அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வியாழன், நவம்பர் 21, 2013

எது சிறந்தது ?உலக செல்வமா ? அல்லது நோயற்ற செல்வமா ?

அல்லாஹ்வின் திருபெயரால் ...

ஒருவர் இந்த உலகத்தில் எந்த நோய் நொடி இல்லாமல் வாழ்கின்றான் என்றால் அவன் தான் பெரும் பாக்கியசாலி . அவனிடத்தில் குறைவாக செல்வம் இருந்தாலும் , அவன் நிறைவாக வாழ முடியும் .
ஒருவர் இந்த உலகத்தில் பெரிய சீமானாக (செல்வந்தராக ) வாழ்கிறான் , அவன் நோயினால் அவதிப்படுகிறான் , பணம் இருந்தும் அவன் விரும்பியதை உண்ண முடியவில்லை , சரியாக உறங்க முடியவில்லை .பணம் இருந்தும் என்ன பலன் ?


மனிதனுக்கு பணமும் தேவை மன அமைதியும் தேவை ! ஒருவருக்கு ஏதாவது ஒரு நோய் வந்து விட்டால் ,அவனுக்கு மன அமைதி போய்விடும் நிம்மதியாக உண்ண முடியாது ,உறங்க முடியாது . அவனுடைய குடும்பத்தாருக்கும் சந்தோசம் இருக்காது நிம்மதியின்றி அவர்கள் காலத்தை கழிப்பார்கள்.
செல்வத்திலே பெரிய செல்வம் நோயற்ற செல்வம்தான் ! பெரும்பாலும் மக்கள்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யும்போது ,அவர்கள் இறைவனிடம் கோரிக்கை வைப்பது " எங்களுக்கு நிறைய செல்வம் தர வேண்டும்  என்றுதான் பிரார்த்தனை செய்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை ,எதார்த்தமும் கூட.

நித்திய ஜீவியானவனே , நிலையானவனே உன் புனிதமான கிருபையின் மகிமையால் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் . கண்ணிமைப் பொழுதேனும் என் மனதை (நப்ஸை) நான் நம்பாமலிருக்க கிருபை செய் ! மேலும் எனது கருமங்கள் அனைத்தையும் சீர்படுத்தி என்னைச் சிரெஷ்டனாக்கு.

அல்லாஹ் நீ கொடுப்பதை யாரும் தடுத்து விடமுடியாது . நீ தடுப்பதை யாரும் குடுத்து விடமுடியாது. உன்னால்யின்றி நல்ல அதிஷ்ட்டம் அதை அடைபவனுக்கு பயன் தந்து விடாது .

அல்லாஹ் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் ,அவர்களைச் சேர்ந்தவர்கள் மீதும் உன் நல்லாசியைப் பொழிந்தருள் !

அல்லாஹ் வின் திருநாமத்தால் , அவன் நாமம் நம்மோடு இருக்கும்போது பூமியிலுள்ள எதுவும் வானத்தில் உள்ள எதுவும் நமக்கு எத்தீங்கும் செய்துவிட முடியாது . அவன் சகலவற்றையும் கேட்பவன் ; சகலமும் அறிந்தவன் .

யா அல்லாஹ் ! உன்னால் தேக சுகம் தரப்பட்டோரோடு  சேர்த்து எங்களுக்கும் தேக சுகத்தை தந்தருள் !

துஆவை விட அல்லஹ்விடம் எதுவும் சங்கையானதாக இல்லை என ரசூல் (ஸல்) கூறினார்கள் . ஆதாரம்: திர்மிதி.

செல்வ வளம் என்பது அதிகமான செல்வத்தை பெறுவதல்ல . போதுமென்ற மனதைப் பெறுவதே உண்மையான செல்வமாகும் என ரசூல் (ஸல்) கூறினார்கள் .
ஆதாரம் : புகாரீ ;முஸ்லிம்.

களா என்னும் விதியை மாற்ற கூடியது ஒன்று இருக்கும்மானால் அது தான் தூஆ " என்று ஒரு ஹதீஸின் கருத்து!

நாம் தூஆ மூலம் நோயின் பிடியிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேட முடியும்!

நோயை பற்றி எழுத வேண்டும் என்றால் ஒரு பெரிய கட்டுரை எழுத வேண்டும் . சுர்க்கமான முறையில் உங்களுக்கு இங்கே எழுதி உள்ளேன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!