நன்மைகளின் வாசல்கள் !
அல்லாஹ்வின் திருப்பெயரால்....
24. அல்லாஹ் . நினைவுகூரப்படுகின்ற சபையின் சிறப்பு: நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: "எந்த மக்கள் அல்லாஹ்வை நினைவுகூரிக்கொண்டு அமர்ந்திருக்கின் றார்களோ அவர்களை வானவர்கள் வழைத்துக் கொள்கிறார்கள். இறையருள் அவர்களைச் சூழ்ந்து கொள்கிறது. அவர்கள் மீது அமைதி இறங்குகிறது. தன்னிடமுள்ள(வான)வர்களிடம் அல்லாஹ் அவர்களைப் பற்றி எடுத்துரைக்கிறான்." அறிவிப்பவர்: அபூஹுரைரா, அபூஸயீத் (ரலி), நூல்: முஸ்லிம்-2700
25. நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லுதல் : நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் என் மீது ஒரு முறை ஸலாவாத்துச் சொன்னால் அல்லாஹ் அவருக்கு பத்து முறை அருள் புரிகிறான். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: முஸ்லிம்-408
26. உண்ட பின், குடித்த பின் அல்லாஹ்வைப் புகழ்தல்: நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: எதையேனும் சாப்பிட்டு விட்டு அல்லது குடித்து விட்டு அதற்காக அல்லாஹ்வைப் புகழ்கின்ற அடியானை அல்லாஹ் திருப்தியுறுகிறான். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்:
முஸ்லிம்-௨௭௩௪)
உளு மற்றும் தொழுகையின் சிறப்புகள்
27. உளுவை அழகாகச் செய்தல்: நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்: "யார் உளுச் செய்கிறாரோ அதையும் அழகாகச் செய்கிறாரோ அவரது பாவங்கள் அவரது உடம்பிலிருந்து ஏன் அவருடைய நகக்கண்கள் வழியாகக்கூட வெளியேறிவிடுகின்றன." அறிவிப்பவர்:
உஸ்மான் (ரலி), நூல்: முஸ்லிம்-245
28. நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் ஏவியபடி முழுமையாக உளுச் செய்து கடமையான தொழுகைகளை யார் நிறைவேற்றுகிறாரோ அவற்றுக்கு இடையேயுள்ள பாவங்களுக்கு அவை பரிகாரமாக அமைகின்றன.” அறிவிப்பவர்: உஸ்மான் (ரலி), நூல்: முஸ்லிம்-231
29. உளுவுக்குப் பின் திக்ரு சொல்லல்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் உளுச் செய்து விட்டு அதையும் பூரணமாகச் செய்து விட்டு பிறகு 'அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு' என்று கூறினால் அவருக்காக சொர்க்கத்தின் எட்டு வாசல்கள் திறக்கப்படுகின்றன. அவற்றில் அவர் விரும்பிய எந்த வாசல் வழியாகவும் அவர் அதில் நுழையலாம்.
அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: முஸ்லிம்-௨௩௪)
أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
(பொருள்:
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்.)
30. பாங்கு சொல்லும்போது செய்ய வேண்டியது:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நீங்கள் பாங்கு சொல்வதைக் கேட்டால் பாங்கு சொல்பவரைப் போல திருப்பிச் சொல்லுங்கள். பிறகு என் மீது ஸலவாத்துச் சொல்லுங்கள். என் மீது ஒரு முறை ஸலவாத்து சொல் பவருக்கு அல்லாஹ் பத்து முறை அருள் புரிவான். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: முஸ்லிம் - 384
('ஹய்ய அலஸ் ஸலா, ஹய்ய அலல் ஃபலா' என்று சொல்லும் நாம் 'லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்' என்று சொல்ல வேண்டும். இதற்கு ஆதாரம் உள்ளது.)
ஸலவாத்து: அல்லாஹும்ம ஸல்லி அலா
முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம் இன்ன ஹமீதும் மஜீத் அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம் வஅலா ஆலி இப்ராஹீம் இன்ன ஹமீதும் மஜீத்.
