எறும்பு இடத்தில் இருக்கும் ஒற்றுமை! ஏன் நம்மிடத்தில் இல்லை..?

எறும்பு இடத்தில் இருக்கும் ஒற்றுமை! ஏன் நம்மிடத்தில் இல்லை..?
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்...
அல்லாஹ்  கூறுகின்றான் தன் திருமறையில் .
சூரா நம்லி ]

இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்தபோது ஓர் எறும்பு [மற்ற எறும்புகளை நோக்கி.] ''எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்,, ஸூலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு [அவ்வாறு செய்யுங்கள்] என்று கூறிற்று.
[அல்குர் ஆன்]


இந்த சம்பவம் நமக்கு ஒரு மிகப் பெரிய பாடமும், படிப்பினையும் தருகிறது. ஏறும்புகுள் இருக்கும் ஒற்றுமை நம்மிடத்தில் இல்லை! ஒரு எறும்பு மற்ற எறும்புகளை  எப்படி காப்பாற்றியது என்பதை நினைக்கும்போது உடம்பு சிலிர்க்குது! அப்படி நம்முடைய சமுதாயத்தில் இந்த எறும்பைப் போன்று யாராவது ஒரு தலைவர்கள் இருக்கிறார்களா..?  ஜமாஅத் [கூட்டமைப்பு] உருவாக்க எந்த தலைவர்களும் பாடுபடுகிறார்களா..? அரசியல் தலைவர்களும் சரி! இயக்க தலைவர்களும் சரி! எல்லோரும் சுயநலவாதிகளாக தான் இருக்கிறார்கள். பணம், பதவி, செல்வாக்கு இந்த மூன்றுக்காக தான் குறியாக இருக்கிறார்கள் ஒழிய நம் சமுதாயத்துக்காக பாடுபடக்கூடிய தலைவர்கள் எங்கே இருக்கிறார்கள்..?

அண்ணல் நபி [ஸல்] அவர்கள் அருளினார்கள் ..
''மூன்று நபர்கள் பயணத்திற்குப் புறப்பட்டால் அவர்கள் தங்களுள் எவரேனும் ஒருவரை [தலைவராக] அமீராகக் கொள்ளட்டும்!''.
அறிவிப்பாளர்.. அபூசயீத் அல்குத்ரீ [ரலி]
நூல்.. அபூதாவூத்]

ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா [ரஹ் ] அவர்கள் கூறுகின்றார்கள்.. ''பயணம் செய்து கொண்டிருக்கும்போதே கூட்டமைப்பு [ஜமாஅத்] உருவாக்கிக் கொள்வது மக்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது என்றால், தமது ஜமாஅத் அமைப்பு சீர்குலைந்து விட்டிருக்கும் நேரத்தில் இறைநம்பிக்கை கொண்டவர்கள் ஒன்றிணைந்து ஒரு ஜமாஅத்தாக  உருவெடுப்பது அதைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். கூட்டைமைப்பு இன்றி தனித்தனியாக வாழ முஸ்லிம்களுக்கு இஸ்லாம் அனுமதியளிக்கவில்லை.

முஸ்லிம்கள் இப்படி பல்வேறாக பிளவுபட்டு இருப்பதற்கு சிலர் பல காராணங்கள் கூறலாம்.. அதேநேரத்தில் ஒன்றுபட ஒரு காரணம் இருக்ககூடாதா! ஒற்றுமையைப் பற்றி பேசுவதைவிட அதை செயலில் காட்டுவது சிறந்தது!
இந்துத்துவ பயங்கரவாதிகள் நம்மை பார்த்து நகையாலும் அளவுக்கு நாம் ஒருவொர்கொருவர்  இப்படி சண்டையிட்டுக் கொள்கிறோம். பணத்துக்காகவும், பதவிக்காகவும் .

ஆடுகளுக்கு ஓநாய் எப்படிப் பகைவனாக உள்ளதோ, தம் மந்தையை விட்டு விலகித் தனியாக நிற்கும் ஆடுகளை எப்படி இலகுவாக ஓநாய் வேட்டையாடி இரையாக்கிக் கொள்கின்றதோ அதேபோன்று ஷைத்தான் மனிதனுக்கு ஓநாயாக இருக்கின்றான். மக்கள் ஒரு கூட்டமைப்பாக வாழாவிட்டால், அவன் அவர்களைத் தனித்தனியாக மிகவும் இலகுவாக வேட்டையாடி விடுகிறான். எனவே, மக்களே! குறுகலான பாதையில் நடக்காதீர்கள்! மாறாக நீங்கள் ஜமாஅத் அமைப்புடனும் முஸ்லிம் பொதுமக்களுடனும் இணைந்து வாழுங்கள்!
அறிவிப்பாளர்.. முஆத் பின் ஜபல் [ரலி]
நூல்.. முஸ்னத் அஹ்மத், மிஷ்காத் ]

நாம் இன்று சிந்திக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்! இன்று நம்மைப் பிரித்தாளும் சூழ்ச்சி நடந்துக் கொண்டிருக்கிறது. நம்மை நாமே சண்டையிட்டுக் கொள்ளும் அளவுக்கு ஒரு பெரிய சூழ்ச்சி நடக்கிறது. இந்துத்துவ பயங்கரவாதிகள் நம்மை தாக்க முடியாது  இருப்பினும் நம்மை நாமே தாக்கிக் கொள்ள அவர்கள்  சதிச் செய்கிறார்கள் அதை நம் முஸ்லிம் தலைவர்கள் விளங்கிக் கொள்ளவில்லை! மனிதநேய மக்கள் கட்சி ஒரு கட்சியாக இருந்தது இப்பொழுது அது இரண்டாக ஆகிவிட்டது. அதுபோல் இன்னும் பல கூறாக ஆக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த இந்துத்துவ பயங்கரவாதிகள்  திட்டம் தீட்டுகிறார்கள்.
அல்லாஹ்  நம் அனைவரையும் ஒரு ஜமாஅத் கூட்டமைப்பில் சேர்ப்பானாக !!
அல்லாஹ்  மிக்க அறிந்தவன்..  

கருத்துகள்