بسم الله الرحمن الرحيم
கண்காணிப்பாளன் அல்லாஹ்
( وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ رَّقِيبا( 33:52
மேலும், அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவன்.
( إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبا (النساء:1
நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.
அல்லாஹ்வின் கண்கனிப்பு எல்லா பொருட்களின்மீதும் இருப்பது போன்றே நம்மீதும் இருக்கிறது அவனது கண்கானிப்பிலிருந்து எவரும் தப்பிவிட முடியாது என்பதை முதலில் விளங்கிக்கொள்ளவேண்டும் அல்லாஹ்வின் கண்கானிப்பை முழுமையாக நம்பி வாழ்கின்றபொழுது ஏற்படும் பலன்கள் :
1.தனிமையிலும், பகிரங்கமான நிலையிலும் தீமையிலிருந்து விலகி வாழ முடியும். அல்லாஹ் கூறுகிறான் :
إِنَّ اللَّهَ لا يَخْفَى عَلَيْهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلا فِي السَّمَاءِآل عمران:5
வானத்திலோ, பூமியிலோ உள்ள எப்பொருளும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு மறைந்திருக்கவில்லை. (அல்குர்ஆன்: 3:5)
2.நம்முடைய பேச்சு பகிரங்கமாகவோ, இரகசியமாகவோ எப்படி இருந்தாலும் அப்பேச்சுக்களில் நல்லதை மட்டுமே பேசமுடியும். அல்லாஹ் கூறுகிறான் :
أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأَرْضِ مَا يَكُونُ مِن نَّجْوَى ثَلاثَةٍ إِلاَّ هُوَ رَابِعُهُمْ وَلا خَمْسَةٍ إِلاَّ هُوَ سَادِسُهُمْ وَلا أَدْنَى مِن ذَلِكَ وَلا أَكْثَرَ إِلاَّ هُوَ مَعَهُمْ أَيْنَ مَا كَانُوا ثُمَّ يُنَبِّئُهُم بِمَا عَمِلُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّ اللَّهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ (58:7
நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலுள்ளவற்றையும் பூமியிலுள்ளவற்றையும் அறிகிறான் என்பதை நீர்; பார்க்கவில்லையா? மூன்று பேர்களின் இரகசியத்தில் அவன் அவர்களில் நான்காவதாக இல்லாமலில்லை, இன்னும் ஐந்து பேர்களி (ன் இரகசியத்தி)ல் அவன் ஆறாவதாக இல்லாமலில்லை, இன்னும் அதைவிட மிகக் குறைந்தோ, அதைவிட மிக அதிகமாகவோ, அவர்கள் எங்கிருந்தாலும் அவன் அவர்களுடன் இல்லாமலில்லை – அப்பால் கியாம நாளில் அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அவன் அறிவிப்பான், நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களைப் பற்றியும் நன்கறிந்தவன். (அல்குர்ஆன்: 58:7)
3.பார்வைகளில் செய்யும் தவறுகளிலிருந்து விலகிக் கொள்ளமுடியும். அல்லாஹ் கூறுகிறான் :
( يَعْلَمُ خَائِنَةَ الأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ (40:19
கண்கள் செய்யும் மோசத்தையும்,(சாடைகளையும்) உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான். (அல்குர்ஆன்: 40:19).
4.மனதின் எண்ண ஓட்டங்கில் ஏற்படும் தீமைகிளிலிருந்து விடுபடமுடியும். அல்லாஹ் கூறுகிறான் :
( وَلَقَدْ خَلَقْنَا الإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ (50:16
மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி (யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். (அல்குர்ஆன்: 50:16)
5.எல்லா செயல்களும் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது என்ற காரணத்தினால் நம்முடை செயல் சிறந்த செயலாக அமைய வாய்ப்பிருக்கிறது. அல்லாஹ் கூறுகிறான் :
( إنَّا نَحْنُ نُحْيِي الْمَوْتَى وَنَكْتُبُ مَا قَدَّمُوا وَآثَارَهُمْ وَكُلَّ شَيْءٍ أحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُبِينٍ (36:12
நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்அன்றியும் (நன்மை, தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும், நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம்.:(அல்குர்ஆன்: 36:12)
5.வணக்கங்கள் செய்கின்றபொழுது நாம் அல்லாஹ்வை பார்க்காவிட்டாலும் அல்லாஹ் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற பயத்துடன் வணக்கங்களை அல்லாஹ்விற்கு மட்டுமே சரியாக செய்யமுடியும்.
நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரயீல்(அலை) அவர்கள் கேட்ட கேள்விக்கான பதில் :
عن الإحسان قال: ((أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك (متفق عليه
بسم الله الرحمن الرحيم
கண்காணிப்பாளன் அல்லாஹ்
( وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ رَّقِيبا( 33:52
மேலும், அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவன்.
( إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبا (النساء:1
நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.
