ஹிஜாப் -ஒரு விளக்கம் [பகுதி இரண்டு]

ஹிஜாப் -ஒரு விளக்கம் [பகுதி இரண்டு]
அல்லாஹ்வின் திருப்பெயரால்.
இன்ஷாஅல்லாஹ் தொடர்ச்சியை  பார்ப்போம்..
அல்லாஹ்வின் கட்டளை
பர்தாவை அல்லாஹ்வின் கட்டளைக்காக அணிய வேண்டும். நல்ல முஸ்லிம்  பெண்மணி பர்தாவைச் சடங்காகவோ, சம்பிரதாமாகவோ கடைபிடிக்கக் கூடாது. தன்னுடைய முன்னோர்களின் கலாச்சார ஆடை என்றும் நினைக்க மாட்டாள் . மார்கா பர்தா அணிகின்ற சட்டத்தை அல்லாஹ்வின் கட்டளை என்ற நம்பிக்கையுடனும் மனப்பூர்வமான விருப்பத்துடனுமே  பேண  வேண்டும். குழப்பங்கள் நிறைந்த இடங்களை விட்டும் இழிவான சூழ்நிலைகளை  விட்டும், வழிகேட்டின் அபாயங்களை விட்டும்  தன்னைப்  பாதுகாக்கவே தனக்கு அல்லாஹ் இப்படிப்பட்ட கட்டளையை விதித்துள்ளான் என்றும், தன்னுடைய தனித்தன்மையை இதன் மூலம் பிரித்துக் காட்டுகிறான் என்றும் முழுதிருப்தியுடன் முஸ்லிம்  பெண் ஏற்று நடக்க வேண்டும்.


அல்லாஹ் இச்சட்டத்தை இறக்கியபோது  முஹாஜிர் மற்றும் அன்சாரிப் பெண்கள் அப்படித்தான் ஏற்றுக்கொண்டார்கள்.

அன்னை ஆயிஷா [ரலி] அறிவிக்கிறார்கள்..
முந்தி  வாழ்ந்த முஹாஜிர் பெண்களுக்கு அல்லாஹ் கருணை காட்டட்டும். தங்கள் துப்பட்டாக்களை [புர்காக்களை] தங்கள் மேலாடைகளின்  மீது போட்டு [தலை, முகம், கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து]க்  கொள்ள வேண்டும் என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கியபோது  தங்களின் போர்வைகளைக் கிழித்துத் தங்க[ள்  முகங்க ]ளை  மூடிக் கொண்டார்கள்
ஸஹீஹுல் புகாரீ]

அல்லாஹ் அந்த முஹாஜிர் மற்றும் அன்சாரித் பெண்கள் மீது கருணை காட்டுவானாக! அல்லாஹ்வின் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை எவ்வளவு உறுதியானது! அவர்களின் இஸ்லாமிய பற்று எவ்வளவு உண்மையானது! அல்லாஹ்வின் சட்டம் இறக்கப்பட்ட போது  அதை எவ்வளவு அழகுடன் ஏற்றுக் கொண்டார்கள்! உண்மையான நம்பிக்கையுடன் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் நம்பிக்கை கொள்கின்ற ஒவ்வொரு முஸ்லிம்  பெண்ணும் சிறப்புக்குரிய அந்தப் பெண்களையே பின்பற்றுவாள். அவர்களின் தனித்தன்மை மிக்க அந்த இஸ்லாமிய ஆடையைத் தானும் அவசியம் அணிவாள். தன்னைச் சுற்றி ஒழுக்கமின்றி அரைகுறை ஆடையுடன் அலைகின்ற பெண்களுடைய ஷைத்தானியக்  கலாச்சாரத்தை அவள் சிறிதும் பொருட்படுத்த மாட்டாள்.

இன்று அன்சாரிப் பெண்களை போன்று பர்தாவைப் பேணுகின்ற முஸ்லிம்  பெண்கள் அதிகமாத்தான் இருக்கிறார்கள். [அல்ஹம்துலில்லாஹ்] இப்படிப்பட்ட தூய்மையான முஸ்லிம்  பெண்களைக் கொண்டுதான் இஸ்லாமிய வீடுகள் ஒளிமயமாகின்றன. இஸ்லாமியச் செயல் வீரர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.

தீய பிரசாரம்
முஸ்லிம்  அல்லாதவர்களின் தீய பிரசாரத்தில்  ஏமாறமாட்டாள் முஸ்லிம்  பெண்மணி. இன்று உலகம் முழுவதும் இருக்கின்ற பிற மதத்தவர்கள் பெண்ணின் விடயத்தில் கடைப்பிடிக்கின்ற ஒழுங்கீனம், ஆடைக்  குறைப்பு, அரை அல்லது முழு நிர்வாணப் போக்கு, அவர்கள் நேர்வழியை விட்டும், நேரிய சிந்தனையை விட்டும், தூய வாழ்க்கையை விட்டும், ஒழுக்க நெறிகளை  விட்டும் முற்றிலும் தடம் புரண்டு விட்டார்கள். என்பதற்கு உறுதியான ஆதாரமாகும்.

பெண்களை அரை அல்லது முழு நிர்வாணமாக்கி, தங்களுடைய இச்சையைத் தணிக்க வேண்டுமென்றே மாற்றார்கள் அனைவரும்  விரும்புகின்றார்கள். நல்ல  முஸ்லிம்  பெண்கள் இவர்களின் தீய பிரசாரத்தில்  ஏமாந்து தங்களின் இஸ்லாமியத் தனித்தன்மையைத் தொலைத்து விடக்கூடாது.

முஸ்லீம் பெண்கள்  இஸ்லாமியப்  பர்தாவைக் களைந்துவிட்டு ஆண்களுடன் தங்கு தடையின்றி பழக  வேண்டுமென பலர் ஊளையிடுகின்றார்கள். தங்கள் பெண்கள் கற்பையும் மானத்தையும் பெண்மையையும் இழந்தது போன்று முஸ்லிம்  பெண்களும் இழக்க வேண்டுமென விரும்புகின்றார்கள்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், தங்களை முஸ்லிம்  என்று சொல்லிக் கொள்கின்ற படித்த மேல்தட்டு மக்களில் பலரும் பர்தாவை விமர்சிக்கின்றார்கள்  ஆனால், அவர்களில் சிலர் இதன் விபரீதத்தை உணர்ந்தபோது மனம் திருந்தியுள்ளார்கள்.

இன்ஷாஅல்லாஹ் இன்னும் தொடரும்.......
அல்லாஹ் மிக்க அறிந்தவன். 

கருத்துகள்