அல்லாஹ்வின் திருப்பெயரால் ......
ஒரு நல்ல முஸ்லிம் பெண்மணி தன் வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது மார்க்கம் அவளுக்கு கட்டளை இட்டுள்ள ஆடை ஒழுக்கங்களைக் கடைபிடிக்க வேண்டும். அதைத்தான் ஹிஜாப், பர்தா என்று கூறப்படுகிறது. ஒரு பெண் இந்த ஒழுங்கைக் கடைபிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது,, அந்நிய ஆண்களுக்கு முன் நிற்கக் கூடாது. இது அல்லாஹ்வினால் திட்டவட்டமாக தடை செய்யப்பட்டதாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்..
[நபியே] அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு நீர் கூறும்.. அவர்களும் தங்கள் பார்வைகளைக் கீழ்நோக்கியே வைக்க வேண்டும்,, தங்கள் கற்புகளையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அத்துடன், தங்கள் அலங்காரங்களில் வெளியில் இருக்கக்கூடியவற்றை தவிர மற்றதை வெளிக்காட்ட வேண்டாம். தங்கள் துப்பட்டாக்களை தங்கள் மேலாடைகளின் மீது போட்டு [தலை, முகம், கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை ]க் கொள்ள வேண்டும்.
பெண்கள்..
1] தங்களுடைய கணவர்கள்,
2]தங்களுடைய தந்தைகள்,
3]தங்களுடைய கணவர்களின் தந்தைகள் [மாமனார்கள் ]
4]தங்களுடைய பிள்ளைகள்,
5]தங்களுடைய கணவர்களின் [மற்ற மனைவிகளுக்குப் பிறந்த] பிள்ளைகள்,
6]தங்களுடைய [சொந்த அண்ணன் , தம்பிகளாகிய ] சகோதரர்கள்,
7]தங்களுடைய சொந்த சகோதர்களின் பிள்ளைகள்,
8]தங்களுடைய சகோதரிகளின் பிள்ளைகள்,
9][முஸ்லிமாகிய ] தங்களுடைய சமுதாய பெண்கள்,
10]தங்களுடைய அடிமைகள் ,
11][பெண்கள் மீது மோகமற்ற ] தங்களை அண்டி வாழுகின்ற ஆண்கள்,
12] பெண்களின் மறைவான அவயங்களை அறிந்து கொள்ளாத சிறுபருவத்துடைய [ஆண் ] குழந்தைகள் ஆகிய இவர்களைத் தவிர மற்ற எவர் முன்பும் தங்களின் அலங்காரத்தை அறவே வெளிப்படுத்த வேண்டாம்.
மேலும், [தாங்கள் அணிந்துள்ள கால் கொலுசுகள், வளையல்கள் போன்ற] மறைந்திருக்கக்கூடிய தங்கள் [ஆடை ஆபரண] அலங்காரத்தை அறிவிக்கின்ற நோக்கத்துடன் தங்கள் கால்களை [பூமியில்] தட்டித் தட்டி நடக்க வேண்டாம். அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களே! [இதில் எந்த விஷயத்திலேனும் உங்களால் தவறு ஏற்பட்டு விட்டால்] நீங்கள் வெற்றி பெரும் பொருட்டு அல்லாஹ்வின் பக்கமே பாவ மன்னிப்புக் கோருங்கள்.
சூரா அந்நூர் 24..31]
அரைகுறை ஆடை -ஓர் ஒழுக்கக்கேடு
அல்லாஹ்வுடைய சட்டதிட்டங்களை விட்டும், அவனுக்குக் கீப்படிவத்தை விட்டும் விலகி நிற்கின்ற மாற்று மதத் சமுதாயங்களில் இன்று பல பெண்கள் அரைகுறை ஆடையுடன் ஆபாசமாகச் சுற்றித் திரிவதைக் காண்கிறோம். இன்னும் பலர், அலங்காரமான ஆடைகளை அணிந்து அந்நியர்களும் பார்த்து இரசிக்கும்படி சுற்றி வருகின்றார்கள். அவர்களில் ஒருத்தியாக முஸ்லிம் பெண்மணி இத்தருணத்தில் இருக்கக் கூடாது.
அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் [ஸல்] கூறினார்கள்..
