சிறந்த முஃமினின் அடையாளங்கள்
ஒருவர் முதலில் சிறந்த முஃமினாக இருந்தால் அவரால் அடுத்து இறைநேசராக மாற முடியும். அந்த வகையில் சிறந்த முஃமினுக்காக சில அடையாளங்களை குர்ஆன் வசனங்களில் அடிப்படையில்...
1.சிறந்த முஃமின்கள் வணக்க வழிபாடுகளை உள்ளச்சத்துடனும் ஈடுபாட்டுடனும் நிறைவேற்றுவார்கள்
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ (1) الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ (2) المؤمنون
பின்வரும் படித்தரங்களில் உயர்ந்த படித்தரங்களில் உள்ளதாக இறைநேசர்களின் தொழுகை இருக்கும்
அல்லாமா இப்னுல் கைய்யிம் ரஹ் அவர்கள் கூறியுள்ளார்கள். தொழுகையாளிகள் ஐந்து வகையினர். 1.தொழுகையில் அநியாயக்காரர்கள் இவர்கள் விட்டு விட்டு தொழுவார்கள். அல்லது ஜும்ஆ ஈத் ஆகிய முக்கிய தினங்களில் மட்டுமே தொழுவார்கள். தொழுகை தவறியதற்காக கவலைப்பட மாட்டார்கள். இவர்களுக்கு அல்லாஹ்விடம் கடுமையான தண்டனை உண்டு. 2.இவர்கள் தவறாமல் தொழுபவர்கள். பாங்கு சொன்னவுடன் மஸ்ஜிதுக்கு வருபவர்கள்.எனினும் தொழ ஆரம்பித்தால் அதை முடிக்கும் வரை சிந்தனைகள் வெளியே இருக்கும். அதை கட்டுப்படுத்த எந்த முயற்சியும் செய்ய மாட்டார்கள். இவர்களும் மிகக் கடுமையாக அல்லாஹ்விடம் விசாரிக்கப்படுவார்கள். 3.இவர்களும் தவறாமல் தொழுபவர்கள் தான். இவர்களுக்கு தொழுகையில் வேறு சிந்தனைகள் சில நேரம் வரும். எனினும் அதை கட்டுப்படுத்த முடிந்த வரை முயற்சிப்பார்கள். இவர்களுக்கு தொழுகையின் நன்மைகள் கிடைக்கா விட்டாலும் இவர்களின் சிறு பாவங்கள் மன்னிக்கப்படலாம். 4.இவர்களும் தொழுகையாளிகள் தான். ஆனால் முழுக்க முழுக்க தொழுகையில் வெளி சிந்தனைகள் இன்றி கவனமாக தொழுவார்கள். இவர்கள் தான் தொழுகைக்கான நன்மைகள் வழங்கப்படுபவர்கள். 5.இவர்கள் இறைநேசர்கள் இவர்கள் தொழ ஆரம்பித்தால் அல்லாஹ்வின் அன்பில் முற்றிலுமாக மூழ்கி அல்லாஹ் தன் முன் இருப்பது போன்று தொழுவார்கள் இவர்களே மற்ற அனைவரையும் விட மேலானவர்கள்- நூல் வாபிலுஸ் ஸய்யிப்
முனாஃபிக்குகளின் தொழுகை முஃமின்களின் தொழுகைக்கு நேர் மாற்றமாக இருக்கும்
நிஃபாக் உள்ளவர்களுக்கு இஷாவும் ஃபஜ்ரும் மிகவும் சிரமமான தொழுகைகள். உண்மையில் அந்த இரண்டு தொழுகைகளிலும் எவ்வளவு நன்மைகள் உள்ளது என அவர்கள் அறிந்தால் தவழ்ந்தேனும் வந்து விடுவார்கள். நான் தொழ வைப்பதற்கு யாரையேனும் பொறுப்புச் சாட்டி விட்டு என்னோடு சில வாலிபர்களை அழைத்துக் கொண்டு யாரெல்லாம் தொழ வரவில்லையோ அவர்களின் வீடுகளை எரிக்க என் மனம் நாடுகிறது என்றார்கள்.