அல்லாஹ்வின் கண்கனிப்பு எல்லா பொருட்களின்மீதும் இருப்பது போன்றே நம்மீதும் இருக்கிறது அவனது கண்கானிப்பிலிருந்து எவரும் தப்பிவிட முடியாது என்பதை முதலில் விளங்கிக்கொள்ளவேண்டும் அல்லாஹ்வின் கண்கானிப்பை முழுமையாக நம்பி வாழ்கின்றபொழுது ஏற்படும் பலன்கள் :
1.தனிமையிலும், பகிரங்கமான நிலையிலும் தீமையிலிருந்து விலகி வாழ முடியும். அல்லாஹ் கூறுகிறான் :
إِنَّ اللَّهَ لا يَخْفَى عَلَيْهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلا فِي السَّمَاءِآل عمران:5)
வானத்திலோ, பூமியிலோ உள்ள எப்பொருளும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு மறைந்திருக்கவில்லை. (அல்குர்ஆன்: 3:5)
2.நம்முடைய பேச்சு பகிரங்கமாகவோ, இரகசியமாகவோ எப்படி இருந்தாலும் அப்பேச்சுக்களில் நல்லதை மட்டுமே பேசமுடியும். அல்லாஹ் கூறுகிறான் :
أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأَرْضِ مَا يَكُونُ مِن نَّجْوَى ثَلاثَةٍ إِلاَّ هُوَ رَابِعُهُمْ وَلا خَمْسَةٍ إِلاَّ هُوَ سَادِسُهُمْ وَلا أَدْنَى مِن ذَلِكَ وَلا أَكْثَرَ إِلاَّ هُوَ مَعَهُمْ أَيْنَ مَا كَانُوا ثُمَّ يُنَبِّئُهُم بِمَا عَمِلُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّ اللَّهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ (58:7
நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலுள்ளவற்றையும் பூமியிலுள்ளவற்றையும் அறிகிறான் என்பதை நீர்; பார்க்கவில்லையா? மூன்று பேர்களின் இரகசியத்தில் அவன் அவர்களில் நான்காவதாக இல்லாமலில்லை, இன்னும் ஐந்து பேர்களி (ன் இரகசியத்தி)ல் அவன் ஆறாவதாக இல்லாமலில்லை, இன்னும் அதைவிட மிகக் குறைந்தோ, அதைவிட மிக அதிகமாகவோ, அவர்கள் எங்கிருந்தாலும் அவன் அவர்களுடன் இல்லாமலில்லை – அப்பால் கியாம நாளில் அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அவன் அறிவிப்பான், நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களைப் பற்றியும் நன்கறிந்தவன். (அல்குர்ஆன்: 58:7)
3.பார்வைகளில் செய்யும் தவறுகளிலிருந்து விலகிக் கொள்ளமுடியும். அல்லாஹ் கூறுகிறான் : ( يَعْلَمُ خَائِنَةَ الأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ (40:19
கண்கள் செய்யும் மோசத்தையும்,(சாடைகளையும்) உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான். (அல்குர்ஆன்: 40:19).
4.மனதின் எண்ண ஓட்டங்கில் ஏற்படும் தீமைகிளிலிருந்து விடுபடமுடியும். அல்லாஹ் கூறுகிறான் : ( وَلَقَدْ خَلَقْنَا الإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ (50:16
மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி (யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். (அல்குர்ஆன்: 50:16)
5.எல்லா செயல்களும் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது என்ற காரணத்தினால் நம்முடை செயல் சிறந்த செயலாக அமைய வாய்ப்பிருக்கிறது. அல்லாஹ் கூறுகிறான் : ( إنَّا نَحْنُ نُحْيِي الْمَوْتَى وَنَكْتُبُ مَا قَدَّمُوا وَآثَارَهُمْ وَكُلَّ شَيْءٍ أحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُبِينٍ (36:12
நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்அன்றியும் (நன்மை, தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும், நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம்.:(அல்குர்ஆன்: 36:12)
5.வணக்கங்கள் செய்கின்றபொழுது நாம் அல்லாஹ்வை பார்க்காவிட்டாலும் அல்லாஹ் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற பயத்துடன் வணக்கங்களை அல்லாஹ்விற்கு மட்டுமே சரியாக செய்யமுடியும்.
நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரயீல்(அலை) அவர்கள் கேட்ட கேள்விக்கான பதில் :
عن الإحسان قال: ((أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك (متفق عليه(
இஹ்ஸான் என்றால் என்ன? என்று அவர் கேட்டதற்குவர்கள் கூறினார்கள்: (இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் நிச்சயமாக அவன் உம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான் என்றார்கள். (புகாரி, முஸ்லிம்)
6.எந்நிலையிலும் நம்மை கை விட்டுவிடமாட்டான் என்ற முழுமையான நம்பிக்கை உருவாகும். அல்லாஹ் கூறுகிறான் :
إِلاَّ تَنصُرُوهُ فَقَدْ نَصَرَهُ اللَّهُ إِذْ أَخْرَجَهُ الَّذِينَ كَفَرُواْ ثَانِيَ اثْنَيْنِ إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لاَ تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا فَأَنزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَيْهِ وَأَيَّدَهُ بِجُنُودٍ لَّمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ الَّذِينَ كَفَرُواْ السُّفْلَى وَكَلِمَةُ اللَّهِ هِيَ الْعُلْيَا وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ (9:40
(நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யா விட்டால், (அவருக்கு யாதொரு இழப்புமில்லை) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றியபோது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான்; குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழரிடம், ”கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் அமைதியை இறக்கி வைத்தான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்; நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான்; ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும் அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன். (அல்குர்ஆன்: 9:40)
உலகில் எந்த கண்கானிப்புகளில் இருந்தும் தப்பி விடலாம் எனவே படைத்த ரப்பு அல்லாஹ்வின் கண்கானிப்பு மிகவும் பலமானது என்பதை உணர்ந்து செயல்பட்டு அவனுடைய அருளை பெற்ற நல்லமக்களாக நம் யாவரையும் அல்லாஹ் ஆக்கியருள்வானாக!

கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!