சனி, ஜனவரி 18, 2014

முஃமினூன் -விசுவாசிகள்




முஃமின் எப்படி இருப்பார்கள் என்பதை அல்லாஹு தஆலா தன் திருமறையில் கூறுகிறான்:

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர் .
அவர்கள் எத்தகையோரென்றால் , தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.
இன்னும் , அவர்கள் வீணான (பேச்சு, செய்யல, ஆகிய ) வற்றை விட்டு விலகியிருப்பார்கள் .
ஜகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள் .
மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தளங்களைக் காத்துக் கொள்வார்கள் .
ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கி கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கல் .
ஆனால், இதற்க்கு அப்பால் (வேறு வழிகளை ) எவர் நாடுகிறாரோ அ(த்தகைய) வர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள் .
இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட )அமானிதப் பொருட்களையும் , தங்கள் வாக்குறுதிகளையும் காப்பற்றுவார்கள் .
மேலும், அவர்கள் தம் தொழுகைகளை (க் குறித்த காலத்தில் முறையோடு ) பேணுவார்கள் .
இத்தகையோர் தாம் (சுவர்க்கத்தின் ) வாரிசுதாரர்கள் .
இவர்கள் ஃபிர்தவ்ஸ் (என்னும் சுவனபதியை ) அனந்தரங்  கொண்டு அதில் இவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள் .
அல்குர் ஆன் : 23:1-11)

உண்மையான முஃமின் இப்படித்தான் இருப்பார்கள் என்பதை அல்லாஹு தஆலா கூறுகிறான்.

நாம் இன்னும் முஸ்லிமாகத்தான் இருக்கிறோம் . இன்னும் முஃமினாக ஆகவில்லை .அல்லாஹு தஆலா கூறிய ஒரு முஃமின் தன்மைகள் எப்படி இருக்கும். தொழுகை , வீணான காரியத்தில் பேச்சு அல்லது செயல் , ஜகாத்து கொடுப்பது, வெட்கத் தளங்களைக் காத்துக் கொள்வது, அமானித பொருள் , வாக்குறுதிகள் , குறித்த நேரத்தில் முறையாக தொழுவது. இந்த தன்மைகள் நம்மிடம் இருக்கிறதா என்று நாமே நம்மை சோதித்து பார்த்து கொள்ள வேண்டும். ஒரு முஃமினின்  சிறப்பை பற்றி நிறைய ஹதீஸ்கள் இருக்கிறது. சில ஹதீஸ்கள் இதோ:

முஃமின் என்பவன் அப்பாவியும், சங்கையானவனும் ஆவான் . பாவியென்பவன் மோசடி செய்பவனும் இழிவானவனுமாவான். என ரசல் (ஸல்) கூறினார்கள் .
அறிவிப்பாளர் : அபூஹுர்ரைரா (ரலி)
ஆதாரம்: அஹ்மத் .

முஃமின் என்பவன் நேசத்தின் சிகரமாவான் . மக்களை நெசிக்காதவனிடமும் , மக்களால் நேசிக்கப்படாத வனிடமும் எந்த நன்மையும் இல்லை என ரசூல் (ஸல்) கூறினார்கள் .
அறிவிப்பாளர்: அபூஹுர்ரைரா (ரலி)
ஆதாரம் : அஹ்மத்.

ஒரு முஃமின் மற்றொரு முஃமினுக்கு கண்ணாடி ஆவான் . ஒரு முஃமின் மற்றொரு முஃமினின் சகோதரன் ஆவான் . அவன் தன் சகோதரனை அழிவிலிருந்து காப்பாற்றுவான் . அவனுக்கு பின்னாலிருந்து அவனைப் பாதுக்காப்பான் என ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் .
அறிவிப்பாளர்: அபூஹுர்ரைரா (ரலி) ஆதாரம்: அபூதாவூது

முஃமினைப் பற்றி இன்னும் அதிகமான ஹதீஸ்கள் உள்ளன .இருப்பினும் சிலவற்றை மட்டும் தந்துள்ளேன்.
முஃமினாக இருப்பவர் அவர் முஸ்லிமாகவும் இருப்பார். முஸ்லிமாக இருப்பவர் அவர் முஃமினாக இருக்க மாட்டார் எதுவரை அவர் முஃமினாக ஆகும் வரை.
முஸ்லிமுக்கும் ,முஃமினுக்கும் வேறுபாடு இருக்கிறது . சிலர் பெயர் அளவில் முஸ்லிமாக இருப்பார் , இன்னும் சிலர் வாரத்தில் ஒரு முறை ஜூம்மா தொழுவார்கள் ,வருடம் இருமுறை பெருநாள் தொழுகை தொழுவார்கள் இப்படி இருப்பவர்கள் எப்படி முஃமினாக இருக்க முடியும் ? ஒரு ஹதீஸின் கருத்து: அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை உயிருக்கு மேலாக நேசிக்காதவரை அவர் உண்மையான முஃமின் ஆகமாட்டார் . அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழி முறைகள் நம் வாழ்க்கையில் வர வேண்டும். வாயளவில் நாம் சொல்லி விட முடியாது " நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நான் நேசிக்கிறேன் என்று " உள்ளத்தை அல்லாஹ் நன்கு அறிந்தவன் . ஒருவர் அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை உண்மையாக நேசிக்கிறார் என்றால் அவர் நிச்சயமாக அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்களின் வழிமுறைகளை பின்பற்றுவார்  ,மற்றவருக்கும் பின்பற்றும்ப்படி ஏவுவார் .

(நடை , உடை , பாவனைகளில்) ஓர் இனத்தவரை ஒப்ப நடப்பவன்  அவர்களைச் சேர்ந்தவனாவான் என ரசூல் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)
ஆதாரம்: அபூதாவூத்

அப்படிதான் இருக்கிறது சிலரின் கூற்றுக்கள் . மாற்றுமத கலாச்சாரம் , அவர்களின் பாவனைகள் எல்லாம் அன்று முதல் இன்று வரை நம்மில் சிலருக்கு இருக்கத்தான் செய்கிறது . நம் மார்க்கத்தை சிலர் சடங்குகளாக தான் பாவித்து வருகிறார்கள் .
இது மாற வேண்டும் , ஒரு நல்ல முஃமினாக ஆக வேண்டும்.

ஒரு இறுதியான ஹதீஸ் சொல்லி இந்த கட்டுரையை முடிக்கிறேன் .

நீ செய்யும் நற்காரியம் உனக்கு மகிழ்ச்சியளித்தால் உனது தீயச்செயல் உனக்கு துக்கமளித்தால்  நீர் பூரணமான முஃமின் என ரசூல் (ஸல்) கூறினார்கள் .
அறிவிப்பாளர்: அபூஉமாமா (ரலி)
ஆதாரம்: அஹ்மத்.

நம்மை நாமே சோதித்து பார்க்கும் தருணம் இது அதை நாம் நழுவ விடகூடாது.
அல்லாஹ் மிக அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!