இறையச்சம் .....
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
இந்த உலகத்தில் யார் அல்லாஹ்வுக்கு பயந்து வாழ்கிறார்களோ , அவர்களுக்கு சிரமங்களிலிருந்து கஷ்ட்டங்களிளிருந்து பிரச்சனைகளிலிருந்து அல்லாஹ் வெளியேறக் கூடிய வழியைத் தருவான். மறுமையிலும் அவர்களுக்கு எந்த துக்கமும் கவலையும் இருக்காது. இந்த உலகத்தில் அவர்கள் அறியாதப் புறத்திலிருந்து அவர்களுக்கு அல்லாஹ் வாழ்வாதாரம் அளிப்பான்.
அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்.
இந்த உலகத்தில் யார் [அல்லாஹ்வை ] அஞ்சி வாழ்கிறார்களோ அவருக்கு சிரமங்களிலிருந்து வெளியேறக் கூடிய வாய்ப்பை தருவான்.
அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸின் கருத்து .. நமக்கு முன்னே நடந்த ஒரு நிகழ்வு [படிப்பினை தரக் கூடிய ஒரு நிகழ்ச்சி ]ஜுரைஜ் என்பவர் ஒரு பெரிய வணக்கசாலி . அவர் ஒரு ஊரில் சிறிய வீட்டில் அல்லாஹ்வை வணங்கி வந்தார் . எப்பொழுதும் அவர் தொழுகையில் ஈடுப்பட்டுக் கொண்டிருப்பார் . அவரைப் பற்றி மக்கள்கள் எல்லாம் புகழ ஆரம்பித்தார்கள் . ஒருமுறை ஜுரைஜின் தாயார் அவரை சந்திக்க வந்தார்கள். அப்பொழுது ஜுரைஜ் தொழுதுக் கொண்டிருந்தார். யா ஜுரைஜ் ! யா ஜுரைஜ் ! யா ஜுரைஜ் என்று தாயார் அழைத்தார்கள். தொழுதுக் கொண்டிருந்த ஜுரைஜ் தனது மனதில் நினைத்தார் ''யா அல்லாஹ் தொழுகையா ? எனது தாயா என்று . பிறகு தொழுகையை தொடர்ந்தார் . இரண்டாவது நாள் ஜுரைஜின் தாயார் வந்தார் . யா ஜுரைஜ் ! யா ஜுரைஜ் ! யா ஜுரைஜ் ! என்று மூன்று தடவை அழைத்தார்கள் . அப்பொழுதும் ஜுரைஜ் தொழுகையில் தனது மனதில் நினைத்தார் யா அல்லாஹ் ! தொழுகையா ? என் தாயாரா என்று. தொழுகையை தொழுதார்.அவருடைய தாயார் திரும்பிவிட்டார் . மூன்றாவது நாளாக அந்த தாயார் இன்று இப்படியாவது தனுடைய மகனை சந்திக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அவர் வீட்டுக்கு சென்றார்கள் . யா ஜுரைஜ் ! யா ஜுரைஜ் ! யா ஜுரைஜ் ! என்று மகனை அழைத்தார்கள் . அப்பொழுதும் ஜுரைஜ் அவர்கள் தொழுதுக் கொண்டிருந்தார்கள். தொழுகையில் தனது மனதில் நினைத்தார்கள் யா அல்லாஹ் தொழுகையா ? என் தாயா என்று மனதில் எண்ணிக் கொண்டு தொழுகையை தொழுது வந்தார்கள். அப்பொழுது அந்த தாய்க்கு கோபம் வந்தது, அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள் '' யா அல்லாஹ் ஜுரைஜ் மரணிக்க செய்யாதே அவர் ஒரு விபச்சாரியின் முகத்தில் விழிக்கும் வரை என்று. அல்லாஹ் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். பிறகு மக்கள்கள் எல்லாம் இந்த ஜுரைஜ் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள் '' இந்த ஜுரைஜ் யாரும் வழிகெடுக்க முடியாது என்று அப்பொழுது ஒரு பெண் அங்கே வந்தாள். அவள் கூறினாள் '' நான் இந்த ஜுரைஜ் வழிகெடுப்பேன் என்று ஜுரைஜ் வீட்டுக்கு போனால் . அங்கே அவள் தனுடைய அழகை காண்ப்பித்து அவரை வழிகெடுக்க முயற்சி செய்தாள். ஜுரைஜ் அவர்கள் அல்லாஹ்வை அஞ்சி தொழுதுக் கொண்டே இருந்தார்கள் . அல்லாஹ்வை வணங்கி கொண்டே இருந்தார்கள். அவர்கள் எதையும் கண்டுகொள்ளவில்லை . பிறகு அந்த பெண் வெளியே சென்று விட்டாள். அப்பொழுது ஒரு ஆட்டு இடையனை கண்டாள். அந்த ஆட்டு இடையன் பழக்கம் கொண்டு அந்த பெண் தவறான காரியத்துக்கு உட்கொண்டால் . ஆட்டு இடையன் மூலமாக அவள் கர்ப்பமானால் . அவளுக்கு குழந்தை பிறந்தவுடன் , அந்த குழந்தையுடன் மக்களிடம் வந்தாள் . இந்த குழந்தை அந்த வணக்கசாலி