நல்ல மனைவியைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்

Read Mufti Menk Quotes in Tamil
  அல்லாஹ்வின் திருப்பெயரால் .....  நல்ல மனைவியைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான் :

நல்லொழுக்கமுள்ள பெண்கள் அல்லாஹ்வுக்கும் கணவனுக்கும் பணிந்தே நடப்பார்கள். தங்கள் கணவர் மறைவாக இருக்கும் சமயத்தில் பாதுகாக்க வேண்டியவற்றை (அல்லாஹ்வின் பாதுகாவல்கொண்டு) பாதுகாப்பார்கள் .

அந்நிஸா வசனம்: 34)


அல்லாஹ் கூறுவது செய்தியாக இருந்தாலும் மனைவி தன் கணவனுக்கு கட்டுப்பட வேண்டும்மென்றும், கணவன் மறைவாக இருக்கும் சமயத்தில் அவரின் செல்வத்தை, பொருளாதாரத்தை, பிள்ளைகளை, தன்கற்பை பாதுகாக்க வேண்டும் என்று ஆணையிடுவது தான் இந்த வசனத்தின் நோக்கம்.


நல்ல மனைவியைப் பற்றி உலகத்தார்களின் அருளாகிய அருமை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

உலகம் ஒரு செல்வம். உலக செல்வங்களில் மிகச் சிறந்தது நல்ல மனைவியாகும் .

(முஸ்லிம் 1467)


நல்ல மனைவி ஆக ஒவ்வொரு பெண்ணுக்கும் உள்ளத்தில் ஆசைதான் . தன் கணவனை அன்பு கொள்ள நேசிக்க, சந்தோஷப்படுத்த அவர் உள்ளத்தால் மனைவியை பிரியம்கொள்பவராக ஆகவேண்டும் என விரும்புகிறாள். வீட்டின் சூழ்நிலை மனநிறைவானதாக, மகிழ்ச்சியானதாக நற்பாக்கியமானதாக ஆக நாடுகிறான்.


இந்த உள்ளத்தில் ஆசை எப்படி பூர்த்தியாகும்? ஒரு பெண் சிறந்த , நல்ல மனைவியாக எப்படி ஆக முடியும்? அவளிடம் எந்த தன்மைகள் இருக்கவேண்டும். அந்த அடிப்படையில் இந்த உயர்ந்த நோக்கத்தை அடைய முடியும் என்ற விபரங்களை அறிய இந்த கட்டுரையை தொடர்ந்து படித்து வாருங்கள் .


நல்ல மனைவின் அடிப்படை அடையாளங்கள்:

நல்ல மனைவியின் சில தெளிவான அடையாளங்கள், சிறந்த தன்மைகள் உள்ளன.அவைகளை ஈருலகத்தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருங்கிணைந்து மூன்று அடிப்படை தன்மைகளில் கூறியுள்ளார்கள்:


1. கணவர் ஆணையிட்டால் மனைவி வழிப்படுவாள் .

2. கணவர் தம் மனைவியைப் பார்த்தால் அவரை சந்தோஷப்படுத்துவாள் .

3. கணவர் மறைவாக இருக்கும் நிலையில் தனையும் கணவரின் பொருளாதாரத்தையும் பாதுகாப்பாள் . இவள் தான் மிகச் சிறந்த பெண் .

(முஸ்னத் அஹ்மத் 201)


முதல் தன்மை நல்ல மனைவியின் சீரிய தன்மை 

தன் கணவரை சந்தோஷப்படுத்துவது, மனைவியின் மீது கணவரின் பார்வை பட்டவுடன் மகிழ்ச்சியை காட்டுவது மிகச் சிறந்த தன்மையாகும். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை, அல்லாஹ்வின் அச்சம் உள்ளபெண் மிக சந்தோஷமான மகிழ்ச்சியான இல்லற  வாழ்க்கையை பெறமுடியும். கணவரின் அன்பு, பாசத்துக்குரியவளாக ஆகிவிடலாம். சிந்திப்பீராக! ஆண்கள் உலக விஷயங்களுக்காக வீட்டிலிருந்து வெளியே செல்கிறார்கள் . தன்  உடலால்,சிந்தனையால் பெரும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள். பலவித கஷ்ட்டங்களை சகிக்கிறார்கள்.வீட்டிற்கு சென்று நிம்மதி சுகம் பெறலாம் என எதிர்பார்க்கிறார்கள். மிக பாடுப்பட்டு , கஷ்ட்டப்பட்டு வீட்டிற்கு வந்தபின் தன் மனைவியிடம் கணவரை சந்தோஷப்படுத்தும் நிலை இல்லையெனில் இது இல்லற வாழ்க்கையில் முதல் கட்ட தோல்விதான் என்று கருத்தாகும்.

