அல்லாஹ்வின் திருபெயரால் ..........
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக !
அல்லாஹ்வின் நாட்டப்படி பிறக்கும்போது முஸ்லிமாக பிறந்தோம் . இறக்கும்போது முஸ்லிமாக இறக்க வேண்டும். ஒரு மனிதனின் வாழ்க்கையின் முடிவு , அவனின் இறுதி பகுதிதான் ரொம்ப ரொம்ப முக்கியம் . முடிவு அல்லாஹ்வின் கையில் உள்ளது , அந்த முடிவு நல்ல முடிவாக இருக்க அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் செய்வானாக. ஈமானுடன் மரணிக்க செய்வானாக ! ஆமீன்..........................
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான் ..
[உண்மையான] நம்பிக்கையாளர்கள் எத்தகையோரென்றால், அல்லாஹ் என்று [அவர்கள் முன்] கூறப்பட்டால் அவர்களுடைய இதயங்கள் பயந்து நடுங்கிவிடும்,, அவர்களிடம் அவனுடைய வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவை அவர்களுக்கு நம்பிக்கையை [மேலும்] அதிகமாகும்,, மேலும் தங்களுடைய ரப்பையே அவர்கள் சார்ந்திருப்பார்கள்.
[அல்அன்ஃ பால் ..2]
எனவே, யார் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு அவனை உறுதியாகப் பற்றிப் பிடித்தார்களோ அவர்களை அவன் தன்னுடைய கருணையிலும் அருளிலும் புகச் செய்வான்,, இன்னும் தன் பக்கம் [சேர்வதற்குரிய] நேரான வழியையும் அவர்களுக்குக் காண்பிப்பான்.
[அந்நிஸா ..175]
எவர்கள் ஈமான் கொண்ட பின்னர் தங்களுடைய [ஓரிறை] நம்பிக்கையை [இணை கற்பித்தல் எனும்] அநீதத்தைக் கொண்டு கலந்துவிடவில்லையோ அத்தகையோர்- அவர்களுக்கே அபயமுண்டு ,, அவர்களே நேர்வழி பெற்றவர்கள்.
அல்அன் ஆம் ..82]
நம்பிக்கை கொண்டவர்கள் , அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியானவர்கள்.
அல்பகரா..165]
''நிச்சயமாக என்னுடைய தொழுகையும் , என்னுடைய [இதர] வணக்கமும், என்னுடைய வாழ்வும் , என்னுடைய மரணமும் அகிலத்தாரின் ரப்பாகிய அல்லாஹ்வுக்கே உரியவையாகும்'' என்று [நபியே] நீர் கூறுவீராக!
அல்அன் ஆம் ..162]
''ஈமானுக்கு எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன, அவற்றில் மிக உயர்ந்தது லாஇலாஹ இல்லல்லாஹு ' என்று கூறுவது, அவற்றில் மிகத் தாழ்ந்தது இடையூறு தரும் பொருட்களைப் பாதையிலிருந்து அகற்றுவது, மேலும், வெட்கம் ஈமானின் ஒரு [முக்கிய] கிளை' என்று நபி [ஸல்] அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள். [முஸ்லிம்]
தெளிவுரை..- வெட்கத்தின் அந்தரங்கம் மனிதனைத் தவறான காரியங்களிருந்து தடுக்க முயலுகிறது, நல்லோர்களை நற்காரியங்களில் குறை செய்வதைவிட்டும் தடுக்கிறது.
''உங்களுடைய ஈமானைப் புதுப்பித்துக் கொண்டே இருங்கள் '' என்று நபி [ஸல்] அவர்கள் கூறிய போது 'யா ரசூலல்லாஹ் , எங்களுடைய ஈமானை எவ்வாறு புதுப்பிப்பது?'' என்று கேட்கப்பட்டது லா இலாஹ இல்லல்லாஹு [என்ற கலிமா] வை அதிகமாகக் கூறிக்கொண்டே இருங்கள் '' என்று நபி [ஸல்] அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் அபூஹுரைரா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.
[தப்ரானி, அஹ்மத் ..]
அல்லாஹ்வின் நல்லடியார்களே!
மேலே கூறப்பட்டுள்ள இறை வசனத்தை ரொம்ப கவனமாக சிந்திக்கவும்! அல்லாஹ் என்று கூறப்பட்டால் உள்ளம் நடுங்கும் என்று அல்லாஹ் கூறுகிறான். நம்மில் எத்தனை பேருக்கு அப்படி இருக்கு என்று நாம் சிந்திக்க வேண்டும். அல்லாஹ்வின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் ஈமான் அதிகரிக்கும் என்று அல்லாஹ் கூறுகின்றான். நம்மில் எத்தனைப் பேருக்கு அப்படி ஈமான் அதிகரிக்கிறது ? சிந்திக்கும் நேரம் இது. மரணம் சந்திக்கும் நேரம் வந்துவிட்டால் சிந்திப்பதற்கு நேரம் இருக்காது .
அல்லாஹ் மிக அறிந்தவன்

கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!