ஜுரைஜ் க்கு பிறந்தது அவர் தான் தந்தை என்று மக்களிடம் அந்த பெண் கூறினாள். உடனே மக்கள் எல்லோரும் ஜுரைஜ் இருக்கும் வீட்டை அடித்து நொறுக்கினார்கள் , ஜுரைஜ் அவரை வெளியில் கொண்டு வந்து அடித்தார்கள் . நீர் நல்லவர் என்று நினைத்தோம் . இப்படி இந்த பெண்ணை தவறு செய்து விட்டாய் என்று கூறினார்கள். ஜுரைஜ் கூறினார் ''இல்லை இந்த குழந்தைக்கு நான் தந்தை இல்லை என்று சொன்னார். பிறகு அந்த வணக்கசாலி ஜுரைஜ் அவர்கள் இரண்டு ரக்காயத் தொழுதார்கள் . அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள் ''யா அல்லாஹ் இந்த பிரச்சனையில் இருந்து என்னை வெளியேற்றுவாயாக ! அல்லாஹ்வை அஞ்சிய வாறு மனம் உருகி பிரார்த்தனை செய்தார்கள். பிறகு அந்த குழந்தையிடம் வந்து , அந்த குழந்தையின் வயிற்ரை குத்தி '' யார் உன்னுடைய தந்தை என்று கேட்டார்கள். [இயற்க்கைக்கு மாற்றமாக அல்லாஹ் அந்த குழந்தையை பேச வைத்தான்.] அந்த குழந்தை பேசியது '' என் தந்தை ஒரு ஆட்டு இடையன் என்று . பிறகு மக்கள்கள் உணர்ந்தார்கள் . இந்த பெண் தான் தவறு செய்துவிட்டால் என்று. பிறகு மக்கள்கள் எல்லாம் அந்த வணக்கசாலி ஜுரைஜ் இடம் சென்று '' நாங்கள் உங்களுக்கு தங்கத்தால் வீடு ஒன்று கட்டி தருகிறோம் என்று கூறினார்கள். ஜுரைஜ் அவர்கள் வேண்டாம் முன்னே இருந்தது போல் மண்ணிலால் வீட்டை கட்டி தாருங்கள் என்று கூறிவிட்டார் .
இதிலிருந்து நமக்கு ஒரு படிப்பினை இருக்கிறது. நாம் அல்லாஹ்வை அஞ்சி வாழ்ந்தோம் என்றால் அல்லாஹ் நம்மை எந்த ஒரு கஷ்ட்டம் அல்லது பிரச்சனை ஏதாவது சிரமங்கள் வந்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதிலிருந்து நம்மை வெளியாக்குவான் . நமக்கு ஒரு வாய்ப்பை கொடுப்பன்.
இன்னொரு நிகழ்வு..
ஒரு முறை உமர் [ரலி] அவர்கள் மலையிலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு ஆட்டு இடையன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். உமர் [ரலி] அவர்கள் அந்த ஆட்டு இடையனின் அருகில் சென்று. அந்த சிறுவனை சோதித்து பார்ப்பதற்காக ] நீர் எனக்கு ஒரு ஆட்டை கொடு , உன் எஜமானிடம் ஒரு ஆட்டை ஓநாய் தின்று விட்டது என்று கூறிவிடு என்று கூறினார்கள். அந்த ஆட்டு இடையன் கூறினான் .. சரி நான் என் எஜமானிடம் அப்படி சொல்லிவிடுவேன் . ஆனால், அல்லாஹ்விடம் மறுமைநாளில் நான் என்ன பதில் சொல்வது என்று கூறினான். அதை கேட்ட உமர் [ரலி] அவர்கள். அழுதுவிட்டார்கள் . [அந்த ஆட்டு இடையனின் இறையச்சத்தை பாருங்கள்] பிறகு உமர் [ரலி] அவர்கள் அந்த ஆட்டு இடையனின் எஜமானிடம் ஆட்டு மந்தையை விலைக்கு வாங்கினார்கள் . அந்த அடிமை பையனையும் வாங்கி , உரிமைவிட்டார்கள் . அந்த ஆட்டு இடையனிடம் எல்லா ஆடுகளையும் கொடுத்தார்கள்.
அந்த ஆட்டு இடையனின் இறையச்சம் தான் அவனை அந்த அடிமை தனத்திலிருந்து வெளியேற்றியது . அல்லாஹ் அடியார்கள் அறியாத புறத்திலிருந்து வாழ்வாதாரம் அளிப்பான் என்பதையும் எந்த சம்பவத்தில் மூலம் நாம் அறியலாம்.
ஒருவருக்கு அல்லாஹ்வின் அச்சம் இருந்தால் , எந்நேரமும் அல்லாஹ்வை பயந்து வாழ்ந்தால் . நிச்சயமாக அல்லாஹ் பல சிரமங்களிருந்து வெளியே வரக் கூடிய ஒரு வாய்ப்பை தருவான். அறியாத புறத்திலிருந்து அல்லாஹ் ரிஜ்க் அளிப்பான். ஒவ்வொரு முஸ்லிம் ஈமான் உறுதியும் இறையச்சமும் இருந்தால் . நிச்சயமாக இம்மைக்கும் மறுமைக்கும் வெற்றி என்பதில் ஒரு துளிக் கூட சந்தேகம் இல்லை.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!