பொன்னான பொன்மொழிகள் !
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்..
பிறரைப் போல் பாவனை செய்தல்
அண்ணல் நபி [ஸல்] அவர்கள் நவின்றார்கள்..
''எவரையும் பழித்துக் காட்டுவதை நான் விரும்பவில்லை,, அதற்குப் பகரமாக ஏராளமான செல்வம் கிடைத்தாலும் சரியே!
அறிவிப்பாளர் .. அன்னை ஆயிஷா [ரலி]
நூல்.. திர்மிதி]
சிந்திக்கவேண்டிய நபிமொழி ....இனி இதுப் போன்ற தவறுகளை செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் உடனே பாவமன்னிப்பு கோருவோம்!
பிறர் துன்பத்தை கண்டு மகிழ்தல் ..
அண்ணல் நபி [ஸல்[ அவர்கள் நவின்றார்கள்..
''உன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதே! அல்லாஹ் அவன் மீது கருணை புரிந்து [அந்தத் துன்பத்தைக் களைந்துவிடுவான் ] உன்னைத் துன்பத்தில் ஆழ்த்திவிடுவான் ''.
அறிவிப்பாளர்.. வாஸிலா [ரலி]
நூல்.. திர்மிதி]
பிறர் துன்பத்தில் இன்பம் காணும் சில பேர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு அல்வா சாப்பிடுவதுப் போல். சிந்திக்க வேண்டும் !
இரு மனிதர்களுக்கிடையே பகைமை ஏற்பட்டு அவ்விருவரில் ஒருவருக்குத் துன்பம் ஏதும் வந்துவிட்டால் இன்னொருவர் மகிழ்ச்சி கொண்டாடுகிறார். இது இஸ்லாமிய மனப்பான்மைக்கு மாறானதாகும். ஓர் இறைநம்பிக்கையாளன் தன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழ்ச்சி கொண்டாடுவதில்லை,, இருவருக்குமிடையே எவ்வளவு மனத்தாங்கல் இருந்தாலும் சரியே!
அண்ணல் நபி [ஸல்] அவர்கள் நவிலக் கேட்டிருக்கின்றேன்.. '' நீர் உம் சகோதரரிடம் ஒரு விஷயத்தைச் சொல்லி, அதை அவர் உண்மையென்று கருதிக் கொண்டிருக்க, நீர் சொன்ன விஷயம் பொய்யாய் இருப்பது பெரும் நம்பிக்கைத் துரோகமாகும்.
அறிவிப்பாளர்.. ஸூஃப்யான் பின் அஸீத் ஹள்ரமீ [ரலி]
நூல்.. அபூதாவூத்]
அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..
''தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியாமல் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை [பெற்றுத் தர] நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும்- பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை [பெற்றுத் தர] நான் பொறுப்பேற்கின்றேன். தன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் [பெற்றுத் தர] பொறுப்பேற்கின்றேன்.
அறிவிப்பாளர்.. அபூ உமாமா [ரலி]
நூல்.. அபூதாவூத்]
அண்ணல் நபி [ஸல்] அவர்கள் நவின்றார்கள்..
''இறுதித் தீர்ப்புநாளில் இறைனம்பிக்கையாளனின் தராசில் வை [த்து நிறு]க்கப்படும் பொருள்களிலேயே மிக கனமான பொருள் அவனது நற்குணம் ஆகும். தன் நாவால் வெட்கம் கெட்ட விஷயங்களைப் பேசுபவனையும் கெட்ட வார்த்தைகள் கூருபவனையும் அல்லாஹ் மிகவும் வெறுக்கின்றான்.
அறிவிப்பாளர்.. அபுத்தர்தா [ரலி]
நூல்.. திர்மிதி]
அல்லாஹ்வின் நல்லடியார்களே! பொன்னான பொன்மொழிகள் ! வாழ்க்கைக்கு தேவையான நன்மணிகள் ! அல்லாஹ் நம் குணத்தை சீராக்கி வைக்கவேண்டும்! நற்குணத்தில் சிறந்தவர்களாக ஆக்கி வைக்கவேண்டும்! நம் நாவை பேணவேண்டும் ! நல்லதையே கூறுவோம் இல்லையெனில் மௌனமாக இருப்போம்!
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!