குரானின் சிறப்புகள் அதை ஓதுவதின் சிறப்புகள்!!
அல்லாஹ் தஆலா கூறுகிறான் :என் நல்லடியார்களுக்கு நற்செய்தி கூறுவீராக !அவர்கள் அல்லாஹ்வின் சொல்லைக் செவித் தாழ்த்திக் கேட்பர்.அதில் அழகானதைப் பின்பற்றுவர் ,அவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தினான் ,அவர்களே தெளிவான அறிவுடையோர் .
அல்லாஹ் தஆலா கூறுகிறான் :என் நல்லடியார்களுக்கு நற்செய்தி கூறுவீராக !அவர்கள் அல்லாஹ்வின் சொல்லைக் செவித் தாழ்த்திக் கேட்பர்.அதில் அழகானதைப் பின்பற்றுவர் ,அவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தினான் ,அவர்களே தெளிவான அறிவுடையோர் .
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி ,தொழுகையை கடைப்பிடித்து அவர்களுக்கு நாம் கொடுத்தவற்றிலிருந்து இரகசியமாகவும் பகிரங்கமாகவும் செலவு செய்கிறார்களோ அத்தகையோர் ,ஒரு போதும் நஷ்டமடையாத வியாபாரத்தை ஆதரவு வைக்கின்றனர் .
பெருமானார் (ஸல் ) அவர்களின் பொன்மொழிகள் :எவர் குர்ஆனில் அதிகமாக ஈடுபடுவதின் காரணமாக என்னைத் திக்ரு செய்வதற்கும் ,என்னிடம் துஆ கேட்பதற்கும் சந்தர்ப்பம் கிடைக்காதோ அவருக்கு துஆ கேட்பவருக்குக் கொடுப்பதைவிட அதிகமாக கொடுப்பேன் ,எல்லாப் படைப்புகளைவிட நான் சிறப்புப் பெற்றிருப்பது போல ,எல்லாச் சொற்களைவிட என்னுடைய சொல் சிறப்பு பொருந்தியதாகும் ,,என்று அல்லாஹ் தஆலா சொன்ன (ஹதீஸின் குத்சியை நபி ஸல் அவர்கள் வாயிலாக ஹஜ்ரத் அபூசஈத் ரலி அவர்கள் அறிவிகிறார்கள் .
நாம் குரானின் சிறப்பை தெரிந்துகொண்டோம் என்றால் அதை ஓதுவதினால் நமக்கு கிடைக்கும் ஈருலக பாக்கியம் நன்மை சிறப்பு அந்த குரான் நமக்கு சிபாரிசு செய்யும் அனைத்தையும் நாம் விளங்கிகொண்டால் இன்ஷாஅல்லாஹ் நாம் தினதொரும் குரானை ஓதுவோம் ,நாம் இந்த குரானை எப்படி விளங்கிகொண்டிர்கிறோம் , ஒவ்வொரு ரமளானிலும் அல்லது நம் வீட்டில் யாரவது இறந்துவிட்டால் அவர்க்காக நாம் குரானை ஓதுவோம் ,சில குடும்ப்பத்தில் ரமலான் மாதத்தில் அவர்களுக்கு ஓத தெரியாதனால் ஹஜ்ரத் மாரை அழைத்து அவர் வீட்டில் ஓத சொல்வார்கள் இப்படிதான் சில குடும்ப்பத்தில் நடக்கிறது ,அவர்கள் ஓதுவதற்கு எந்த முயர்ச்சியும் செய்யமாட்டார்கள் ,ஓதுவதனால் அதிக பலனை பெற முடியும் என்பதை தெரிந்து இருக்கமாட்டார்கள் .
