அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

புதன், அக்டோபர் 17, 2012

ஒரு நல்ல மனைவி அமைவதெல்லாம் ....

ஒரு நல்ல மனைவி அமைவதெல்லாம் ....
நீங்கள் நேசிக்கின்றவற்றிலிருந்து (அல்லாஹ்வுக்காக )நீங்கள் செலவு செய்யும் வரை ,நிச்சயமாக நீங்கள் நன்மையைப் பெற்று கொள்ள மாடீர்கள் ..... (அல்குரான்)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
ஒட்டகங்களில் பயணம் செய்த (அரபுப்) பெண்களிலேயே சிறந்தவர்கள், நல்ல குறைஷிக்குல பெண்களாவர். அவர்கள் குழந்தைகளின் மீது அதிகப் பாசம் கொண்டவர்கள்; தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிக் காப்பவர்கள். 18
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
 அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் உம்முசலமா (ரலி) அறிவிகிறார்கள் :எப்பெண்மணி அவள் கணவன் அவள் மீது திருப்தியாக இருக்கும் நிலையில் மரணமடைகிறாலோ.அவள் சுவர்க்கம் புகுவாள் .ஆதாரம் :(திர்மிதி )
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி) அறிவிகிறார்கள் :உலகம் (சிறிது காலம்) சுகம் பெறப்படு
ம் ஒரு பொருளாகும் .அவ்வாறு சுகம் பெறப்படும் உலக பொருள்களில் மிகச்சிறந்தது ,நல்ல ஸாலி ஹான மனைவியாவாள் .
ஒரு நல்ல மனைவி பற்றி இன்னும் அதிகமான ஹதீஸ்கள் உள்ளன ,அவள் தன் கணவனுக்கு நல்ல முறையில் நடந்து ,அதே நிலையில் அவள் மரணித்தாள் ,அவளுக்கு கிடைக்கும் சொர்க்கம் பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ரொம்ப அழகாக கூறினார்கள் .மனைவியின் நோக்கம் தன் கணவனை திருப்த்தி படுத்த வேண்டும் ,கணவன் ஊரில் இருக்கும் போது அவன் அனுமதி இல்லாமல் ,அவள் நபிலான நோன்பு நோர்க்ககூடாது  என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு ஹதீஸில் கூறி உள்ளார்கள் . அல்லாஹ் தஆலா பெண்களுக்கு ரொம்ப எளிதாக்கி உள்ளான் ,அமல்கள் செய்வதில் . இன்றைய பெண்களின் நிலை எப்படி இருக்கிறது ? அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் தன் கணவன்மார்களிடம் ? சில பெண்கள் இருக்கிறார்கள் அவர்களுடைய கணவன்மார்கள் குறைந்த சம்பளம் வாங்குவார்கள் ,ஆனால் அவர்கள் வரவுக்கு மிஞ்சி செலவு செய்வார்கள் ,கணவனின் வரவுக்கு ஏற்ற செலவு செய்யமாட்டார்கள் ,இதனால் குடும்பத்தில் பிரச்சனை தான் வரும் என்பதில் சந்தேகம் இல்லை . கணவனுக்கு தெரியாமல் கடன் வாங்குவார்கள் இந்த பெண்கள் , வரவுக்கு மீறி செலவு செய்வதினால் ,கடன் தான் மிச்சம் என்பதை சில பெண்கள் புரிந்துகொள்வதில்லை , ஒரு நல்ல மனைவி என்பவள் எப்படி இருக்கவேண்டும் ,அவள் கணவன் எவ்வளவு சம்பாரிகிரானோ ,அதை வைத்து சிக்கனாமாக் செலவு செய்து ,வீண் விரயம் செய்யாமல் இருந்தால் ,நிச்சயமாக அல்லாஹ் அவளுக்கு ,அவனுக்கும் பரக்கத்து செய்வான் .அல்லாஹ் மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும் ,தாழ்த்துவதும் ,உயர்த்துவதும் அல்லாஹ் ,செல்வத்தை கொடுப்பது அல்லாஹ் உங்களுக்கு என்ன சேர வேண்டுமோ அதை ஏற்கனவே அல்லாஹ் வித்தித்து விட்டான் .அல்லாஹ் விடம் பிராத்தனை செய்யுங்கள் ,முயற்சி செயங்கள் .அல்லாஹ் உங்களுக்கு விதித்தது கிடைக்கும் !
ஒருவனுக்கு ஒரு நல்ல மனைவி அமைவது ,அவன் வாழ்க்கையில் சந்தோசம் ,செழிப்பும் இருக்கும் அவனுக்கு சொர்க்கம்தான் .மாறாக ,அவனுக்கு ஒரு கெட்ட மனைவி அமைந்தாள்   ,அவன் நிலை ???
உலக பொருள்களில் மிகச்சிறந்தது ,ஒரு நல்ல சாலிஹான மனைவி என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறி இருக்கிறார்கள் என்பதை ஹதீஸின் மூலமாக தெரிந்து கொண்டோம் !
