அறிவு ஞானத்தின் சிறப்பு!


அல்லாஹு தஆலா கூறுகிறான்:

(நபியே)நீர் கூறுவீராக !என் இரட்சகனே!எனக்கு அறிவு ஞானத்தை அதிகப்படுத்துவாயாக!
அறிபவர்களும் அறியாதவர்களும் சமமாவார்கள் ? என (நபியே) நீர் கேளும் .
உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும் ,அறிவு ஞானம் கொடுக்கப்பட்டவர்களுக்கும் பல்வேறு அந்தஸ்துகளை அல்லாஹ்  உயர்த்துவான் .
அல்லாஹ்வை அவனின் அடியாகளில் அஞ்சுவதெல்லாம் உலமாக்கள் (அறிவாளிகள்) தாம்.

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக முஆவியா (ரலி) அறிவிக்கிறார்கள்: யாருக்கு அல்லாஹ்  நலவை நாடுகிறானோ அவரை தீனின் (சன்மார்க்கத்தில்)அறிஞராக  ஆக்குகிறான். (புகாரி,முஸ்லிம்)

ஹஜ்ரத் சஹ்ல் பின் ஸஃது (ரலி) அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கூறினார்கள் .அல்லாஹ்வின் மீது ஆணையாக !அல்லாஹ் உம்மைக் கொண்டு ஒருவருக்கு நேர்வழி காட்டுவது ,சிவந்தத ஒட்டகைகள் (உமக்குக்)கிடைப்பதை விடச் சிறந்ததாகும் எனப்பகர்ந்தார்கள் .(புகாரி,முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அப்துல்லாஹ் பின் அம்ரிப்னில் ஆஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்: என்னைப் பற்றி ஒரு செய்தியாக இருந்தாலும் மக்களுக்கு எத்தி வையுங்கள்.பனூஇஸ்ராயீல்கள் கூறும் செய்திகளை அறிவியுங்கள் .அதைப்பற்றி பரவாஇல்லை  .எவர் என்மீது வேண்டுமென்றே பொய் கூறுகிறாரோ அவர் தம் இருப்பிடத்தை  நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும் .(புகாரி)

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அபூ ஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் : யார் அறிவு ஞானத்தை தேடும் பாதையில் நடக்கிறாரோ அல்லாஹ் அவருக்கு சுவனத்தின் பாதையை இலேசாக்கி வைக்கிறான். (முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அபூ ஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: யார் நேர்வழியின் பக்கம் அழைக்கிறாரோ அவருக்கு அந்நேர்வழியை பின்பற்ற கூடியவர்களின்  நற்கூளிகளைப் போன்றவை கிடைக்கும்.அவர்களின் (பின்பற்றுபவர்களின்) நற்கூலிகளில்  எதுவும் குறையாது. (முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அபூ ஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் :ஆதமின் மகன் மரணித்துவிட்டால்  மூன்றைத் தவிர அவனின் அமல்கள் (அனைத்தும்) துண்டித்துவிடும்(தொடர்ந்து நன்மை தரக்கூடிய மூன்று அமல்கலாகிறது) 1.ஸதக்கத்துன் ஜாரியா --தொடர்ந்து நடைபெற்று வரும் தர்மம்  2. பயன்வழங்கும் கல்வி 3. அவருக்காக துஆச் செய்யும் அவரின் நல்லபிள்ளை  .  (முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் நவில தான் செவிமடுத்ததாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) அறிவிக்கிறார்கள்: நம்மிடமிருந்து சில செய்திகளைக் கேட்டு,தான் கேட்டவாறே மற்றவர்களுக்கு எத்திவைத்துவிட்ட மனிதருக்கு அல்லாஹ்  செழிசெழிப்பை  அருள்வானாக .எத்தனையோ செய்தி எத்திவைக்கப்பட்டவர்கள். கேட்பவர்களைவிட அதனை மிகப் பாதுகாப்பார்கள்.
          (திர்மிதி)

இஸ்லாத்தின் கல்வியை கற்பது ,ஆண் ,பெண் மீது கடமை . ஒரு அமல் செய்ய நாடினால்  ,அதனின் கல்வி அவசியம் (அதாவது ஒருவர் தொழ வேண்டும் என்றால்  அவர் அவசியம் தொழுகைப் பற்றி ,ஒழு எப்படி செய்யணும் என்பதை பற்றி அறிய வேண்டும்! ) இஸ்லாத்தில் உள்ள கடமைகள் ,அவைகள் அனைத்துக்கும்  கல்வி அவசியம் ! உலக கல்வியை மட்டும் இலக்காக நாம் கற்று வந்தால் ,அது நமக்கு பலன் தரும் அல்லது தராது( அது இந்த உலகத்தில் முடிவு பெற்று விடும் ) அல்லாஹ் நமக்கு விதித்ததை தவிர எதுவும் நமக்கு கிடைக்காது . உலக கல்வி அவசியம் என்பது எல்லோரும் அறிந்த விடயம் தான் ! இஸ்லாமும்  அதை தடுக்கவும் இல்லை ,இருபினும் மார்க்க கல்வி ரொம்ப ரொம்ப அவசியம்  என்பதை நாம் விளங்கி கொள்ள வேண்டும் ! இன்று மார்க்க கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை  என்று எல்லோரும்  அறிந்த விஷயம் தான்  , மார்க்க கல்வி இல்லாத சில பேர் , அறியாமையிலும் ,மூடநம்பிக்கையிலும்,  பித் அத் ,நூதன செயல்களில் வீழ்வதை நாம் பார்க்கிறோம்  அவைகளை விட்டு விலக வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் மார்க்க கல்வி கற்பது அவசியம் ! அல்லாஹ் நம் அனைவரையும் அறிவாளிகள் கூட்டத்தில் ஆக்கி வைப்பானாக ! ஆமீன் .............- 
             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!

| Designed by Colorlib