விளக்கம்- அக்காலத்தில் மின்சாரம் இல்லாததால் மஃரிப் ஆகி விட்டாலே மனிதர்கள் வீடுகளை விட்டும் வெளியே வர மாட்டார்கள். உணவு உண்டு விட்டுத் தூங்கி விடுவார்கள்.
2. சிறந்த முஃமின்கள் வீணான பொழுது போக்கு விஷயங்களில் ஈடுபட மாட்டார்கள்
وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ (3) المؤمنون
மது அருந்துவது எவ்வாறு அல்லாஹ்வின் நினைவை விட்டும் நம்மை அப்புறப்படுத்துமோ
அதுபோல வீண் விளையாட்டுக்களும் அல்லாஹ்வின் நினைவை விட்டும் நம்மை அப்புறப்படுத்தும்.
அதனால் தான் மதுவையும் வீண் விளையாட்டையும் அடுத்தடுத்துக் கூறியுள்ளான்
ياأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنْصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (90) إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ (91)المائدة-قد جمع الله تعالى بين الخمر والميسر في التحريم ووصفهما جميعا بأنهما يوقعان العداوة والبغضاء بين الناس ويصدان عن ذكر الله وعن الصلاة (تفسير القرطبي)
அல்லாஹ்வின் நினைவை மறக்கடிக்கச் செய்யும் அத்தனை விளையாட்டுகளும் சூதாட்டங்களாகும்
இறை வணக்கத்தை மறக்கடிக்கச் செய்யும் ஒவ்வொரு விளையாட்டும் வீணாணது என்ற தலைப்பில் புஹாரீ இமாம் ஒரு பாடத்தையே கொண்டு வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
وَقَالَ الْقَاسِم بْن مُحَمَّد مَا أَلْهَى عَنْ ذِكْر اللَّه وَعَنْ الصَّلَاة فَهُوَ مِنْ الْمَيْسِر (تفسير ابن كثير)
3.சிறந்த முஃமின்கள் ஜகாத்தையும் முறையாக நிறைவேற்றி உபரியான தர்மங்களையும் செய்வார்கள்
وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ (4) المؤمنون
4.சிறந்த முஃமின்கள் கற்பொழுக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ (5) إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ (6) المؤمنون
கற்பொழுக்கத்தைப் பாதுகாத்து உள்ளத்தைப் பக்குவப் படுத்துவது சாதாரண விஷயமல்ல. படிப்படியாகத்தான் முடியும்
உள்ளம் என்பது ஒரு கண்ணாடி என்பார்கள் அந்தக் கண்ணாடி எவ்வளவு அழுக்காக இருக்கிறதோ அந்த அளவுக்கு எதிரில் உள்ள உருவம் மங்கலாகவே தெரியும். அதேபோல் ஒருவரின் உள்ளம் மாசு பட்டிருந்தால் அவர் தன்னைப் போலவே மற்றவர்களையும் பார்ப்பார். எவர் மீதும் நல்லெண்ணம் கொள்ள மாட்டார். ஆகவே கல்பு என்ற கண்ணாடியை சிறுவயதில் இருந்தே சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் ஒரு கண்ணாடியை சுமார் 10 வருடங்களாக துடைக்காமல் இருந்து அதன் பின்பு அதை எடுத்து ஒரே நாளில் எப்படியாவது துடைத்து சுத்தமாக்கி விட வேண்டும் என்று நினைத்து, என்ன தான் கஷ்டப்பட்டு துடைத்தாலும் அந்த மங்கலான நிறம் மாறுவது கடினம். அதேபோல் இன்றைக்கு சிலர் குறிப்பிட்ட வயதைக் கடந்த பின்பு முழு இபாதத்தில் ஈடுபடலாம் என்று எண்ணுவர். அது பலர்களுக்கு முழுமையான பலனை தருவதில்லை.
