🌐 மொழியைத் தேர்ந்தெடுக்கவும் / Select Language
Connecting to the creator Best Articles Best Friends Best Topics Education Gaza People General articles Gold Haj Health tips Life Life With Allah Make dua Muslim life Muslim women Nice story Prayer Read quran Read ramalan Shoping Social Media Society The Holy Prophet Videos இது ஒரு நினைவூட்டல் இது சத்திய மார்க்கம்! இம்மை மறுமை இஸ்லாமிய ஒழுக்கங்கள் இஸ்லாமிய கட்டுரைகள் ☝ உண்மையான விசுவாசி உத்தம நபி (ஸல் ) அவர்களின் வாழ்க்கை கனவின் பலன் கருத்துள்ள கதைகள் சிந்தனை துளிகள் திருக்குர்ஆன் பற்றிய கட்டுரைகள் துல்ஹஜ் மாதத்தின் சிறப்பு நல்லதோர் குடும்பம் நான் திருந்திட வேண்டும் பாடமும் படிப்பினையும் பாவமன்னிப்பு புண்ணியங்களின் பூங்காவனம் பெண்களுக்கான கட்டுரைகள் 👩 புறம் பேசலாமா ..? பொதுவான கட்டுரைகள் 📃📃 முன்மாதிரி முஸ்லிம் மார்க்க செய்திகள் மார்க்க கல்வி மறுமையின் வீட்டை நோக்கிய பயணம் விழிப்புணர்வு கட்டுரைகள் ஷஃபான் மாத சிறப்பு ஹிஜாப்-ஒரு விளக்கம் துஆக்கள் வாழ்க்கைக்கு தேவையான துஆக்கள்
Useful Islamic Sections & Site Guide

Posts

Loading...

நாங்கள் உன்னைப் பார்க்கும் வரை (நம்ப மாட்டோம்)” என்ற மக்களுக்குச் சிரித்துக் காட்சியளித்த இறைவன்



After life




“நாங்கள் உன்னைப் பார்க்கும் வரை (நம்ப மாட்டோம்)” என்ற மக்களுக்குச் சிரித்துக் காட்சியளித்த இறைவன்



அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் (“உங்களில் யாரும் அங்கு -நரகத்திற்கு- வராமல் இருக்க முடியாது” எனும் (19:71ஆவது) வசனத்தில் இடம்பெற்றுள்ள) “வருதல்” பற்றிக் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்: மறுமை நாளில் நாம் இப்படி இப்படி -அதாவது எல்லா மக்களுக்கும் மேல் (உயரமான குன்றின் மீது)- வருவோம். அப்போது ஒவ்வொரு சமுதாயத்தாரும் அவரவர் தெய்வச் சிலைகளுடனும் அவர்கள் வழிபட்டுவந்தவையுடனும் அழைக்கப்படுவர்.

முதலில் முதல் சமுதாயம், அடுத்து அதற்கடுத்த சமுதாயம் (என வரிசை முறையுடன் அழைக்கப்படுவார்கள்). பிறகு நம்மிடம் நம் இறைவன் வந்து “நீங்கள் யாரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறீர்கள்?” என்று கேட்பான். அப்போது (ஓரிறை நம்பிக்கையுள்ள) மக்கள், “நாங்கள் எங்கள் இறைவனை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்” என்று பதிலளிப்பார்கள். உடனே, அவன், “நான்தான் உங்கள் இறைவன்” என்பான். மக்கள் “நாங்கள் உன்னை (நேரடியாகப்) பார்க்காதவரை (உறுதி கொள்ளமாட்டோம்)” என்று கூறுவார்கள்.

ஆகவே, இறைவன் சிரித்தபடி அவர்களிடையே காட்சியளிப்பான். அவர்களை அழைத்துக்கொண்டு நடப்பான். அவர்களும் அவனைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அப்போது அவர்களிலுள்ள நம்பிக்கையாளர் (முஃமின்), நயவஞ்சகர் (முனாஃபிக்) ஆகிய ஒவ்வொருவருக்கும் ஓர் ஒளி வழங்கப்படும். அவர்கள் அந்த ஒளியைப் பின்தொடர்ந்து செல்வார்கள். நரகத்தின் (மேல் அமைக்கப்பட்டிருக்கும்) பாலத்தின் மீது கொக்கிகளும் முட்களும் இருக்கும். அவை அல்லாஹ் நாடிய சிலரை (அவரவர் தீமைகளுக்கேற்ப) கவ்விப் பிடிக்கும்.

