நன்மை தேடுபவரே, முன் வா! தீமையை நாடுபவனே, நிறுத்து!'
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ரமழான் மாதத்தின் முதல் இரவாக இருக்கும் போது, ஷைத்தான்களும், கலகக்கார ஜின்களும் கட்டிப் போடப்படுகின்றனர். நரகத்தின் கதவுகள் மூடப்பட்டுள்ளன, அதன் கதவுகள் எதுவும் திறக்கப்படவில்லை. சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன, அதன் கதவுகள் எதுவும் மூடப்படவில்லை. ஒரு அழைப்பாளர் அழைக்கிறார்: 'ஓ நன்மை தேடுபவரே, முன்வாருங்கள்! தீமையை நாடுபவனே, நிறுத்து!' நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு இரவிலும் அடிமைகளை நரக நெருப்பிலிருந்து விடுவிக்கின்றான்” (திர்மிதி).
புனிதமான மாதத்தில் நாம் நுழையும் போது, நமது அன்பிற்குரிய நபி (ஸல்) அவர்கள் செய்தது போல் நாமும் பிரார்த்திப்போம்:
இன்ஷாஅல்லாஹ் ரமலான் நம்மை நோக்கி நெருங்கிகொண்டுயிருக்கிறது. அந்த ஒருமாதம் நாம் எல்லோரும் மனஉறுதியுடன் சமூக ஊடகங்களில் இருந்து விலகி , அல்லாஹ்வுக்காக ஒருமாதம் காலம் இருப்பதற்கு நாம் அனைவரையும் முயற்சி எடுப்போம். இந்த விடயத்தில் நாம் எல்லோரும் உறுதியாக இருப்போம்!
நாம் அந்த புனித மாதம் ரமலான் முழுவதும் அல்லாஹ்வின் இணைப்பில் இருப்போம். மற்ற விடயத்தில் இருந்து துண்டிப்போம் . இதுதான் பணிவான வேண்டுகோள்!
அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!!!! ஆமீன்...
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!