்படும். அவனிடம் நன்மைகள் இல்லையெ னில் அநீதியிழைக்கப்பட்டவனின் தீமைகள் எடுக்கப்பட்டு அவன் மீது சுமத்தப்படும். (புகாரி)


3. ஒருவன் தனக்குத் தானே அநீதி இழைப்பது: இது விலக் கப்பட்டவைகளைச் செய்வதால் ஏற்படுகிறது. அல்லாஹ் கூறுகிறான்: அவர்கள் நமக்கு அநீதி இழைக்கவில்லை. மாறாக அவர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டார்கள். (2:57) விலக்கப்பட்டவைகளைச் செய் வது தனக்குத் தானே செய்யும் அநீதியாகும். ஏனெனில் இவ்வாறு செய்வது இறைத் தண்டனையை அவசியமாக் கிவிடுகிறது.


பொறாமை


எத்தகைய தீய குணங்களை விட்டும் விலகிக் கொள்வது முஸ்லிமின் கடமையாகுமோ அத்தகைய தீய குணங்களில் ஒன்றுதான் பொறாமை. ஏனெனில் இதில் அல்லாஹ் தன்னு டைய அடியார்களுக்குப் பங்கிட்டு வழங்கியிருப்பதில் ஆட் சேபிக்கும் நிலை ஏற்படுகிறது. அல்லாஹ் கூறுகிறான்: இவர் கள் அல்லாஹ் தன் அருளினால் மக்களுக்கு வழங்கியிருப் பதைக் கண்டு அவர்கள் மீது பொறாமை கொள்கின்றார் ? (4:54.) 


பொறாமை இருவகைப்படும்.


1. பிறருடைய பொருள், கல்வி, அதிகாரம் ஆகிய பாக்கியங் கள் தனக்குக் கிடைப்பதற்காக அவரிடமிருந்து நீங்கிவிட வேண்டும் என்று ஆசைப்படுவது.


2. இதுபோன்ற பாக்கியங்கள் தனக்குக் கிடைக்கா வீட்டா லும் அவை பிறரிடமிருந்து நீங்கி விட வேண்டும் என்று ஆசைப்படுவது.


நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: பொறாமையை நான் உங்களுக்கு எச்சரிக்கிறேன். ஏனெனில் நெருப்பு விறகை அழித்துவிடுவது போல பொறாமை நன்மையை அழித்து விடு கின்றது.(அபூதாவூத்)


ஒருவர் பிறரிடமிருக்கும் பாக்கியம் போன்று தனக்கிருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார். ஆயினும் அப்பாக்கியம் பிற ருக்கு இருக்கக்கூடாதென்று அவர் விரும்புவதில்லை. இவ் வாறு செய்வது பொறாமையல்ல.


மோசடி


ஒரு முஸ்லிம் தன் சகோதரர்களிடம் நம்பிக்கைக்குரியவ னாகத் திகழ வேண்டும். யாருக்கும் மோசடி செய்யக் கூடாது. மாறாக தான் விரும்புவதையே தன் சகோதரனுக்கும் விரும்ப வேண்டும்.''யார் நம்மை ஏமாற்றுகின்றாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்லர்" என்பது நபிமொழி. (முஸ்லிம்)


ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் (கடைவீதியில்) ஒரு உண வுக் குவியல் பக்கம் சென்று அதில் தமது கையை நுழைத் தார்கள். கையில் ஈரம் பட்டது. உணவு வியாபாரியே! என்ன இது ? எனக் கேட்டார்கள். அதற்கு அவர், அல்லாஹ்வின் தூதரே! மழை நீர் பட்டுவிட்டது எனக் கூறினார். 'மக்கள் 

பார்க்கும் விதமாக அதை உணவுப் பொருளின் மேற்பகுதி யில் போட்டிருக்கக் கூடாதா?' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டுவிட்டு, 'யார் நமக்கு மோசடி செய்கிறாரோ அவர் நம் மைச் சார்ந்தவரல்ல' என்று கூறினார்கள். (முஸ்லிம் )


கர்வம்


சில சமயம் மனிதன் தனது அறிவைக் கொண்டு கர்வம் கொள்கிறான். அதன் மூலம் பிற மனிதர்களை விட அல்லது அறிவுடையோரை விட தன்னை உயர்வாகவும் அவர்களை அற்பமாகவும் கருத ஆரம்பிக்கிறான். சில சமயம் தன் செல் வத்தைக் கொண்டு கர்வம் கொள்கிறான். இதனால் ஏனைய மக்களை விட தன்னை உயர்வாகக் கருதுகின்றான். அது போல மனிதன் தன்னுடைய ஆற்றல், வழிபாடு போன்றவற் றைக் கொண்டும் சில சமயம் கர்வம் கொள்கின்றான்.


ஆனால் உண்மையான முஸ்லிம் இவ்வாறு கர்வம் கொள் வதைத் தவிர்ந்து கொள்வான். இது குறித்து எச்சரிக்கையா கவும் இருப்பான். உண்மையில் சுவனத்திலிருந்து இப்லீஸை வெளியேற்றியதே அவனுடைய இந்த கர்வம்தான். ஆம்! ஆத முக்கு ஸஜ்தா செய்யுமாறு அல்லாஹ் அவனுக்குக் கட்டளை யிட்டபோது, 'நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நீ நெருப்பால் படைத்தாய். அவரையோ மண்ணால் படைத்தி ருக்கின்றாய்' என்று அவன் கூறினான். இதுவே அல்லாஹ்வின் அருளை விட்டும் அவன் விரட்டப்டுவதற்குக் காரணமானது. இக்கர்வத்திற்கு நிவாரணம் என்னவெனில், மனிதன் தனக்கு இன்று அல்லாஹ் வழங்கியுள்ள கல்வி, செல்வம், ஆரோக்கி யம் போன்ற பாக்கியங்களை எந்த நொடியிலும் பறிப்பதற்கு அவன் ஆற்றல் மிக்கவன் என்பதைப் புரிந்துகொள்வதாகும்.

கருத்துகள்