ஹிஜாப்-ஒரு விளக்கம் [இறுதி பகுதி]

ஹிஜாப்-ஒரு விளக்கம் [இறுதி பகுதி]
அல்லாஹ்வின் திருப்பெயரால்..
ஒரு முஸ்லிம்  பெண் எப்படி வேண்டுமானாலும் அவள் விருப்படி பர்தா அணிவது என்பது கூடாது. இஸ்லாம் எப்படி கூறியுள்ளது அதன்படிதான் பர்தா அணிய வேண்டும்.

பர்தா ஆண்களின் ஆடையை ஓத்திருக்கக் கூடாது..
பெண்களைப்  போன்று ஆடை அணிகின்ற ஆண்களையும், ஆண்களைப்  போன்று ஆடை அணிகின்ற பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் [ஸல்] சபித்தார்கள் .
சுனன்  அபூதாவூது]

பர்தா முஸ்லிம்  அல்லாத பெண்களின் ஆடைகளை ஓத்திருக்கக் கூடாது..
நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. யார் பிற சமுதாயத்திற்கு ஒப்பாகின்றாரோ அவர் அவர்களைச்  சேர்ந்தவரே !
முஸ்னது அஹ்மது]


பர்தாவைப் புகழுக்காகவும் பகட்டுக்காகவும்  அணியக்  கூடாது.

அல்லாஹ் கூறுகின்றான்..
பரிசுத்தமான வழிபாடு அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது என்பதை அறிந்துகொள்ளுங்கள்!
சூரா அஸ்ஸூமர் 39..3]

நபி [ஸல்] எச்சரித்தார்கள் .. யார் புகழை விரும்பி ஆடையை அணிகின்றாரோ, அவருக்கு அல்லாஹ் மறுமைநாளில் இழிவின் ஆடையை அணிவிப்பான். பின்னர் அவர் நரக  நெருப்பில் வீசப்படுவார்.
சுனன்  அபூதாவூது]
மேலும் எச்சரித்தார்கள்.. பிறர் புகழ்வதற்காக எவன் நற்செயல் செய்கிறானோ அவனை அல்லாஹ் தண்டிப்பான். பகட்டுக்காக  எவன் நற்செயல் செய்கிறானோ அவனையும் அல்லாஹ் தண்டிப்பான் .
[ஸஹீஹ் முஸ்லிம் ]

இந்த எட்டு நிபந்தனைகளும் நிறைவேறுகிற விதத்தில் பர்தா அணிந்தவர்களே  அல்லாஹ்விடம் உண்மையில் பர்தா அணிந்து நல்ல முஸ்லிம்  பெண்களாக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். இவர்களுக்குத்தான் முழுமையான நற்கூலி கிடைக்கும். இவர்கள்தான் நரகத்தை விட்டும் தப்புவார்கள்.

பர்தா அலட்சியம் செய்யப்படுகிற இடங்கள்..
தவறாமல் பர்தா அணிந்து வருகின்ற பெண்களிலேயே பலர் , தாங்கள் அதை அணிந்த பிறகும் பல தவறுகளைச்  செய்கிறார்கள். அணிகின்ற வரைதான் பர்தாவை நினைக்கிறார்கள். பிறகு முற்றிலும் மறந்து விடுகிறார்கள். தாங்கள் அணிந்துள்ள பர்தா காற்றில் பறந்து தங்களின் தலையும் முகமும் கூந்தலும்  கழுத்தும் ஆடை அணிகலன்களும் வெளியே தெரிவதைக் கண்டுகொள்ளாது இருந்துவிடுகிறார்கள். உடனடியாக அதைச் சரி செய்வதில்லை.

1. பலர், திருமண விருந்துகளிலும் உறவினர்களைச்  சந்திக்கச் செல்கிற இடங்களிலும் தங்கள் பர்தாவை மறந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் உறவினர்களில் உள்ள மஹ்ரம் அல்லாத ஆண்களை அந்நியர்களாகக் கருதுவதே இல்லை.
2.கடற்கரைகள், பூங்காக்கள் போன்ற இடங்களிலும்,
3. குழந்தைகளைப்  பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் செல்கிற போதும், அழைத்து வருகிற  போதும்,
4.தங்கள் வாகனங்களை ஓட்டிச்  செல்கிற போதும், அவற்றின் பின்புறம் உட்கார்ந்து செல்கிற போதும்,
5. ஆட்டோ மற்றும் கார்களில் பயணிக்கின்ற போதும்,
6.பேருந்துகளில் செல்கிற போதும்,
7.கணவரின் தம்பி, கணவரின் அண்ணன் , பெரிய, சிறிய தந்தையின் பிள்ளைகளுக்கு முன்னிலையிலும்,
8பள்ளிக்கூடங்கள், ஏனைய பணியிடங்களில் பணி  செய்கின்றபோதும்,
9.பள்ளிக்கூடங்களுக்கு கல்லூரிகளுக்கும் செல்கிற போதும்,
10. அரசியல் மேடைகளிலும், கவியரங்குகளிலும் , விளையாட்டு அரங்குகளிலும்,
11.தெருக்களில் தண்ணீர் பிடிப்பதற்காக நிற்கின்ற போதும்,
12.வீட்டின் மாடிகளில் நிற்கும் போதும்,
13. உணவகங்களில் உணவு சாப்பிடும் போதும்,
14. [ரேஷன் ] உணவுப் பொருள் பங்கீட்டுக் கடைகளில் பொருட்களை வாங்குவதற்காக நிற்கும் போதும்,
15.மருத்துவமனைகளில் மருத்துவரைச் சந்திக்க காத்திருக்கிற போதும்,
16. சுற்றுலாப் பயணங்களில் சுற்றுலாத் தளங்களில் வேடிக்கை பார்க்கின்ற போதும்,
17.அண்டை வீடுகளில் எதையேனும் கொடுக்கவோ வாங்கவோ போகின்ற போதும், அந்த வீடுகளில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிற போதும்,
18.பல காலமாகப் பழகிய அண்டை வீடுகளில் உள்ள ஆண்  குழந்தைகள் வாலிப வயதை அடைந்த பிறகும்,
இப்படிப் பல நேரங்களிலும் இடங்களிலும் தங்கள் பர்தாவை மறந்தப்படி இருக்கிறார்கள். பர்தா அணிந்திருந்த போதிலும், அங்க அவயங்கள் வெளிப்படும்படி கவனக் குறைவாக இருந்து விடுகிறார்கள். இவ்வாறு அலட்சியமாக இருப்பது, பர்தாவின் அடிப்படை நோக்கத்தையே தகர்ப்பதாகும். முஸ்லிம்  பெண்கள் இது  விடயத்தில் எச்சரிக்கையாக இருந்து பர்தாவை முறைப்படி பேண  வேண்டும்.
அல்ஹம்துலில்லாஹ்! முற்றும்.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

கருத்துகள்