அல்லாஹ்வின் திருபெயரால்..........
எல்லாப் புகழும், புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!!
தர்மம் செய்து அதை சொல்லிக் காட்டுவதின் மூலம் நன்மையை இழப்பதாகும் . அப்படிச் செய்யக் கூடாது என்று வலியுறுத்தும் நபிமொழிகள் பல வந்துள்ளன .
செய்த தர்மத்தைச் சொல்லிக் காட்டக் கூடாது என்பதை பல நபிமொழிகள் வந்துள்ளன . அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள் கூறினார்கள்..
அல்லாஹ் மறுமை நாளில் மூன்று பேரிடம் பேசவுமாட்டான் ,, அவர்களை [க் கனிவுடன்] பார்க்கவுமட்டான்,, அவர்களின் பாவங்களைத் துடைக்கவுமாட்டான் . அவர்களுக்கு வதைக்கும் வேதனைதான் உண்டு. செய்த தர்மத்தைச் சொல்லிக்காட்டக்கூடியவன்,, தனது கீழாடையை[த் தரையில் படும்படி] நீளமாக அணியக்கூடியவன்,, பொய்ச் சத்தியம் செய்து பொருட்களை விற்கக்கூடியவன் .
நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் .. [பெற்றோரைத்] துன்புறுத்துபவன், செய்த தர்மத்தைச் சொல்லிக்காட்டுபவன் , குடிகாரன், விதியை மறுப்பவன் ஆகியோர் சொர்க்கம் செல்லமாட்டார்கள்.
எனவேதான் ''இறைநம்பிக்கை கொண்டோரே! சொல்லிக்காட்டியும் புண்படுத்தியும் உங்களுடைய தர்மங்களைப் பாழாக்கிவிடாதீர்கள் '' என்று அடுத்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.
தர்மம் செய்துவிட்டுப் பின்னர் அதைச் சொல்லிக்காட்டினாலும் [மனதைப்] புண்படுத்தினாலும் செய்த தர்மம் அழிந்துவிடும்,, தர்மத்திற்கான நன்மை கிடைக்காது.
புகழுக்காகத் தர்மம் செய்யாதீர்கள்
''மனிதர்களுக்குக் காண்பிப்பதர்காகத் தர்மம் செய்தவன் தனது தர்மத்தைப் பாழாக்கிவிடுவதைப் போன்று . சொல்லிக்காட்டியும் மனதைப் புண்படுத்தியும் உங்களுடைய தர்மங்களைப் பாழாக்கிவிடாதீர்கள் '' என்று அல்லாஹ் கூறுகின்றான்.
மனிதர்களுக்குக் காண்பிப்பதர்காகத் தர்மம் செய்பவர் வெளிப்படையில் அல்லாஹ்விற்காகத் தர்மம் செய்வதைப் போன்ற தோற்றத்தை மனிதர்களுக்கு மத்தியில் ஏற்படுத்துவார். ஆனால், உண்மையில் மனிதர்கள் அவரைப் பாராட்ட வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே தர்மம் செய்வார். உயர் பண்புகளால் மக்களிடையே பிரபலமாகி எல்லோரும் தமக்கு நன்றி செய்ய வேண்டும் என்பதற்காக, அல்லது கொடைவள்ளல் என்று மக்கள் அவரைப் போற்ற வேண்டும் என்பதற்காகவே தர்மம் செய்வார்.
இத்தகைய உலகாதாய நோக்கங்ககளுக்காகவே தர்மம் செய்யும் அவர், அல்லாஹ்வுடனான உறவையோ அவனது திருப்தி மற்றும் உயர்ந்த பலனையோ கவனிப்பதில்லை. இதனாலேயே ' அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பாமல்' என்று இத்தகையோர் குறித்து அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.
இவ்வாறு மனிதர்களுக்குக் காண்பிப்பதர்காகத் தர்மம் செய்தவரின் தர்மத்தின் நிலைக்கு அல்லாஹ் ஓர் உதராணம் கூறியுள்ளான்..
அவன்[புரியும் தர்மத்தின்] நிலை மண் படிந்து வழுக்குப் பாறையின் நிலையை ஒத்திருக்கிறது. அதில் பெரு மழை பெய்து அதை வெறும் பாறையாக்கிவிட்டது. அதாவது அந்தப் பாறையில் படிந்திருந்த மண் முழுவதையும் அகற்றி அதை வெறும் பாறையாக்கிவிட்டது. முகஸ்துதிக்காகச் செய்யப்பட்ட நல்லறங்களில் நிலையும் அவ்வாறுதான். பாறையில் படிந்திருக்கும் மண்ணைப் போன்று. அவர்களின் நல்லறங்கள் மனிதர்களின் பார்வையில் பட்டாலும், அல்லாஹ்விடம் அவர்கள் புரிந்த நற் செயல்கள் எந்தப் பலனுமின்றி காணாமல் போய்விடும்.
அல்லாஹ்வின் திருப்தியை மட்டும் நாடி செய்பவரின் தர்மம் . அதைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்..
அல்லாஹ்வின் திருப்தியை எதிர்பார்த்து, தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கையோடு தம் செல்வங்களைச் செலவிடுவோரின் நிலையானது, உயரமான இடத்தில் அமைந்துள்ள ஒரு தோட்டத்தின் நிலையை ஒத்திருக்கிறது. அதில் கனமழை பொழியும்போது இரு மடங்கு பலனைத் தருகிறது . அதில் கனமழை பெய்யாவிடினும் தூறலே [போதும்] . நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் பார்கின்றவன் ஆவான்.
அல்குர்ஆன் ]
நாம் அனைவரும் அல்லாஹ்வின் திருப்தியை மட்டும் நாடி தர்மம் செய்யும் கூட்டத்தில் ஆக்கி வைப்பானாக . ஆமீன்.......
அல்லாஹ் மிக அறிந்தவன்.
அஸ்ஸலாமு அழைக்கும் [வரஹ் ]

கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!