பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:
ஒருவருக்கு ஒரு உதவி செய்யப்பட்டு அதற்காக உதவி செய்தவரைப் பார்த்து "ஜஸா கலலாஹூ கைரன்" (அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்குவானாக ) என்று கூறினால் , அவர் நெஞ்சார புகழ்ந்தவராவார்.
(அல்ஹதீஸ் )
ஏழைகளைக் கண்டு இரங்குவதும் ,பாமரர்களைக் கண்டு பரிதாப்பபடுவதும் , அரவணைப்பதும் நன்மை என்று கேள்வியுற்றிருக்கின்றோம் . அதேபோல் , ஏழைகளுக்கு கொடுத்து உதவும்பொழுது , அதை அவரிடமோ பிறரிடமோ சொல்லிக்காட்டி அவரது மனதை புண்படுத்த கூடாது . இதனால் உதவியை செய்தபொழுது பெற்ற நன்மையை நாம் இழக்க நேரிடும்.
ஆனால் , மனம் இயைந்து தயாளம் காட்டிய பெருந்தகையாலர்களை அவர்கள் மூலம் உதவி பெற்றவர்களும் வாழ்வில் உயர்வு அடைந்தவர்களும் மறந்து போகலாம் ? நன்றி மறந்து நடக்கலாமா ? என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
மக்களுக்கு நன்றி பாராட்டாதவன் , அல்லாஹ்வுக்கு நன்றி பாராட்டாதவன் என்ற நபிமொழியை சற்று நேரம் நின்று ஆழ்ந்து கவனியுங்கள் .
செய் நன்றியை மறக்க கூடாது என்ற மொட்டையான கருத்து மட்டும் இந்த ஹதீஸில் இல்லை. நன்றிக்குரியவர் அவரது காலம் உள்ளளவும் அந்நன்றியை மறக்க கூடாது என்பதுதான் இந்த ஹதீஸின் முழு நிறைவான கருத்தாகும்.
பண உதவியாக இருக்கட்டும்! பாதுக்காப்பு உதவியாக இருக்கட்டும்! அற்ப உதவியாக இருக்கட்டும்! யார் நமக்கு உதவி புரிந்தார்களோ அவர்களைப் பற்றிய நினைவு நம் மனதில் என்றும் நெஞ்சார இருக்க வேண்டும்.
ஒரு கட்டத்தில் செல்வமும் செல்வாக்கும் நம்மிடம் குவிந்து வரும் பொழுதும் பட்டமும் , பதவியும் சூழ்ந்து கொள்ளும் பொழுதும் கடந்த காலத்தை மறந்து , ஆரம்ப நினைவுகளையும் பூர்வீக பந்தங்களையும் நாம் உடைத்து எரிந்து விட கூடாது.
"இன்னாருக்கு நான் உதவி செய்தேன் என்று பிறரிடம் சொல்லிக் காண்பிப்பது ,உதவி பெற்றவர் நன்றி கெட்டவராக இருக்கிறார் என்று சொல்லுவது அது மிக பெரிய தவறு , மேலே குரிப்பிட்டத்து போல ஆகும்.
யாரவது உங்களுக்கு ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உதவி செய்தார் என்றால் அவருக்கு மேலே உள்ள ஹதீஸின் படி நன்றி கூறிவிடுங்கள் ! " வழக்கத்துக்கு மாறாக " அதாவது நன்றி அல்லது தேங்க்ஸ் என்றோ சொல்லாமல் . " ஜஸா கல்லாஹூகைரன் " என்றே சொல்லுங்கள் .அதன் நன்மையை அறிந்து கொள்ளுங்கள்!
நன்றி அல்லது தேங்க்ஸ் சொல்வதினால் எந்த பலனும் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்! நமக்கு பலனும் வேண்டும் ! நன்மையையும் வேண்டும்! ஆகையால் ஹதீசின்ப் படி சொல்வது நன்மை பயக்கும்!
அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!