படைத்து நமக்கு எல்லாவற்றையும் குறைவின்றி நிறைவாகக் கொடுத்துக் கொண்டிருக்கின்றானோ அத்தகைய இறைவனின் அன்பு நமக்கு வேண்டும். இறைவனும் அதைத்தான் கேட்கும் படி சொன்னான்.
اللهم اني اسالك حبك وحب من يحبك وحب عمل بقربني الي حبك
யா அல்லாஹ்! உன் பிரியத்தையும் உன் அன்பர்களின் பிரியத்தையும் உன் அன்பின் அளவில் நெருக்கி வைக்கும் அமலின் பிரியத்தையும் நான் உன்னிடம் கேட்கிறேன் என்று நபி ﷺ அவர்களை துஆ கேட்கும்படி அல்லாஹ் கூறினான். (திர்மிதி ; 3235)
நபி ஸல் அவர்கள் மட்டுமல்ல இறைவனால் அனுப்பப்பட்ட எல்லா நபிமார்களும் தங்கள் வாழ்வில் இதைத்தான் பிரதானமாக கேட்டார்கள்.
كان من دعاء داود يقول اللهم إني أسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغني حبك اللهم اجعل حبك أحب إلي من نفسي وأهلي ومن الماء البارد
யா அல்லாஹ்! உன் பிரியத்தையும் உன் அன்பர்களின் பிரியத்தையும் உன் அன்பை எனக்குத்தரும் அமலின் பிரியத்தையும் நான் உன்னிடம் கேட்கிறேன்.என்னையும் என் குடும்பத்தையும் குளிர்ந்த நீரையும் விட உன் அன்பை எனக்கு மிகப்பிரியமானதாக ஆக்கு என்பது தாவூத் நபியின் துஆவாக இருந்தது. (திர்மிதி ; 4089)
இறைவனின் பிரியம் நமக்கு வேண்டும். அவன் யாரைப் பிரியப்படு கிறானோ அவர்களின் பிரியமும் வேண்டும். எந்த அமல்களால் அவன் பிரியத்தை நாம் பெற முடியுமோ அந்த அமல்களின் பக்கம் தேட்டமும் நமக்கு வேண்டும்.அது தான் நம் வாழ்வின் மிக உயர்ந்த இலட்சியமாக இருக்க வேண்டும்.அருமை ஸஹாபாக்கள் அதைப் பெறுவதற்குத்தான் ஆசைப்பட்டார்கள்.முயற்சித்தார்கள்.
قَالَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ يَومَ خَيْبَرَ: لَأُعْطِيَنَّ الرَّايَةَ غَدًا رَجُلًا يُفْتَحُ علَى يَدَيْهِ، يُحِبُّ اللَّهَ ورَسولَهُ، ويُحِبُّهُ اللَّهُ ورَسولُهُ، فَبَاتَ النَّاسُ لَيْلَتَهُمْ أيُّهُمْ يُعْطَى، فَغَدَوْا كُلُّهُمْ يَرْجُوهُ،
கைபர் போரின் இரவு நபி ﷺ அவர்கள் நாளை நான் ஒரு மனிதனின் கையில் கொடியைக் கொடுப்பேன் என்று சொன்னார்கள். அதைக் கேட்ட ஸஹாபாக்களுக்கு அன்றிரவு முழுக்க அதே சிந்தனை. யாராக இருக்கும். யாருக்குக் கொடுப்பார்கள் என்று இரவு முழுக்க சிந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள்.அத்தோடு அதை எனக்குத் தர வேண்டும் என்று ஆசைப்படவும் செய்தார்கள்.
பொதுவாக ஸஹாபாக்கள் தலைமைக்கோ பதவிக்கோ ஆசைப்படு பவர்களல்ல. அப்படி அவர்கள் வளர்க்கப்படவும் இல்லை. இருந்தாலும் அன்றைக்கு அத்தனை பேரும் அந்த தலைமைக்கு ஆசைப்படுவதற்குக் காரணம் நபி ﷺ அவர்கள் சொன்ன ஒரு வார்த்தை. அதாவது,நாளை ஒருவரின் கையில் கொடியைக் கொடுப்பேன்.அவர் எப்படிப்பட்டவ ரென்றால், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் அவர் நேசிக்கிறார். அல்லாஹாவும் அவனது தூதரும் அவரை நேசிக்கிறார்கள்.அவர் கையில் தான் அல்லாஹ் வெற்றியைத் தருவான் என்று கூறினார்கள். (புகாரி ; 3009)
தலைமை விரும்பாதவர்கள் அன்றைக்கு விரும்பினார்கள் என்றால் நபி ﷺ அவர்கள் சொன்ன அந்த வார்த்தை தான்.ஸஹாபாக்கள், அல்லாஹ்வின் அன்பு கிடைக்க வேண்டும்.நாமும் அல்லாஹ்வின் மீது அன்பு கொள்ள வேண்டும் என்று எந்தளவு விரும்பினார்கள் என்பதற்கு இந்நிகழ்வு பொருத்தமான எடுத்துக்காட்டு.
நாமும் அல்லாஹ்விடம் அவனின் அன்பைக் கேட்போம்.அவன் மீது அளவிலா அன்பு கொள்வோம்.
நன்றி :
www .shafiwahidhi .blogspot .com
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!