இரண்டு கூட்டத்தினர் நரகவாசிகளில் உள்ளவர்கள். அவர்கள் இரண்டு சாராரையும் நான் பார்த்ததில்லை. முதல் கூட்டத்தினர். பசு மாட்டின் வாலைப் போன்ற [நீண்ட] சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக் கொண்டு மக்களை அடி [த்து இம்சி ] ப்பார்கள் மற்றொரு கூட்டத்தினர் [தாம்] ஆடை அணிந்திருந்தும் நிர்வாணமாகக் காட்சி அளித்த பெண்கள். அவர்கள் பிறரைத் தம் பக்கம் சாய்த்து, தாமும் பிறர் பக்கம் சாய்ந்தவர்கள். அவர்களுடைய தலை [யிலுள்ள கூந்தல் அலங்காரம்] கழுத்து நீண்ட ஒட்டகங்களின் [இரு பக்கம்] சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்,, [ஏன் ] சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக்கொண்டிருக்கும்.
ஸஹீஹ் முஸ்லிம் ]
ஷைத்தானின் வழிகேடு
அந்நியருக்கு அலங்காரங்களைக் காட்டுவது ஷைத்தானின் வழிகேடாகும். ஒரு பெண் தன்னுடைய ஆடை அலங்காரங்களைக் காட்டித் திரிவதால் ஏராளமான தீமைகள் ஏற்படுகின்றன. சமுதாயத்தில் ஒழுக்கச் சீர்குலைவுகள் உண்டாகின்றன. ஷைத்தான் பெண்களைக் கொண்டு பல மானக்கேடான செயல்களைத் தூண்டிவிடுகிறான். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சபலங்களை உண்டாக்கி, தகாத உறவுகளையும் குடும்பத்தில் குழப்பங்களையும் ஏற்படுத்துகிறான்.
அல்லாஹ் கூறுகிறான்..
நீங்கள் தீமைகள் மற்றும் மானக்கேடானவற்றை செய்வதற்கும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது [பொய்யாக] கூறுவதற்குமே ஷைத்தான் உங்களைத் தூண்டுகிறான்.
சூரா அல்பகரா 2..268]
ஆடை அலங்காரங்களை வெளிப்படுத்திக் கொண்டு செல்கின்ற பெண்களைப் பற்றி நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. ஒரு பெண் [நடந்து வந்தால்] ஷைத்தான் [தூண்டிவிடும்] கோலத்திலேயே எதிர் நோக்கி வருகிறாள் ,, ஷைத்தான் [தூண்டி விடும்] கோலத்திலேயே திரும்பிச் செல்கிறாள்.
ஸஹீஹ் முஸ்லிம் ]
மேலும் கூறினார்கள்..
எனது மரணத்திற்கு பின் ஆண்களுக்கு மிகவும் தீங்கை ஏற்படுத்தக்கூடிய குழப்பம், பெண்களைவிட வேறொன்றுமில்லை.
ஸஹீஹுல் புகாரி]
இன்னும் கூறினார்கள்..
இவ்வுலகின் குழப்பத்தை விட்டு உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்,, பெண்களின் குழப்பத்தை விட்டும் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இஸ்ரவேலர்களிடையே ஏற்பட்ட முதல் குழப்பம் பெண்களால்தாம் ஏற்பட்டது.
ஸஹீஹ் முஸ்லிம் ]
இப்படிப்பட்ட பெண்களில் ஒருத்தியாக முஸ்லிம் பெண் இருக்கக் கூடாதென அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
நீங்கள் உங்கள் [வீடுகளில் இருந்து வெளிச்சென்று திரியாது] வீடுகளுக்குள்ளாகவே தங்கி இருங்கள். முன்னிருந்த அறியாத மக்கள் [தங்களை அலங்கரித்துக் கொண்டு வெளியில் சென்று] திரிந்து கொண்டிருந்ததைப்போல் நீங்களும் திரியாதீர்கள். தொழுகையைக் கடைப் பிடியுங்கள்,, ஸகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நடங்கள்.
சூரா அல் அஹ்ஸாப் 33..33]
இன்ஷாஅல்லாஹ் இன்னும் தொடரும்..
இன்னும் அறியவேண்டிய நிறைய விடயங்கள் இருக்கிறது ஹிஜாப் அதன் முறை .. படிக்க தவறாதீர்கள்! மற்றவர்களுக்கு ஷேர் செய்ய மறக்காதீர்கள்! அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக....
அல்லாஹ் மிக்க அறிந்தவன்..
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!