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் முஆது பின் ஜபல் (ரலி) அறிவிகிறார்கள் :எப்பெண்மணி இவ்வுலகில் தன் கணவனை நோவினையடைச் செய்கிறாளோ அவளை நோக்கி ,சுவர்க்கத்திலுள்ள அம்மனிதனின் ,, ஹூருல் ஈன் மனைவி கூறுவாள் (ஓ! பெண்ணே)அவரை நீ நோவினை செய்யாதே !அல்லாஹ் உன்னை நாசமாக்குவானாக !அவர் உன்னிடத்தில் (சில காலம்) தங்கியிருக்கும் விருந்தாளியாவர் .(அதன் பிறகு) உன்னைவிட்டு பிரிந்து எங்களிடம் வந்து விடுவார் .ஆதாரம்:திர்மிதி)
இந்த ஹதீஸை ரொம்ப கவனமாக பாருங்கம் ! கொஞ்சம் சிந்திக்க வேண்டும் ! சில குடும்பங்களில் மனைவினால் எத்தனை கணவன்மார்கள் நோவினை செய்யபடுகிறார்கள் ,இறுதி காலம் வரை மனைவின் நோவினை ,வேதனை செய்யப்பட்டு அவர்கள் நொந்து நூலாக போகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை ! சில கணவன் மார்கள் அவர்களின் நண்பர்களிடம் சொல்வார்கள் ,என் மனைவிடம் வாழ்வதை விட மரணிப்பது மேல் என்று ,நிம்மதி ல்லை  , கணவன் என்ற மதிப்பு இல்லை ,வாழ்க்கையே போராக உள்ளது என்று சிலர் மனம் விட்டு சொல்பவர்கள் உண்டு .மனைவிக்கும் அதுபோலதான் ,அவளுக்கு ஒரு நல்ல கணவன் அமைய வில்லை என்றால் ,அதுவும் நரகம் தான் தினதோரும் அவள் அவனிடம் செத்து பிழைக்கணும் .ஆண்ணும்,பெண்ணும் இருவரும் வாழ்கையின் நோக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும் ! ஒரு ஆண்ணுக்கு பெண் துணை ,ஒரு பெண்ணுக்கு ஆண் துணை , அல்லாஹ் வின் திருப்தியை அடையத் ஒரு அழகான வழி ,அதுதான் தீனுல் இஸ்லாம் ,அதன்படி இருவரும் வாழ்கையை அமைத்து கொண்டால் ,வெற்றி தான் ,இம்மைக்கும் ,மறுமைக்கும் .பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்ன ஒரு ஹதீஸின் கருத்து : ஒரு பெண்ணை மணக்க (நிக்காஹு செய்ய) அல்லது ஒரு பெண் நான்கு விடயத்துக்காக திருமணம் செய்யபடுகிறாள் ! செல்வம் ,அழகு ,வம்சம் மற்றும் தீன்காக (மார்கத்துகாக) தீனுள்ள பெண்ணை நிக்கஹு செய்துகொள் என்று அண்ணலார் நபி (ஸல்) அவர்கள் அழகாக சொன்னார்கள்.வெற்றி பெறுவதற்கு ஒரு மார்க்க உள்ள நல்ல பெண்ணை திருமணம் செய்வது நன்மை என்பது ஆண்களுக்கு புரியும்! புரிய வேண்டும் ! பெண்களும் தீனுள்ள பெண்களாக மாற வேண்டும் ! சில பெண்கள் இருக்கிறார்கள் அவர்கள் மற்றவரை பார்த்து ,நமக்கும் அவர்களை போன்று இருக்கணும் என்று ஆசைபடகூடிவர்களும் உண்டு ,இன்றைய காலத்தில் , விலை உயர்ந்த செல் போன் ,செல் போன் வேண்டும் என்று அடம் பிடித்து கேட்டு வாங்குபவர்களும் உண்டு , அவளுடைய கணவன் அதிகமாக சம்பாதிப்பார் ,வருமானம் ரொம்ப அதிகம் ,அனால் ,உன் கணவனுக்கு அவரைவிட ரொம்ப ரொம்ப குறைவு ,அவர் வருமானத்துக்கு தகுந்தபடிதான் உனக்கு ஒரு செல் வாங்க முடியும் என்று சில பெண்கள் உணர வேண்டும் ,ஆசைபடுவதெல்லாம் வாங்க முடியாது ,எல்லோருக்கும் ஆசை இருக்கும் ,இருபினும் கூட இருப்பதை வைத்துகொண்டு சந்தோசமாக வாழ வேண்டும் .நிம்மதி பொருளில் இல்லை ,அவரவர் மனதில் இருக்கு ! போது என்ற மனம் இருந்தால் ,அவரே பெரிய பணக்காரர் ! இன்று , சில பெரிய பணக்காரர்கள் நிம்மதியை தேடி அலைகிறார்கள் ,வர்களிடம் பணம் இருக்கு ,ஆனால் அவர்களுக்கு தெரியும் அதில் நிம்மதி இல்லை என்று. சின்ன சின்ன பிரச்சனை போக போக ஒரு பெரிய பிரச்சனையாக மாறிவிடும் ,இதனால் ,கணவனுக்கும், மனைவிக்கும் பிரிவு ஏற்பட (தலாக்கு ) திருமணம் பந்தம் முறிய வாய்ப்பு உண்டு என்பதை பெண்கள்தான் அதிகம் உணர வேண்டும் ! அல்லாஹ் நற்கிருபை செய்வானாக ! ஒரு நல்ல மனைவியாக வாழ ,அவனின் திருப்த்தி கிடைக்க , அதே நிலையில் அவளுக்கு மரணம் வரு என்றால் ,நிச்சயமாக அவள் சுவர்க்கம் புகுவாள் என்று அண்ணலார் நபி பெருமானார் (ஸல்) கூறினார்களே ! இதில் இரு துளி கூட சந்தேகம் இல்லை . ஒருவருக்கு ஒரு நல்ல சாலிஹான மனைவி அமைவது ,அவர் வாழ்க்கை சுவர்க்கம் தான் !மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ,மனது மயங்கி என்ன ,நீங்களும் இறைவனிடம் பிராத்தனை செய்யுங்கள் !!!ஆமீன் ..... www.islam bdmhaja.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!