சுவனதிருக்கு முந்திசெல்லும் ஏழை எளிய மக்கள்

 சுவனதிருக்கு முந்திசெல்லும் ஏழை எளிய மக்கள்

இன்று எல்லோரும் அதிகமாக செல்வத்தை தேடி அழைக்கிறோம் ,அதில் சிலர் ஹராமான வழியில் தேடுகிறார்கள் , இன்னும் சிலர் பணம் பணம் பணம் என்று பேயாக அலைகிறார்கள் .கிடைத்ததை கொண்டு மனம் திருப்தி கொள்ளும் சில மனங்கள் தான் உண்டு . இந்த வாழ்க்கை சிறுது காலம் என்பது எல்லோரும் அறிந்த விஷயம் தான் ! அந்த சிறிது காலத்தில் அதிகமாக செல்வம் சேர்க்க வேண்டும் என்பது ஒரு பேராசை தான் !
உலகின் பேராசையை விடுத்து , பேணுதல் மிகு தூய வாழ்வை மேற்கொண்டு நீண்ட நெடிய மறுமை வாழ்வை வளமுறச் செய்வோமாக ! அல்லாஹ் அருள் புரிவானாக !

மாநபி (ஸல்) பகர்ந்தார்கள் ஹஜ்ரத் அபூ ஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: ஏழைகள் பணக்காரர்களை விட ஐநூறு வருடங்கள் முந்தி சுவர்க்கத்தில் நுழைவார்கள் . (திர்மிதி)

அண்ணல் நபி (ஸல்) நிவின்றதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) இமரான் பின் ஹூசைன் (ரலி) ஆகிய நபித் தோழர்கள் அறிவிக்கிறார்கள் : நான் சுவனத்தை உற்றுப் பார்த்தேன் . அதில் வசிப்பவர்களில் அதிகமானோர் ஏழைகளாக இருப்பதை பார்த்தேன் . நான் நரகை உற்றுப் பார்த்தேன் . அதில் வசிப்பவ்களில் அதிகமானோர் பெண்களாக இருப்பதை பார்த்தேன் . (புகாரி, முஸ்லிம்)

அண்ணல் நபி (ஸல்) பகர்ந்தார்கள் ஹஜ்ரத் கஃ பு பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்: ஓர் ஆட்டு மந்தையில் அவிழ்த்து விடப்பட்ட இரண்டு பசியான ஒனாயிகள் , அம்மந்தையை நாசமாக்குவதை விட அதிகமாக செல்வத்தின் மீதும் பதவியின் மீதும் உள்ள மனிதனின் பேராசை , அவனது  தீனை நாசமாக்கிவிடுகிறது .     (திர்மிதி)

ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் ஷிக்கீர் (ரலி) அறிவிக்கிறார்கள் : நான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சமுகம் வந்தேன் .அப்பொழுது  அல்ஹாகு முத்த்க்காதுரு சூராவை அவர்கள் ஓதிகொண்டிருந்தார்கள் அப்பொழுது ஆதமின் மகன் என் செல்வம் என் செல்வம் என்று கூறுகிறான் . ஆதமின் மகனே! உன் செல்வதிலிருந்து நீ சாப்பிட்டு அழித்தவை தவிர , ஆலது நீ உடுத்திக் கிழித்தவை தவிர அல்லது தானதர்மம் செய்து முடித்தவை தவிர வேறு ஏதேனும் உனக்கு (மீதமாக) உள்ளதா ? என அண்ணல் நபி (ஸல்) கேட்டார்கள். (முஸ்லிம்)

அண்ணல் நபி (ஸல்) கூறத் தாம் செவிமடுதத்தாக ஹஜ்ரத் கஃ பு பின் இயாள் (ரலி) கூறுகிறார்கள் .நிச்சயமாக ஒவ்வொரு சமுதாயத்திருக்கும் ஒரு சோதனை உண்டு . என் சமுதாயதிருக்கு சோதனை செல்வம் ஆகும் .(என் சமுதாய மக்கள்க்குச் செல்வம் பெருகி அதனால் அவர்கள் சோதிக்கப்படுவார்) (திர்மிதி)

நாம் சிந்திக்க வேண்டும் ! இன்ஷாஅல்லாஹ் ஒரு நாள் மரணத்தை சந்திக்க வேண்டும்! அதிக செல்வத்தின் காரணத்தினால் அல்லாஹ்விடம் கணக்கு கொடுக்க வேண்டும்! 

கருத்துகள்