நற்குணம் என்றால் என்ன..?

நற்குணம் என்றால் என்ன..?
அல்லாஹ்வின் திருபெயரால்....
மறுமைநாளில் மீஜான் என்னும் தராசில் கனப்படுத்துவது   நற்குணத்தை தவிர வேறு எதுவுமில்லை ... ஒவ்வொரு முஸ்லிமிடம் இருக்கவேண்டிய பண்புகளில் சிறந்தது இந்த நற்குணம்.. நற்குணத்தில் தலைசிறந்தவர்கள் அண்ணல் நபி [ஸல்] அவர்கள்.... ஆனால்.. இன்று நம்மிடத்தில் நற்குணம் என்பது ரொம்ப சிரமமாக உள்ளது! நம்மிடத்தில் எத்தனை பேர்களிடம் நற்குணம் வீசுகின்றன..? ஒருவரிடம்  ''உங்களுக்கு பணம் முக்கியமா ..? அல்லது குணம் முக்கியமா..? என்று கேட்டால் ..'' அவர் கூறும் பதில் ''எனக்கு பணம் தான் முக்கியம் ''  குணத்தை வைத்து என்ன செய்வது ..? பணத்தை வைத்து எதுவேண்டுமானாலும் செய்யலாம்...


அபூஹுரைரா [ரலி] அவர்கள், நபி [ஸல்] அவர்களிடம்,  ''அல்லாஹ்வின் தூதரே! நற்குணம் என்றால் என்ன? '' என்று வினவினார்கள்.

''உம்முடைய உறவைத் துண்டித்து வாழ்பவனுடன்  நீர் சேர்ந்து வாழும்,, உமக்கு அநீதம் இழைத்தவனை  மன்னித்து விடும் '' என்றார்கள்..

''நற்குணத்தை முழுமைப்படுத்தவே நான் நபியாக அனுப்பப்பட்டேன். ஒவ்வொரு நபியும் நற்குணத்துடன் தான் தோன்றினார்கள்,, ஆனால் நான் மீதியை நிறைவு செய்வது என் கடமை.''

''மறுமையில் மனிதனின் செயல்கள் நிறுக்கப்படும் ''மீஸான் '' என்னும் துலாக் கோலை  மிகக் கனமானதாக ஆக்கிவைக்கும் நற்செயல் நற்குணமேயாகும் !''

''எந்த மனிதனிடம் நற்குணம் குடிகொண்டிருக்குமோ அவன் இறை பக்தியுடன் நன்மார்க்கத்திலும் இருக்கின்றான்'' என்று இமாம் கஸ்ஸாலி [ரஹ் ] அவர்கள் கூறுகின்றார்கள்.

''நற்குணம் என்பது ஈமானுக்குரிய அடையாளமாகும். தீயகுணம் என்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும்.

நபி [ஸல்] அவர்கள், ஒருவனிடம் நற்குணம் இருக்குமாயின் அவனிடம் கீழ்க்காணும் பண்புகள் இருக்க வேண்டும், எனக் கூறியுள்ளார்கள்..
1.மிகுதியாக வெட்கப்படுதல்.
2.பிறருக்கு தொல்லை கொடாதிருத்தல்.
3.உண்மை பேசுதல்.
4.அதிகம் பேசாதிருத்தல் .
5. மிகுதியான நற்செயல்களும்- வணக்கவழிபாடுகள் செய்தல்.
6.பிறருடன் [மக்களுடன்] சேர்ந்து வாழ்தல்.
7.குறைவாகத் தவறு செய்தல்.
8. நல்லவனாக இருத்தல்.
9.கண்ணியமாக இருத்தல்.
10.பொறுமை .
11நன்றியுணர்வு.
12திருப்தியுடன் இருத்தல்.
13.ஒழுக்கத்துடன் இருத்தல்.
14.நண்பனாக இருத்தல்.
15.பிறரை நேசிக்கும் தன்மை.
16. அல்லாஹ்வின் சினத்திற்கு ஆளாகாதிருத்தல்.
17.பிறரை ஏசாதிருத்தல் ,, கஞ்சத்தனம், புறம்பேசல் , குறை கூறல், தீவிர வாதம் இவைகளை விட்டும் நீங்கியிருத்தல், முகமலர்ச்சியுடன் இருத்தல், சகிப்புத் தன்மை, மேலும் தேவைகளை குறைத்துக் கொள்ளுதல்.
நபி [ஸல்] அவர்களைக் குறித்து அல்லாஹ்  சொல்லிக் காட்டுகிறான்..
இன்னும் நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தில் இருக்கிறீர்.
அல்குர்ஆன் .. அத் ,69-வசனம் , 4
அல்லாஹ்  மிக்க அறிந்தவன்..

கருத்துகள்