அல்லாஹ்வின் திருபெயரால் ......
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!
''மறுமைக்காலம் நெருங்கி விடின் இறை நம்பிக்கையாளரின் கனவு பொய்யாக மாட்டாது. இறை நம்பிக்கையாளரின் கனவு நபித்துவத்தில் 46 பாகங்களில் ஒரு பாகமாகும்' என்று அண்ணல் நபி [ஸல்[ அவர்கள் நவின்றனர்.
ஆதாரம்.. புகாரீ, முஸ்லிம்[
''நல்ல கனவுகள் இறைவன் பாலிருந்து ஏற்படுகின்றன . தீய கனவுகள் ஷைத்தானைக் கொண்டு ஏற்படுகின்றன . எனவே உங்களில் எவரும் தீக்கனவு கண்டு அதன் காரணமாகத் திடுக்கிட்டு எழுந்திருப்பின் அவன் தம் இடப்பக்கம் [எச்சில்] துப்பிவிட்டு இறைவனிடம் அதன் தீங்கைவிட்டும் பாதுகாவல் தேடினால், அது அவருக்கு யாதொரு தீங்கும் நல்காது என்று அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கூறியதை நான் செவியுற்றேன்.
ஆதாரம்.. புகாரீ, முஸ்லிம்]
''உண்மையான கனவு சஹர் [வைகறைக்குச் சற்று முன்னுள்ள] நேரத்தில் காண்பதாகும் ' என்று அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.
ஜைத்தூன் எண்ணை யைக் காணுதல் *
சிறப்பிலும், மேன்மையிலும் உமது காலம் கழியும்.
ஷைத்தானை வழிபடுதல் *
எதிர்பாராத வகையில் உமக்குப் பொருள் கிடைக்கும் மார்க்கக் கல்வி பெருகும் . உம் எதிரி தோல்வியையே தழுவான் .
ஜக்காத் கொடுக்கக் காணுதல் *
நீர் செய்யும் வர்த்தகம் அல்லது தொழிலில் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
ஜம்ஜம் தண்ணீர் பருகக் காணுதல்*
ஞானமும் பெருந்தன்மையும் அந்தஸ்த்தும் உயர்வதற்கு அறிகுறி இது.
ஜீவித்துக் கொண்டிருப்பவன் கப்ருக்குள் இருப்பதை காணுதல்*
சிறிது சங்கடமும், மனச் சோர்வும் ஏற்படக்கூடும் . மனந்தளர வேண்டாம். இறைவனை வழிபட்டு மீட்சித் தேடுங்கள்.
ஹரம் ஷரீபில் போகக் காணுதல்*
உம்மைப் பீடித்துக் கொண்டுள்ள அச்சமும் , கவலையும் விலகி சந்தோஷமும் , மன அமைதியும் ஏற்படும்.
ஹஜரெ அஸ்வதை முத்தமிடக் காணுதல்*
உமக்கு ஒரு மார்க்க பக்தி நிறைந்த பெரியாரின் அனுகிரகம் உண்டாகும்.
ஹஜ்ஜூ செய்யக் காணுதல்*
மன நோக்கமும் உள்ளக் கிடக்கையும் வெகு சீக்கிரத்தில் நிறைவேறும் என்பதற்கான அறிகுறி.
வெள்ளை முடியைக் காணுதல்*
உமது கண்ணியமும் மதிப்பும் உயரும்,, அறிஞ்ராவீர் .
வெள்ளை யானை*
நல்ல குணமும் நேர்மையுள்ளமும் கொண்ட ஒரு குமாரன் பிறப்பான். உமது நோக்கத்திற்கேற்ப செல்வம் பெருகும்.
வேட்டையாடல்*
உம்முடைய நோக்கமும் நிறைவேறும் அல்லது நற்குணமும் பண்பும் வாய்ந்த மனைவி கிடைப்பாள் .
வேட்டையாடக் காணல் *
செல்வமும் பெருந்தன்மையும் உமக்கு ஏற்படுவதற்கான அறிகுறி இது.
வேளாண்மை செய்வதைக் காணுதல் *
மார்க்கப் பணியில் ஈடுபடுவீர்கள். தேகசுகம் அபிவிருத்தியடையும்.
வைரம்*
இல்லத்தில் பல்வேறு வகையான நன்மைகள் உமக்கு ஏற்படும்.
வெந்நீர் குடித்தல்*
சுகம் குறையும் வியாதி அதிகரிப்பும் உமக்கு ஏற்படுவதற்கான அறிகுறி இது.
வெள்ளப் பெருக்கு *
தாராளத் தன்மையும் ஈகைக் குணமும் உமக்கு ஏற்படும்.
வெள்ளி கிடைத்தல் *
உம்மைப் பீடித்துக் கொண்டிருக்கும் துக்கமும் கவலையும் விலகும். சந்தோசம் உண்டாகும்.
வெள்ளியைக் காணுதல் *
செல்வம் பெருகி உமது இல்லம் செழிப்படையும் .
வெள்ளியைக் கொடுத்தல் *
யாரோ ஒரு பெண்ணினால் நீர் ஏமாற்றப்பட்டு, அதனால் ஓரளவு நஷ்டம் அடைவீர்.
விறகு எரிக்கக் காணுதல் *
நயவஞ்சகத் தன்மை ஏற்படும், இலேசாக கலக்கமும் உண்டாகும்.
வெட்டப்பட்ட கிளை *
நற்கிரியைகளிலும் , நல்லெண்ண நற்செயல்களிலும் உம்முடைய காலம் கழியும்.
வெட்டப்பட்ட கிளையில் ஏறுதல் *
நீர் எங்கோ பிரயாணம் செய்ய நேரிடும் என்பதற்கான அறிகுறி இது.
விவசாயம் *
எதிர்பாராத பொருள் வந்தடையும்.
விவாகம் *
கனவில் கண்ட மணப்பெண்ணின் அழகுக்கு ஏற்ப உமக்குச் செல்வமும் சந்தோஷமும் கிட்டும்.
விவாகத்தைக் காணுதல் *
செல்வம் அதிகரித்து சிறப்புப் பெறுவீர். இது காரும் உம்மைப் பீடித்துள்ள வறுமை ஒழிந்துவிடும் .
விவாக ஊர்வலம் *
இந்தக் கனவைக் காணும் நீர் பெண்ணாயிருப்பின் உமக்குச் சந்தோசம் மேற்படும்,, ஆணாயிருப்பினும் துக்கத்தில் தவிக்க நேரிடும்.
விளக்கின் ஒளி *
சந்தோஷம் அதிகரிக்கும் , அத்துடன் உம் ஆயுளும் வளர்ச்சியடையும்.
இன்ஷாஅல்லாஹ் தொடரும்...........................
அல்லாஹ் மிக அறிந்தவன்

76 கருத்துகள்