(கற்பு நெறிக்கு மாற்றமான) பாவங்கள் பல பாவங்களைப் பயிரிடு
இமாம் இப்னுல் கைய்யிம் ரஹ் அவர்கள் கூறியுள்ளார்கள். சில பாவங்கள் மற்ற பாவங்களைப் பயிரிடும். பாவங்கள் என்ற பல சந்ததிகளை உருவாக்கும். ஒரு பாவத்தைச் செய்தவன் அதைப் பிரிய முடியாத அளவுக்கு அடுத்தடுத்த பாவங்களின் மீது ஈர்க்கப்படுவான். எனவே தான் முன்னோர்களில் ஒருவர் கூறும்போது தவ்பா செய்யாத பாவத்திற்கு அல்லாஹ் தரும் தண்டனை அது போன்றதை மீண்டும் செய்ய வைப்பதாகும். அதேபோல் நன்மையான காரியத்திற்கு அல்லாஹ் தரும் பிரதிபலன் அதுபோன்ற நன்மையை செய்ய வைப்பதாகும் என்பார்.
(எனவே பாவங்கள் என்பதும் நன்மைகள் என்பதும் நாடகங்களில் வரும் தொடர்களைப் போன்றாகும்.) ஒரு நன்மையை ஒருவன் செய்து விட்டால் அடுத்த நன்மை அவனிடம் என்னையும் நீ செய் என்று கூறும். அதையும் அவன் செய்து விட்டால் அடுத்த மூன்றாவது நன்மை என்னையும் நீ செய் என்று கூறும். இதனால் இலாபங்கள் அதிகரிக்கும். அதேபோல் ஒரு பாவத்தை ஒருவன் செய்து விட்டால் அடுத்த பாவம் அவனிடம் என்னையும் நீ செய் என்று கூறும். அதையும் அவன் செய்து விட்டால் அடுத்த மூன்றாவது பாவம் என்னையும் நீ செய் என்று கூறும்.ஒவ்வொரு பாவமும் ஒவ்வொரு நன்மையும் அதுபோன்றதை தன் பக்கம் ஈர்க்கக்கூடிய (காந்தம்) போலவே செயல்படும். தண்ணீரை விட்டு வெளியே எடுக்கப்பட்ட மீன் மீண்டும் தண்ணீருக்குள்ளேயே இருப்பதற்கு எப்படித் துடிக்குமோ அது போன்று நன்மை செய்தவன் மீண்டும் நன்மை செய்ய துடிப்பான். பாவம் செய்தவன் பாவம் செய்யத் துடிப்பான்.இதனால் தான் ஒருவன் பாவத்தை விட்டும் விலகி நன்மை செய்ய நாடும்போது அவன் சிரமப்படுகிறான். அதற்காக அவன் தேடும் வழிகள் கண்களுக்கு மறைக்கப்படுகிறது. ஷைத்தான் பல இடையூறுகள் செய்வான். வேறு வழியின்றி மீண்டும் அவன் பாவத்திற்குத் திரும்புகிறான். ஆனால் அந்த சிரமங்களையும் மீறி அவன் நன்மைகளைச் செய்யும்போது குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் தான் அவன் அங்கீகரிக்கப்படுகிறான். எத்தனையோ பாவிகள் அவர்கள் செய்யும் பாவத்தை தொடர்ந்து செய்வார்கள். அதனால் இன்பத்திற்கு பதிலாக துன்பத்தையே அனுபவிப்பார்கள். (சாராயம் குடித்தே நான் செத்தாலும் சரி... நான் குடிப்பேன் என்பது போல.) ஆனாலும் அந்தப் பாவத்தை விட மாட்டார்கள்.
5.சிறந்த முஃமின்கள் அமானிதம் பேணுபவர்களாக இருப்பார்கள்.
وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ (8) المؤمنون
இறுதி நாள் நெருக்கத்தில் நம்பகத்தன்மை தான் முதலில் மக்களிடமிருந்து எடுக்கப்படும்
தீனைக் கடைபிடிக்கும் மக்களிடமிருந்து முதலில் அமானிதம் இல்லாமல் போகும். அதன் பின்பு தொழுகையும் இல்லாமல் போகும். சிலர் தொழுகையை சரியாக நிறைவேற்றுவார்கள் ஆனால் அவர்களிடம் தீனின் மற்றொரு பங்கு (அமானிதத்தை முறையாக நிறைவேற்றுதல்) என்பது இருக்காது
அமானிதம் என்பதற்கு நம்மிடம் ஒப்படைத்ததை அப்படியே திருப்பித் தருவது உட்பட விரிவான பொருள் உண்டு
அப்துல்லாஹ் இப்னு ஸலாம் ரழி அவர்களிடம் ஒருவர் ஆயிரத்து இருநூறு ஊகியா தங்கத்தைக் கொடுத்து வைத்தார். அதை அவர் கேட்கும்போது அப்படியே திருப்பித் தந்தார்கள். ஒரு ஊகியா என்பது 38 கிராம். ஆனால் கஃப் இப்னு அஷ்ரஃபிடம் ஒரு தீனாரை ஒருவர் கொடுத்து வைத்து திரும்பக் கேட்டபோது அவன் நீ தரவில்லை என மறுத்து விட்டான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளம் மூன்று. அவன் பேசினால் பொய் பேசுவான். வாக்களித்தால் மாறு செய்வான். நம்பப்பட்டால் மோசடி செய்வான். நூல்: புகாரீ (33),
ஹிஜ்ரத் புறப்படும்போது நபி ஸல் அவர்கள் ஆபத்தான சூழ்நிலையிலும் அலீ ரழி அவர்களை மக்காவில் விட்டுச் சென்ற காரணம் அமானிதங்களை அவரவரிடம் ஒப்படைப்பதற்குத்தான்.
இந்த சிறுவர்களின் ஏழாவது தலைமுறையில் வாழ்ந்த தந்தை அமானிதத்தைப் பேணிப்பாதுகாப்பதில் மக்களிடம் சிறந்து விளங்கினார். அவரை நம்பி மக்கள் அவரிடம் எதையும் ஒப்படைப்பார்கள். அவர் சிறந்த நல்லடியாராக இருந்ததால் அவரது சந்ததியில் வந்த இந்த அநாதைச் சிறுவர்களின் சொத்தை கிழ்ர் அலை மூலம் அல்லாஹ் பாதுகாத்தான்.
ஒரு மனிதரை சாட்சிக்காக உமர் ரழி அவர்கள் அழைப்பதாக இருந்தார்கள். அதற்கு முன்பு அவரைப் பற்றி மற்றொருவரிடம் விசாரித்தார்கள். அப்போது அவர் அந்த மனிதரைப் பற்றி நல்ல விதமாக கூறினார். அப்போது உமர் ரழி அவர்கள் எதை வைத்து நல்லவர் என்று அவரைக் கூறுகிறீர்கள் அவருக்கு பக்கத்து வீட்டில் வசித்தீரா என்று கேட்க, அவர் இல்லை என்றார். அவரோடு கொடுக்கல் வாங்கல் செய்துள்ளீரா என்று கேட்க, அவர் இல்லை என்றார் அவரோடு பிரயாணம் செய்துள்ளீரா என்று கேட்க, அவர் இல்லை என்றார். அப்போது உமர் ரழி கூறினார்கள். அப்படியானால் அவரைப் பற்றி உனக்குத் தெரியவில்லை என்று கூறினார்கள் மற்றொரு அறிவிப்பில் உமர் ரழி அவர்கள் அந்த மனிதர் மஸ்ஜிதில் தொழுவதைப் பார்த்து விட்டு வந்து அவரைப் பற்றி நல்லவர் என்று நீங்கள் கூறுவதை ஏற்க முடியாது என்று கூறியதாக வந்துள்ளது
இறைநேசர்கள் பணிவுடன் பூமியில் நடப்பார்கள்
وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا
பணிவு என்பதன் விளக்கம் பெருமை கொள்ளாமல் நடந்து செல்வது என்பதாகும். நோஞ்சான் மாதிரி நடந்து செல்வதல்ல
நபி ஸல் நடந்து வந்தால் மேட்டில் இருந்து பள்ளத்தை நோக்கி நடந்து வருவது போன்று கம்பீரமாக இருக்கும்
உமர் ரழி அவர்கள் ஒரு வாலிபரைப் பார்த்தார்கள். மிகவும் பலவீனமானவரைப் போன்று நடந்து வருவதைக் கண்டு உனக்கு உடல் நிலை சரியில்லையா என்று கேட்க, அதற்கு அவர் இல்லை என்றார். அப்போது உமர் ரழி அவர்கள் சாட்டையைக் காட்டி மிரட்டி ஆரோக்கியமானவனாக நடந்து செல் என்றார்கள்
மடையர்களிடம் வாக்குவாதம் வைத்துக் கொள்ள மாட்டார்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!