நீங்களும் நல்ல மனைவியாகலாம்! இன்ஷாஅல்லாஹ் !


நீங்களும் நல்ல மனைவியாகலாம்! இன்ஷாஅல்லாஹ்  !

 கணவர் கவலையில் இருந்தால் அவரிடம் சந்தோஷத்தைக் காட்டாமல் அவரின் கவலையில் பங்கெடுத்து ஆறுதல் அளிக்கவும்! அவர் சந்தோஷமாக இருந்தால் அப்பொழுது கவலையைக் காட்டக்கூடாது ! 


கணவரின் பழக்க வழக்கங்களின் தன்மைகளை அறிந்து கவனத்தில் வைக்க வேண்டும்! அவரின் ரகசியங்களை அம்பலப்படுத்தக் கூடாது. இதை கவனிக்கா விட்டால் கணவருக்கு கோபம் உண்டாகி பின்விளைவுகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது.


தன் பெற்றோர்களை நேசிப்பது போல் கணவரின் பெற்றோர்களை (மாமியார், மாமனார் ) நேசிப்பவள் நல்ல மனைவி.


தன் கணவரின் குடும்பத்தார்கள் சந்தோஷ நிலையில் சந்தோஷமாகவும் , கவலை துக்க நிலையில் அவர்களுடன் தானும் கவலைப்படுபவள் நல்ல மனைவி.


தன் கணவரின் பெற்றோர்ககளிடம் அவர்கள் கவலைப்படாத அளவுக்கு மிகப் பேணுதலாக நடந்து கொள்பவள் நல்ல மனைவி . ஆரம்பத்திலிருந்து கடைசிவரை எல்லா நேரங்களிலும் கணவரின் பெற்றோர்களை கவனிக்கின்றேன். அழகான பேச்சுக்களால் பொருளாதார உதவிகளால் அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்கிறேன். என்று தன் கணவரின் சிந்தனையில் பதியவைப்பவள் நல்ல மனைவி .


''நீங்கள் ஹலாலான வருமானத்தை தான் பெறுகிறீர்கள் ; எங்களுக்கு செலவு செய்கிறீர்கள்; இது சத்தியம்! என் காரணமாக நீங்கள் நரகத்திற்கு செல்லமாட்டீர்கள்  என்று கூறுபவள் நல்ல மனைவி !


கணவரிடம் '' நீங்கள் உங்கள் பெற்றோர்களை கவனியுங்கள்; அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்! சொந்தபந்தத்தை இணையுங்கள்! அவர்களுக்கு உதவி உபகாரம் செய்யுங்கள்! என்று கூறுபவள் நல்ல மனைவி !


கணவருடன் பிரச்சனை ஏற்பட்டால் குடும்பத்திலுள்ள மற்றவர்களிடம் சொல்லாமல் தானே தன் வீட்டிற்குள்ளே வீட்டுச் சொல்; வெளியே செல்லாத அளவுக்கு சமாளிப்பவள் நல்ல மனைவி !


ஒரு கிராமப் பெண் ; தன்மகளுக்கு உபதேசம் செய்தாள்: ' தன் விருப்பத்தை வீட்டுக் கொடுத்து கணவரின் விருப்பத்தை நிறைவேற்றினால்தான் கணவரின் சந்தோஷத்தை பெற முடியும்' என்பதை  அறிந்து கொள்! என்று கூறினார் !.


நீங்களும் நல்ல மனைவியாகலாம்! இன்ஷாஅல்லாஹ்  !

கருத்துகள்