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاَوهِيمَ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَّى آلَكَ مُحَالَى عَلَى إِبۡرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
(பொருள்: இறவைா! முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும்
அவர்களது குடும்பத்தினர் மீதும் நீ அருள் புரிவாயாக. இப்ராஹீம் (அலை) அவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தினர் மீதும் நீ அருள் புரிந்தது போன்று. நீ புகழுக்கும் மகத்துவத்திற்கும் உரியவன். இறவைா! முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தினர் மீதும் நீ பரகத் செய்வாயாக. இப்ராஹீம் (அலை) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர் மீதும் நீ பரகத் செய்தது போன்று. நீ புகழுக்கும் மாட்சிமைக்கும் உரியவன்.)
81. பாங்கு சொல்வதைக் கேட்கும்போது ஓதும் துஆ:
நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: "பாங்கு சொல்வதைக் கேட்கும் போது, 'அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவதித் தாம்மதி வஸ்ஸலாத்தில் காயிமதி ஆத்தி முஹம்மதனில் வஸீலத வல்ஃபழீலத வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதனில்லதீ வஅத்தஹு' என்று யார் கூறுகிறாரோ மறுமையில் அவருக்கு எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி), நூல்:
புகாரி-614
اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدَ بِالْوَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُوْدَ وَالَّذِي وَعَدتُهُ
(பொருள்: இறவைா! இந்த முழுமையான அழைப்பு
மற்றும் நிலையான தொழுகையின் இரட்சகனே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்குப் பிரத்தியேக நெருக்கத்தையும் சிறப்பையும் வழங்குவாயாக. மேலும் 'மகாம் மஹ்மூத்' எனும் புகழுக்குரியதோர் இடத்தில் அவர்களை எழுப்புவாயாக. அவ்வாறே நீ வாக்குறுதி அளித்துள்ளாய்.)
82. பாங்கு சொல்வதன் சிறப்பு: நபி (ஸல்)அவர்கள்
கூறினார்கள்: "பாங்கு சொல்பவரின் பாங்கு சப்தத்தைக் கேட்கின்ற ஜின், மனிதன் வேறு எதுவாக இருந்தாலும் மறுமையில் அவருக்காக சாட்சி சொல்லும்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூல்:
புகாரி-609
83. பள்ளிவாசல் கட்டுதல்: உஸ்மான்(ரலி)அவர்கள்
நபி (ஸல்)அவர்களின் பள்ளியை விரிவுபடுத்தியபோது 'நீங்கள் மிகவும் விரிவுபடுத்திவிட்டீர்கள்' என்று மக்கள் அவர்களிடம் ஆட்சேபணை செய்தார்கள். அதற்கு "அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி யார் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அது போன்ற ஒன்றைச்சொர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான்" என்று நபி(ஸல்)அவர்கள் கூறக் கேட்டுள்ளேன் என உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உஸ்மான் (ரலி), நூல்: புகாரி-450, முஸ்லிம் - 533
34. இமாமுடன் ஆமீன் சொல்லுதல்: நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்: "இமாம் ஆமீன் கூறும்போது நீங்களும் ஆமீன் கூறுங்கள். ஏனெனில் எவருடைய ஆமீன் மலக்குகள் கூறும் ஆமீனுடன் இணைந்து விடுகின்றதோ அவரது முன்பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன." அறிவிப்பவர்: ஆபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி-780, முஸ்லிம்-410
35. தொழுகைக்காக விரைந்து செல்லுதல்: நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: "...தொழுகையை ஆரம்ப நேரத்தில் நிறைவேற்றுவதில் உள்ள நன்மையை அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள்." அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), புகாரி-615, முஸ்லிம்-437
36. வீட்டில் உளுச் செய்து விட்டு நடந்து பள்ளிக்குச் செல்லல்: நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: "யார் தமது வீட்டில் உளுச் செய்துவிட்டு அல்லாஹ்வின் கடமைகளில் (ஐவேளை தொழுகைகளில்)ஒன்றை நிறைவேற்றுவதற்காக இறையில்லங்களில் ஒன்றுக்கு நடந்து செல்கிறாரோ அவர் எடுத்து வைக்கின்ற எட்டுக்களில் ஒன்று ஒரு பாவத்தை அழிக்கிறது. மற்றொன்று ஒரு அந்தஸ்தை உயர்த்துகிறது."
