நம் துன்பங்களுக்கு நாமே காரணம்
அல்லாஹ்வின் திருப்பெயரால்....
நாமைடையும் துன்பங்களுக்கும்,துயரங்களுக்கும், தொல்லைகளுக்கும், வறுமைக்கும் நாமே காரணமாய் உள்ளோம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அருளே வடிவான அல்லாஹ் நல்லடியார்களைத் தண்டிப்பானா? ஒரு பாவமுமறியாத அப்பாவிகளை அவன் துன்புறுத்துவானா? மார்க்கக்க கடமைகளைத் தவறாது நிறைவேற்றும் உண்மையாளர்களை அவன் தொல்லைப்படுத்துவானா? என்று ஒவ்வொருவரும் சிந்திப்பது அவசியம்.
''அவ்வாறெனில் நாம் சாப்பாட்டுக்கு வழியின்றி தவிக்கிறோமே ! முயற்சிகள் அனைத்தும் துண்டாகிப் போகின்றனவே! எச்செயலும் முழுமை பெறுவதோ அல்லது வெற்றி பெறுவதோ இல்லையே! தோல்வி... தோல்வி... தோல்வி. வாணிபத்தில் நாட்டம். அதிகாரிகளின் தொல்லை. காவல் துறையினர் பாடுபடுத்துகின்றனர். எந்நேரமும் மனைவியிடம் சச்சரவு! வாழ்க்கையில் நிம்மதி இல்லை.'' இவை அனைத்திற்கும் காரணம் என்ன?
சிலர் கூறுகின்றனர்.. ''அல்லாஹ் என்னைப் படாத பாடுபடுத்துகின்றான். நான் என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை'' என்று. இவையனைத்தும் குஃப் ரான [இறைமறுப்பான] பேச்சுக்களே அன்றி வேறில்லை.
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்..
''யாதொரு தீங்கும் உங்களை வந்தடைவதெல்லாம், உங்கள் கரங்கள் தேடிக் கொண்டதன் காரணமாகவேதான்..... தவிர அல்லாஹ்வையன்றி உங்களுக்கு உதவி செய்வோனும் இல்லை,, உங்களை இரட்சிப்போனும் இல்லை.
[42..30,31]
அடுத்து அல்லாஹ் ஜல்லஷானஹு வத ஆலா கூறுகின்றான்..
''மனிதர்களின் கைகள் தேடிக் கொண்டதன் விளைவாகக் கடலிலும், தரையிலும் அழிவுகள் பரவிவிட்டன . அதிலிருந்து அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு அவர்களின் தீவினைகளில் சிலவற்றின் தண்டனையை அவர்கள் [இம்மையில்] சுகிக்கும்படி அவன் செய்கிறான்.
[30..41]
திருமறையில் இது போன்ற வசனங்கள் ஏராளமாய்க் காணப்படுகின்றன. இவையனைத்தும் மனிதர்கள் படும் வேதனைகளுக்கு அவர்களின் பாவச் செயல்களே காரணங்களாகும் என்பதை பறைசாற்றுகின்றன.
மேலே கூறப்பட்டுள்ள திருமறையின் வசனத்தை நாம் நன்கு சிந்திப்போம் என்றால் நமக்கு ஒரு விமோசனம் கிடைக்கும். நம் படும் அனைத்து கஷ்ட்டத்துக்கும் வழி பிறக்கும் என்பதில் ஒரு துளிக் கூட ஐயம் இல்லை.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!