பல சமயம் கணவர் பல கவலைகள், இன்னல்களில் சிக்கி தவிக்கிறார். வீட்டில் வந்தபின் மனைவியிடம் சந்தோஷம் , மகிழ்ச்சி, வரவேற்பு, ஆறுதல் கிடைத்தால் உள்ளத்தின் பாரங்கள் , கவலைகள், உடல் அசதி அனைத்தையும் மறந்துவிடுவார். எனவே கணவரின் பார்வை பட்டவுடன் அவரை சந்தோஷப்படுத்துவது அவரின் உள்ளத்தில் மனைவியின் மீது அன்பு பாசம் ஏற்படுவதற்கு மிகப்பெரிய காரணம் என்பதை அறியவேண்டும். ஒரு முஸ்லிமான பெண் மிகப்பாக்குவமாக , பேணுதலாக நடந்து கொள்வது மிக அவ வசியமானது. பிடிக்காத வெறுப்பூட்டும் காட்சியை அவர் பார்த்து விடாமல் முக மலர்ச்சியை காட்டவேண்டும். இஸ்லாம் அனுமதிக்கும் மருதாணி பூசுவது, தங்க, வெள்ளி நகைகள், சிறந்த ஆடைகள் அணிவது போன்றவைகளால் தன்  கணவரை தன் பக்கம் ஈர்ப்பவர்களாக ஆக்க வேண்டும்.

(சிலர் பகலிலும் நைட்டியை அணிந்து கொண்டு தன் கணவருக்கும் முன் காட்சி அளிக்கும் பெண்களும் இருக்கிறார்கள் , இதை தவிர்க்கவும். இரவில் மட்டும் அணியவேண்டிய இந்த ஆடையை பகலிலும் அணிவது கூடாது. சில கர்ப்பிணி பெண்கள் வசதிக்காக அணிகிறார்கள் அது வேறு விஷயம். )

ஈருலகத்தலைவர் அருமை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நாற்பதாவது வயதில் ஹீரா குன்றில் முதல் வஹீ ஜிப்ரயீல் (அலை) கொண்டுவந்தார்கள் . ஆரம்பநிலையால்  பதட்டத்தில், கவலையில் வீட்டிற்கு வந்து தன்  துணைவியார் கதீஜா அம்மையார் (ரலி) அவர்களிடம் நடந்தவைகளை சொன்னார்கள். தாங்கள் கவலைப்பட வேண்டாம்; அல்லாஹ் ஒரு பொழுதும் உங்களைப் போன்றவர்களை வீணாக்கமாட்டான் என்று ஆறுதல் கூறினார்கள்  . பிறகு முன் வேதங்களை அறிந்த வரகா பின் நௌபல் இடம்  சென்றார்கள். அவர் மிகப்பெரிய நன் மாராயம் திருப்தியான விஷயங்கள் சொன்னார்.அதன்பின் நபியவர்களுக்கு நிம்மதி ஏற்பட்டது. உலகப் பெண்களுக்கு எல்லாம் ஹஜ்ரத் கதீஜா அம்மையாரின் செயல் மிகப்பெரிய பாடம். ஆகவே பிரச்சனைகள் வரும்போது தன் கணவருக்கு ஆறுதல் சொல்லி நிம்மதி  பெற்றவராக, உள்ளத்தில் சுமை நீங்கியவராக ஆக்குவது ஒவ்வொரு மனைவியின் பொறுப்பாகும்.

என் மனைவி எனக்காக அலங்கரிப்பது போல் நானும் என் மனைவிக்காக  கொள்கிறேன் என்று ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகிறார்கள். இதுவும் ஒரு நல்லதொரு படிப்பினைதான்.


இன்ஷாஅல்லாஹ் தொடரும் ...........









கருத்துகள்