திக்ரின் சிறப்புகள் !

திக்ரின் சிறப்புகள் !


அல்லாஹு தஆலா கூறுகிறான்:

அல்லாஹ்வின் திக்ரே மிகப் பெரிதாகும் (அல்குர் ஆன் 29:45)

என்னை நினைவு கூறுங்கள்! நான் உங்களை நினைவு கூறுவேன்.(அல்குர் ஆன் 2:152)


நபியே) உம் மனதிற்குள் உன் இரட்சகனைக் காலையிலும் மாலையிலும் பணிந்தும்,அச்சத்துடனும் இரைந்த சொல்லன்றி (மெதுவாகவும்) நீர் நினைவு கூர்வீராக! நீர் பொடு  போக்காளர்களில்  நின்றும் ஆகவேண்டாம்.(அல்குர் ஆன் 7:205


நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்யுங்கள் .(அல்குர் ஆன் 62:10)


முஃமின்களே! அல்லாஹ்வை மிக அதிகமான திக்ராக திக்ர் செய்யுங்கள் காலையிலும், மாலையிலும் அவனைத் தஸ்பீஹ் செய்யுங்கள்.

                                     (அல்குர் ஆன் 33: 41-42)

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அபூ ஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் :இரண்டு சொற்கள் உள்ளன .அவை நாவின் மீது எளிதானவை ;மீஜான் தராசில் கனமானவை ;ரஹ்மானுக்கு மிகப் பிரியமானவை .(அவ்விரண்டு சொர்கலாகிறது)

1.ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி ,2. ஸுப்ஹானல்லாஹில் அளீம்    .
அல்லாஹ்வை புகழ்வதுடன் அவனைத் தூய்மையானவன் எனப்போற்றுகிறேன் .
மாபெரியவனான அல்லாஹ்வைத் தூய்மையானவன் எனப் போற்றுகிறேன் .
              (புகாரி;முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அபூ ஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் :

ஸுப்ஹானல்லஹ் ,வல்ஹம்து  லில்லாஹ் ,வலாஇலாஹ இல்லல்லாஹ், வல்லாஹூ  அக்பர்
என்று நான் கூறுவது ,சூரியன் எத்தன மீது உதிக்கிறதோ அதனை (பூமி பூமியிலுள்ள பொருள்களை)விட மிகப் பிரியமானதாகும்.  (முஸ்லிம்)

திக்ர் மற்றும் தஸ்பீஹ் சமந்தமாக நிறைய  சஹீஹான ஹதீஸ்கள் இருக்கிறது.

இதுபோன்ற விடயங்களில் நீங்கள் சஹீஹான ஹதீஸ்களை பார்க்க வேண்டும் ,இன்று அல்லாஹ்வின் உதவியால்  நிறைய  ஹதீஸின் நூற்கள் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது என்பதை  நாம் அறிவோம் ! சிலர் தவறான முறையில் , எந்த ஆதாரமும் இல்லாமல் கூறுவது நாம் செவி சாய்க்க கூடாது . குர்ஆனை பாருங்கள் ,ஹதீஸை பாருங்கள் . நீங்கள் எந்த நேரமும் ,எந்த இடத்திலும் , எப்படியும் , அல்லாஹ்வை திக்ர் செய்யலாம் !  இதற்க்கு ஒலு செய்யவேண்டும் அவசியம் இல்லை  , தொழுகைக்கும் ,திரு மறை குர்ஆன் ஓதுவதற்கும் ஒலு  அவசியம் என்பது எல்லோரும் அறிந்த விடயம் தான் ! அல்லாஹ்வை அதிகம் அதிகம் தஸ்பீஹ் செய்வது பற்றி மேலே கூறிய அல்லாஹ்வின் வசனம்  போதும்!  பெண்கள் வீட்டில் இருந்தபடி ,வேளையில் ஈடுபட்டுக்கொண்டு அல்லாஹ்வை திக்ரு செய்யலாம் ! இந்த திக்ருக்கு நேரம் காலம் இல்லை , திரு குர்ஆன் ஓதுவதற்கும் நேரம் காலம் இல்லை , பெண்கள்  செய்ய கூடாத ஒரு நேரம் உண்டு ,அது அவர்களுக்கு மாதவிடாய் காலம் , ஆண்களும் ,பெண்களும் குளிப்பு கடமையான நேரத்தில் குர்ஆன் ஓத கூடாது , தோழா  கூடாது ,குளித்து சுத்தம் ஆனா பிறகு அவர்கள் செய்ய முடியும் !

அல்லாஹ் தஆலா மிகவும் அறிந்தவனாக இருக்கிறான்!                

கருத்துகள்