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: முஸ்லிம்-666
37. பள்ளிவாசலுக்கு அதிக தூதரம் நடந்து செல்லுதல்:"எதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அழித்து பதவிகளை உயர்த்துவானோ அக்காரியங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என நபி (ஸல்) கேட்டார்கள். அதற்குத் தோழர்கள் 'அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள்' என்றனர். உடனே நபி (ஸல்) அவர்கள், "சிரமமான நேரங்களிலும் உளுவைப் பூரணமாகச் செய்வது, பள்ளிவாசல்களுக்கு அதிக தூரம் நடந்து செல்வது, ஒரு தொழுகையைத் தொழுது விட்டு மறுதொழுகையை எதிர்பார்ப்பது. இது தான் எல்லையைப் பாதுகாப்பது, இது தான் எல்லையைப் பாதுகாப்பது " என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்-251
38. நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: "ஒருவர் காலை யிலோ மாலையிலோ பள்ளிவாசலுக்குச் சென்றால், அல்லாஹ் அவருக்காக அவர் காலையிலும் மாலை யிலும் செல்லும்போதெல்லாம் சொர்க்கத்தில் உபசரிப்பை ஒரு தயார் செய்கிறான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி-662,
முஸ்லிம்-௬௬௯)
39. வழமையான சுன்னத்துகளைப் பேணல்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிமான அடியான் ஒரு நாளைக்கு உபரியாக பன்னிரண்டு ரக்அத்துகள் அல்லாஹ்வுக்காகத் தொழுதால் அல்லாஹ் அவனுக்காக சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுவான்.
அறிவிப்பவர்: உம்மு ஹபீபா(ரலி), நூல்: முஸ்லிம்-728
40. இரவுத் தொழுகை: 'கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை எது?' என்று நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டபோது, "கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை நடு இரவில் தொழுவதாகும்” என பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: முஸ்லிம்-1163
41. இஷா மற்றும் சுப்ஹுத் தொழுகைகளை ஜமாஅத்துடன் நிறைவேற்றுதல்: நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்: "இஷாவை ஜமாஅத்துடன் தொழுதவர் பாதி இரவு வரை நின்று வணங்கியவர் போலாவார். சுப்ஹை ஜமாஅத்துடன் தொழுதவர் இரவு முழுவதும் நின்று வணங்கியவர் போலாவார்."
அறிவிப்பவர்: உஸமான் (ரலி), நூல்: முஸ்லிம்-656
42. அழகிய முறையில் உளுச் செய்து வீட்டு ஜும்ஆவுக்கு வருதல், உரையை அமைதியாக செவி தாழ்த்திக் கேட்டல்: நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: "யார் உளுச் செய்து அதையும் அழகிய முறையில் செய்து பிறகு ஜும்ஆவுக்கு வந்து, உரையை அமைதியாக செவி தாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்காக அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் கூடுதலாக இன்னும் மூன்று நாட்களுக்கும் இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.” அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம்-857
43. ஜும்ஆவுக்கு முன்னேரத்தில் வருதல்: நபி(ஸல்)
அவர்கள் கூறினார்கள்: "ஜும்ஆ நாள் வந்து விட்டால் வானவர்கள் பள்ளியின் நுழைவாயிலில் நின்று கொண்டு முதலில் வருபவரையும் அதைத் தொடர்ந்து வருபவர்களையும் வரிசைப்படி பதிவு செய்கிறார்கள். முதலில் வருபவர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவர் போலவும் அதற்கடுத்து வருபவர் மாட்டைக் குர்பானி கொடுத்தவரைப் போலவும் அதன் பிறகு வருபவர் ஆட்டையும் அதன் பிறகு வருபவர் கோழியையும் அதன் பிறகு வருபவர் முட்டையையும் குர்பானி கொடுத்தவர் போலவுமாவார். இமாம் வந்து விட்டால் வானவர்கள் தங்கள் ஏடுகளைச் சுருட்டிவிட்டு சொற்பொழிவுகளைக் கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி-929, முஸ்லிம்-850
44. ஜனாஸா தொழுகையும் அதன் நல்லடக்கத்தில் கலந்து கொள்தலும்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஜனாஸாவில் அதற்குத் தொழுகை நடத்தப்படும் வரை யார் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு கீராத் அளவு நன்மை உண்டு. அதனை அடக்கம் செய்யப்படும் வரை யார் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு கீராத் அளவு நன்மை உண்டு. 'இரண்டு கீராத் என்றால் என்ன?' என்று வினவப்பட்டது. அதற்கு நபி(ஸல்)அவர்கள் "இரண்டு மிகப் பெரிய மலைகள் போன்றாகும்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்-945
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!