பிறகு நயவஞ்சகர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஒளி அணைக்கப்பட்டுவிடும். அதன் பிறகு (அந்தப் பாலத்தைக் கடந்து) நம்பிக்கையாளர்கள் மட்டும் தப்பிச்செல்வார்கள். (அவர்களில்) தப்பிச்செல்லும் முதல் கூட்டத்தாரின் முகங்கள் பௌர்ணமி இரவின் முழு நிலவைப் போன்று ஒளிரும்; அவர்கள் எழுபதாயிரம் பேர் இருப்பர்; அவர்களிடம் எந்த விசாரணையும் நடத்தப்படாது. பிறகு அவர்களைத் தொடர்ந்துவரும் கூட்டத்தார் வானத்துத் தாரகைகள் போன்று ஜொலிப்பர். இவ்வாறே அடுத்தடுத்து வருபவர்களும் (அவர்களது நன்மைகளுக்கேற்ப இலங்குவர்).

பிறகு பரிந்துரை (ஷஃபாஅத்) நடைபெறும். “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை” (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று கூறிய எவரது உள்ளத்தில் வாற்கோதுமையளவு நன்மை உள்ளதோ அவர் நரகத்திலிருந்து வெளியேறும்வரை (பரிந்துரைக்கு அனுமதி பெற்றவர்கள்) பரிந்துரைப்பார்கள். அ(ப்போது நரகத்திலிருந்து வெளியேற்றப்படுப)வர்கள் சொர்க்கத்தின் முற்றத்தில் வைக்கப்படுவார்கள். அவர்கள்மீது சொர்க்கவாசிகள் (ஜீவ) நீரைத் தெளிப்பார்கள். முடிவில் வெள்ளத்தில் வரும் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று (பொலிவுடன்) அவர்கள் எழுவார்கள்.

அத்தகையவர் மீதிருந்த தீக்காயங்கள் மறைந்துவிடும். பிறகு அவர் தமக்கு இந்த உலகமும் இன்னும் அதைப் போன்று பத்து மடங்கும் (சொர்க்கத்தில் தமக்குரியதாக) ஆக்கப்படும்வரை வேண்டிக்கொண்டேயிருப்பார்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல் – (முஸ்லிம்: 316)

மறுமை நாளில் மக்கள் தங்கள் இறைவனை எதிர்பார்த்து நிற்கும் அந்தக் காட்சியில் ஒரு நுட்பமான பாடம் மறைந்திருக்கிறது. இறைவன் தானே வந்து அறிவித்தும் மக்கள் உடனே நம்பவில்லை; அவரைக் கண்ணால் காணும் வரை உறுதி கொள்ளவில்லை. அதற்காக அவர்கள் தண்டிக்கப்படவில்லை; மாறாக, இறைவன் புன்னகைத்தபடியே தன்னை வெளிப்படுத்தினான். உண்மையான விசுவாசிகளின் எச்சரிக்கை உணர்வைக் கூட இறைவன் கருணையுடன்தான் அணுகுகிறான் என்பதை இது காட்டுகிறது.

பாலம் கடக்கும் அந்தக் கட்டத்தில் நயவஞ்சகர்களின் ஒளி மட்டும் அணைந்துபோகிறது; நம்பிக்கையாளர்கள் அவரவர் நன்மைக்கேற்ப முன்னேறிச் செல்கிறார்கள். வெளியே ஒருவரை நம்பிக்கையாளர் என அடையாளம் காட்டுவது எளிது; ஆனால் அந்நாளில் வெளிப்படுவது உள்ளத்தில் மறைந்திருந்த உண்மையான ஒளிதான். இன்று நாம் சேகரிக்க வேண்டியது அதே ஒளியை — வெளித் தோற்றத்தையல்ல, உள்ளத்தின் உண்மையான பிரகாசத்தை.











அல்லாஹ்வின் திருப்பெயரால் .. மேலும் தினசரி ஆன்மீக வழிகாட்டுதலுக்கு சத்திய பாதை இஸ்லாத்தைப் பின்தொடரவும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்