RECENT POSTS

அண்ணலார் கூறிய அழகிய உவமைகள் ...

அண்ணலார் கூறிய அழகிய உவமைகள் ...
அல்லாஹ்வின் திருப்பெயரால்..
மலருக்கு மனம் அழகு ! மங்கைக்கு நாணம் அழகு! மொழிக்கு உவமை அழகு!
உவமைகள் இல்லாத மொழி ஊமை மொழி  என்று துணிந்து சொல்லி விடலாம்..

தமிழைத் போலவே அரபியும் தொன்மையான மொழிகளில் ஒன்று .

இறைத்தூதர் கூறிய இனிய உவமைகள் இரண்டை மட்டும் இங்கு எடுத்துக் கொள்வோம்.
 இந்த உலகில் தாம் இறைத்தூதராய் அனுப்பப்பட்டதின் நோக்கம் குறித்தும் தம்முடைய பணி எத்தகையது  என்பதையும் எவ்வளவு அழகாகச் சொல்கிறார்கள்  பாருங்கள்!



மாமன்னன் ஒருவன் ஓர் அழகான மாளிகையைக் கட்டினான். அதில் ஒரு விருந்திருக்கும் ஏற்பாடு செய்தான். அந்த விருந்திற்காக மக்கள் அனைவரையும்  அழைக்கும்படி ஒரு தூதரையும் அனுப்பினான். மன்னனின் அழைப்பை ஏற்று, அந்த மாளிகையினுள் நுழைந்து விருந்தைப் புசித்தவர்கள் . மன்னனின் மகிழ்ச்சியையும்  வெகுமதிகளையும் பெற்றுக்கொண்டார்கள் . அவனுடைய அழைப்பை புறக்கணித்து விட்டு, அந்த மாளிகையினுள் நுழையாமல் விருந்தை இழந்தவர்கள் , அரசனின் கோபத்தை சம்பாதித்து கொண்டார்கள். இறைவன் தான் அந்த மன்னன் . முஹம்மது [ஸல்]  தான் அந்தத் தூதர் . இஸ்லாம் தான் அந்த மாளிகை . சொர்க்கமே அந்த விருந்து .
ஆஹா ..!!! இதை படிக்கும்போதே அந்தச் சொர்க்க விருந்து நமக்கு கிடைக்காதா என மனம் ஏங்குகிறது அல்லவா !

இறைத்தூதர் கூறிய இன்னொரு உவமையைப் பாருங்கள்!

'' நெருப்பு இருந்துகொண்டிருக்கிறது , பூச்சிகள் அந்த நெருப்புக்குள்  விழுங்கின்றன , ஒரு மனிதர்  ஓடோடி வந்து அந்தப் பூச்சிகளை நெருப்புக்குள் விழாமல் தடுக்கிறார் . நான் அந்த மனிதனுக்கு ஒப்பாவேன் ! நரக நெருப்பில் நீங்கள் விழுந்துவிடாமல்  உங்களைக் காப்பாற்ற பாடுபடுகிறேன் . ஆனால், நீங்களோ என் கைகளைத் தட்டி விட்டுச் செல்கிறீர்கள்  .''

இந்த உவமை நயங்கள் பற்றி உண்மைகளை புரிந்து நடந்தால்  நம் வாழ்க்கையும்  நலம் பெரும், வளம் பெரும்!

கருத்துகள்

கருத்துரையிடுக

Welcome to your comment!