பெருமானார் ஸல் அவர்களின் ஒரு ஹதீஸின் கருத்து :அபூதாரே , குரான் ஓதுவதையும் அல்லாஹுதாலவை திக்ர் செய்வதையும் பேணுதலாகச் செய்து வருவிராக !இந்த அமலால் வானத்தில் உம்மைப் பற்றி நினைவுகூரப்படும் .மேலும் ,இது பூமியில் உமக்கு ஹிதாயத்தின் (நேர்வழியின் )ஒளியாகும் என்று நபி (ஸல் ) அவர்கள் என்னிடம் கூறினார்கள் என்று ஹஜ்ரத் அபூதர் (ரலி ) அவர்கள் அறிவிகிறார்கள் .
பெருமானார் ஸல் அவர்களின் ஒரு ஹதீஸின் கருத்து :அபூதாரே , குரான் ஓதுவதையும் அல்லாஹுதாலவை திக்ர் செய்வதையும் பேணுதலாகச் செய்து வருவிராக !இந்த அமலால் வானத்தில் உம்மைப் பற்றி நினைவுகூரப்படும் .மேலும் ,இது பூமியில் உமக்கு ஹிதாயத்தின் (நேர்வழியின் )ஒளியாகும் என்று நபி (ஸல் ) அவர்கள் என்னிடம் கூறினார்கள் என்று ஹஜ்ரத் அபூதர் (ரலி ) அவர்கள் அறிவிகிறார்கள் .
இப்படித் அதிகமான நபி மொழிகள் இருக்கிறது குரானை பற்றி அதன் சிறப்புகள் .நாம் இந்த குரானை தினதொரும் ஒதிவருவதுடன் அதன் பொருளை விளங்கி வரவேண்டும் ,யார் வீட்டில் சூரா பக்கரா ஓதபடுமோ அவர் வீட்டில் ஷைத்தான் வரமாட்டான் என்ற பெருமானாரின் ஹதீஸின் கருத்து !இன்னும் இதுபோன்ற எத்தனை அல்லாஹ் வின் வசனகளும்,அல்லாஹ் வின் தூதர் நபி (ஸல் ) அவர்களின் பொன்மொழிகள் உள்ளன .
பெருமானார் ஸல் அவர்கள் சொன்னதாக ஒரு ஹதீஸ் :எவரது உள்ளத்தில் புனிதக் குரானின் எந்த பகுதியும் மனனமாக இல்லையோ ,அந்த உள்ளம் பாழடைந்த வீட்டைப் போன்றதாகும் ,,(குடியிருக்கும் மனிதர்களைக் கொண்டு வீடு அழுகும் செழிப்பும் பெறுவது போல புனித குரானை மனனம் செய்வதில் மனித உள்ளத்தில் அழகும் செழிப்பும் உள்ளது )என்று நபி (ஸல் ) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி ) அவர்கள் அறிவிகிறார்கள் .
இந்த ஹதீஸை நாம் எத்தனை பேர் தெரிந்து வைத்துரிப்போம் ? பெருமானார் (ஸல் ) அவர்கள் சொன்னால் அது உண்மை ,இன்னொரு ஹதீஸின் கருத்து: குரானை ஓதி மறந்து விடுப்பவர் நாளை கியாமத் நாளன்று குஷ்ட நோயின் காரணமாகச் தன உறுப்புக்கள் உணமுற்ற நிலையில் அல்லாஹுதாலாவை சந்திப்பார் என்று நபி (ஸல் ) அவர்கள் கூறியதாக ஒரு சகாபிஅறிவிகிறார்கள் .
நம்மில் சிலர் குரானை ஓதி மறந்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் ?இன்ஷாஅல்லாஹ் ,இனி வரும் காலம் நாம் உறுதி எடுத்துகொண்டு நம் வீட்டில் தினதொரும் இந்த புனித குரானை ஓதி நம் பிள்ளைகளையும் ஓத சொல்லி அல்லாஹ் வின் அருளையும் குரானை ஓதுவதின் பலனையும் குர்ஆனில் உள்ள சில சூராக்களை மனனம் செய்ய அல்லாஹு நமக்கு உதவியும் கிருபையும் செய்வானாக !ஆமீன் ...
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!