ஹிஜாப்-ஒரு விளக்கம்[நான்காம் பகுதி]

ஹிஜாப்-ஒரு விளக்கம்[நான்காம் பகுதி]
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
இஸ்லாமிய பெண்மணிகள் அறிந்துக் கொள்ளவேண்டிய ஒரு விடயம்!
முறையான பர்தாவுக்குரிய நிபந்தனைகள்..
தலை முதல் கால்கள் வரையுள்ள உடல் உறுப்புகள் அனைத்தையும் முழுமையாக மறைக்க வேண்டும். இன்று பலர் தங்கள் முகம், கூந்தல், கழுத்துப் பகுதி, கணுக்கால் பகுதி, அணிந்துள்ள ஆடை மற்றும் அதன் நிறங்கள் ஆகியன வெளியே தெரியும்படி பர்தா அணிகிறார்கள். இது தவறாகும்.

அல்லாஹ் கூறுகிறான்..
தங்கள் துப்பட்டாக்களை [புர்காக்களை] தங்கள் மேலாடைகளின்  மீது போட்டு [தலை, முகம், கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து] கொள்ள வேண்டும்.
சூரா அந்நூர் 24..31]


ஒரு பெண் தன்  உடலின் எல்லாப் பகுதிகளையும் கட்டாயம் மறைக்க வேண்டும் என்பதை பற்றி நபி [ஸல்] இப்படிக்கு கூறினார்கள்.. பெண்ணே அவ்ரத்  [மறைத்து பேணப்பட வேண்டியவள்] ஆவாள்.
[ஜாமிவுத் திர்மிதீ ]

பர்தா அலங்காரமின்றி இருக்கவேண்டும்..
அல்லாஹ் கூறுகிறான்..
பெண்கள் தங்கள் [ஆடை, ஆபரணம் போன்ற] அலங்காரத்தை வெளியே காட்டாமல் மறைத்துக் கொள்ள வேண்டும்.
சூரா அந்நூர்  24..31]

மேலும் கூறுகிறான்..
முன்னிருந்த அறியாத மக்கள் [தங்களை அலங்கரித்துக் கொண்டு வெளியில் சென்று] திரிந்து கொண்டிருந்ததைப்போல் நீங்களும் திரியாதீர்கள்.
[சூரா அல் அஹ்ஸாப்  ..33..33]

பர்தா மெல்லியதாக இல்லாமல் தடிமனாக இருக்கவேண்டும்.
பர்தாவிற்கு பயன்படுத்தப்படுகிற  துணி உள்ளே அணிந்துள்ள அலங்கார ஆடைகள் தெரியும்படி மெல்லியதாக இருக்கக்கூடாது. மாறாக, உள்ளே அணிந்துள்ள ஆடைகளை மறைக்கும்படி தடிமனாக இருக்க வேண்டும்.

பர்தா இறுக்கமாக இல்லாமல் பெரிதாகவும் தாராளமாகவும் இருக்க வேண்டும்.

பர்தா அணிவதின்  அடிப்படை நோக்கமே, உடலின் அவயங்களையும்  ஆடை அலங்காரங்களையும் முழுமையாக மறைத்து, அவற்றின் சுவடுகூட வெளியில் தெரியாமல் இருப்பதே! மெல்லிய துணிகளால் ஆன  பர்தாக்களை அணிகின்றபோதும், இறுக்கமான பர்தாவை அணிகின்றபோதும் இந்த நோக்கம் சிதைந்துவிடுகிறது. அத்தகைய பர்தாக்களை அணிந்து பெண்களுக்குக்  கடுமையான வேதனை உண்டென நபி [ஸல்] அவர்கள் எச்சரித்துள்ளார்கள் .
 நபி [ஸல்] கூறினார்கள்.. என் சமுதாயத்தின் பிந்திய காலத்தில் வருகின்ற பெண்கள் ஆடை அணிந்தும் [உண்மையில்] நிர்வாணமாக இருப்பார்கள். அவர்களின் தலைகள் மீது ஒட்டகங்களுடைய திமில் போன்றவை [சிகை அலங்காரமாக] இருக்கும். அவர்களைச்  சபியுங்கள்,, நிச்சயமாக அவர்கள் சபிக்கப்பட  வேண்டியவர்களே!
[அல்மு அஜம் அஸ்ஸகீர் ]

மேலும் கூறினார்கள்.. இரண்டு வகையினர் நரகவாசிகளில்  உள்ளவர்கள். அவர்களை நான் பார்த்ததில்லை. முதல் கூட்டத்தினர், பசுமாட்டின் வாலைப்  போன்ற [நீண்ட] சாட்டைகளை  வைத்துக்கொண்டு மக்களை அடி  [த்துஇம்சி ] ப்பார்கள்  .ம் மற்றோரு கூட்டத்தினர் ஆடை அணிந்திருந்தும் நிர்வாணமாகக் காட்சி தரும் பெண்கள். அவர்கள் பிறரைத் தம் பக்கம் சாய்ப்பவர்கள்,, தாமும் பிறர் பக்கம் சாய்வார்கள். அவர்களுடைய தலை [யிலுள்ள கூந்தல் அலங்காரம்] கழுத்து நீண்ட ஒட்டகங்களின் [இரு பக்கம்] சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். [ஏன் ] சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத்  தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும்.
ஸஹீஹ் முஸ்லிம் ]

பர்தாவின் நறுமணம் பூசுவதைத் தவிர்க்க வேண்டும்.

நறுமணம் பூசிக்கொண்டும், கூந்தலில் பூக்களைச்  சூடிக்கொண்டும் வெளியே செல்கின்ற பெண்களை நபி [ஸல்] கண்டித்தார்கள்.

எந்தப்  பெண் நறுமணம் பூசிய நிலையில் அதை மக்கள் நுகர்கிறபடி அவர்களுக்கு மத்தியில் நடந்து செல்கிறாளோ அவள் விபச்சாரியாவாள்.
நூல்.. முஸ்னது  அஹ்மது]
மேலும் கூறினார்கள்  ..
ஒரு பெண் நறுமணம் பூசி மஸ்ஜிதுக்குச் செல்வாளேயானாள் , அவள் பெருந்தொடக்குக்காக குளிப்பது போன்று குளிக்கும் வரை அவளின் தொழுகை ஒப்புக் கொள்ளப்  படாது.
முஸ்னது அஹ்மது]
இன்ஷாஅல்லாஹ் இன்னும் தொடரும்....
இஸ்லாமிய கண்மணிகளே! அறிந்துக் கொள்ளுங்கள்! மற்ற பெண்களுக்கு அறிவித்து விடுங்கள்! 

கருத்துகள்