அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தால் அழுவது

அல்லாஹ்வின் திருபெயரால் ....
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!


நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..

[தனது நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் [ எழு பேருக்கு அல்லாஹ்  தனது [அரியணையின்] நிழலில் அடைக்கலம் அளிக்கிறான். [தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து [அவனது அச்சத்தால் ] கண்ணீர் வடிப்பவர் [அவர்களில் ஒருவராவார் ]
இதை அபூஹுரைரா [ரலி] அறிவிக்கிறார்கள்.
ஆஆஅதாரம்.. புகாரீ]


அல்லாஹ்வின் அச்சத்தால் அழுத கண்மீது அல்லாஹ் நரகத்தை தடுத்து ஹராமாக்கிவிட்டான் '' என நபி [ஸல்] அவர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் ,''அல்லாஹ்வின் அச்சத்தால் அழுத மனிதர் நரகம் புகமாட்டார்'' என்றும் நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் [திர்மிதி]

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..

உங்களுக்கு முன்னால் வாழ்ந்த [பனூ இஸ்ராயீல் மக்களில்] ஒருவர் தாம் செய்துவந்த [குற்றச்] செயல் குறித்து அஞ்சியவராக [இறக்கும் தருவாயில்] தம் வீட்டாரிடம் , ''நான் இறந்துவிட்டால் என்னை[க் கரித்துச் சாம்பலை] எடுத்து சூறாவளிக் காற்று வீசும் காலத்தில் கடலில் தூவிவிடுங்கள்'' என்று கூறினார்.[அவர் இறந்தவுடன் ] அவரை அவ்வாறே அவருடைய வீட்டாரும் செய்தனர் . அல்லாஹ் [காற்றோடு கலந்துவிட்ட] அவரது உடலை ஒன்றுதிரட்டியபின் ''உன்னைப் இவ்வாறு செய்ததற்குக் காரணம் என்ன ? என்று கேட்டான் . அவர் உன்னைப் பற்றிய அச்சமே என்னை இவ்வாறு செய்யத் தூண்டியது ''என்று பதிலளித்தார். ஆகவே, அவரை அல்லாஹ் மன்னித்துவிட்டான்.
இதை ஹூதைஃபா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள் .
ஆதாரம்..புகாரீ]

அனைத்து ஆற்றலுமிக்க அல்லாஹ்வைப் பற்றி அச்சம் கொள்வதும், அவன் வழங்கும் தண்டனையை நினைத்து அழுவதும் இறைநம்பிக்கையின் அடையாளங்களாகும்.

அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள் கூறினார்கள்..

ஓர் அடியான் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசிவிடுகிறார். அதன் காரணமாக அவர் [இரு]கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவைவிட அதிகமான  தூரத்தில் நரகத்தில் விழுகிறார்.
இதை அபூஹுரைரா [ரலி]அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆதாரம்..புகாரீ]

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..

ஓர் அடியார் அல்லாஹ்வின் அன்புக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக [அத பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்] பேசுகிறார். அதன் காரணமாக அவருடைய தகுதிகளை அல்லாஹ் உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துகுரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக  [அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்] பேசுகிறார் . அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்.
இதை அபூஹுரைரா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆதாரம்..புகாரீ]  


சில நேரங்களில் நாம் நம்மையும் அறியாமலேயே நல்ல அல்லது கெட்ட பேச்சுகளைப் பேசிவிடுகிறோம் . அதன் விளைவு மிகவும் பெரியதாக அமைந்துவிடுகிறது என்பதை நாம் யோசிப்பதில்லை. பாதிக்கப்பட்ட ஓர் இறைநம்பிக்கையாலாருக்காக வாதாடி அவருக்கேற்பட்ட பாதிப்பை அகற்ற வழி  காண்பது, சிரமத்திலுள்ள ஒருவரின் சிரமத்தை அகற்றப் பரிந்துரைப்பது சண்டையிட்டுக்கொள்ளும் இருவரிடையே சமாதானம் ஏற்படுவதர்காகப் பேசுவது ஆகியவை நமக்குப் பெரிய சாதனைகலாகத் தெரிவதில்லை . ஆனால், இறை அன்பை நாடி இவற்றைப் பேசும்போது இறைவன் உயர் தகுதியை வழங்குகிறான்.

இதைப் போன்றே , ஆட்சியாளரைத் திருப்திபடுத்துவதற்காக அவர் செய்யும் தவறையும் சரி என்று சொல்வது. பிறர் மனம் நோகும் வகையில் பேசுவது, பங்காளிகள் அல்லது நண்பர்களிடையே பகை மூட்டும் வகையில் பேசுவது ஆகியவை நமது பார்வைக்கு ஒரு குற்றமாகவே தெரிவதில்லை. ஆனால், இந்தப் பேச்சுகளின் பின்விளைவு கடுமையானது என்பதால் இவை நரகத்தின் அதலபாதாளத்தில் தள்ளிவிடும். ஆகவே , எதைப் பேசினாலும், பேசுவதற்கு முன் பின்விளைவுகள் குறித்து யோசித்தபிறகே பேச வேண்டும். இதுவே இறை நம்பிக்கையாளரின் பண்பாகும்.  ஃபத்ஹுல் பாரி ] 

அல்லாஹ் மிக அறிந்தவன்.

கருத்துகள்