நபி மொழிகள்

 


நபி மொழிகள் 

‎‫اجْتَنِبُوا الْغَضَبَ‬‎


2 -இஜ்தனிபுல் கழப


பொருள்: கடுங்கோபத்திலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.


விளக்கம் : ஏனெனில் கடுங்கோபம் பொதுவாக ஏசுவதற்கும், குழப்பம் விளைவிப்பதற்கும், கொலை செய்வதற்கும் காரணமாகி விடுகின்றது.


‎‫ادوازَ كُوتَكُمْ‬‎


3 - அத்தூ ஸகா(த்)த(க்)கும்


பொருள்: உங்கள் ஸகாத்தைக் கொடுங்கள்.


விளக்கம் : ஏனெனில் ஸக்காத் ஏழைகளுக்கான உதவியாகும்;


மேலும் அது செல்வத்தை தூய்மையாக்குகின்றது.


‎‫احْفَظُ لِسَانَكَ‬‎


4 - இஹ்ஃபழ் லிஸானக


பொருள் : உன் நாவை பாதுகாத்துக் கொள்.


விளக்கம் : பழி சுமத்துதல், பொய் கூறுதல், புறம் பேசுதல், சண்டை சச்சரவுகள், குழப்பம் விளைவிக்கும் பேச்சுகள், ஆபாசமான, அசிங்கமான பேச்சுக்களை பேசுதல் ஆகியவற்றிலிருந்து நாவைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.


‎‫أَرْحَامُكُمْ أَرْحَامُكُمْ‬‎


5 - அர் ஹாமு(க்)கும் அர் ஹாமு(க்)கும்


பொருள் : உங்கள் உறவினர் என்பது கருப்பை சொந்தமான உங்கள் உறவினர்கள் தான்.


விளக்கம் : எனவே அவர்களுடன் மனம் ஒப்ப நடந்து கொள்ளுதல், நன்றாக பரிமாறுதல், உதவுதல் ஆகியவை மற்றவர்களை விட அதிகமாக இருக்க வேண்டும்.


‎‫أَرْشِدُوا أَخَاكُمْ‬‎


6- அர்ஷிதூ அஹா(க்)கும்


பொருள் : உங்கள் சகோதரருக்கு நேர்வழி காட்டுங்கள்.


விளக்கம் : அவர் நல்லவராவதற்காக அவருக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும் கொடுத்து, அறிவுரை மூலமாக அவருக்கு நன்மை செய்யுங்கள்.


‎‫اشْفَعُوا تُوجَرُوا‬‎


7-இஷ்ஃபவூ தூஜரூ


பொருள் : பரிந்துரை செய்யுங்கள். அதற்கும் உங்களுக்கு நற்கூலி கிடைக்கும்.


விளக்கம் : உலகத்தில் சில வேலைகள் பரிந்துரையினாலும் நடக்கின்றன. உரிமையுள்ள ஒருவருக்கு பரிந்துரை செய்வதால் அவருக்கு பயன் கிடைக்குமென்றால் ஒருபோதும் அதை தவிர்க்கக் கூடாது. ஆனால் அதனால் பிறகுக்கு அநீதி ஏற்படாமல் இருக்க வேண்டும்.


‎‫أَسْلِمُ تَسْلَمْ‬‎


8 - அஸ்லிம் தஸ்லம்


பொருள்: இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வீராக. அதனால் எல்லா தீமைகளிலிருந்தும் நஷ்டங்களிலிருந்தும் நீர் பாதுகாப்பு அடைந்து விடுவீர்.


விளக்கம் : இதன் காரணமாகத்தான் இஸ்லாம் சாந்தியின் மார்க்கம் என அழைக்கப்படுகிறது.


‎‫اطِعُ أَبَاكَ‬‎


9 - அ(த்)திஃ அபா(க்)க


பொருள் : உன் தந்தைக்குக் கட்டுப்படு.


விளக்கம் : தந்தைக்குக் கட்டுப்படுவது சந்ததிகளுக்கு நற்பேறு மட்டுமல்லாமல், அந்த தந்தை உண்மையான நலத்தை நாடுபவராகவும், அனுபவமிக்கவராகவும் இருக்கின்ற காரணத்தினாலும் அவருக்குக் கட்டுப்படுவது பயனுள்ளதாகும்.


‎‫اعْتَكِفُ وَصُمْ‬‎


10 - இஃதகிஃப் வசும்


பொருள்: இஃதிகாஃப் உட்கார்; அத்துடன் நோன்பும் வை.


விளக்கம் : நோன்பு வைக்காமல் இஃதிகாப் உட்கார முடியாது. இஃதிகாஃப் உட்காருபவர் நோன்பாளியாக இருப்பது அவசியம். இல்லையென்றால் இஃதிகாஃப் பயனற்றதாகும்.


‎‫أَعْلِنُوا النِّكَاحَ‬‎


11 அஃலினுன்னிகாஹ


பொருள் : திருமணத்தை அறிவிப்புடன் செய்யுங்கள்.


விளக்கம் : எல்லா மறைமுக திருமணங்களும் தகாதவையாகும்.


‎‫اكْرِمِ الشَّعْرَ‬‎


12 - அக்ரிமிஷ் ஷஃர


பொருள் : முடிகளுக்கு கண்ணியமளியுங்கள்.


விளக்கம் : (1) முடிகளை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருங்கள். சீப்பை பயன்படுத்தி தலைமுடியை வாரி, அழகுபடுத்துங்கள். (2) ஆணுக்கு தாடி மீசை வளர ஆரம்பித்து விட்டால் அவருடன் குழந்தைகளிடம் நடந்து கொள்வது போன்று நடந்து கொள்ளாதீர்கள். (3) நரைத்த முடியுடையவரைக் கண்டால் அவருக்கு கண்ணியமளியுங்கள்.


‎‫الْأَعْمَالُ بِالْخَوَاتِيمِ‬‎


13 - அல் அஃமாலு பில் கவாதீம்


பொருள் : செயல்கள் அதன் முடிவுகளைப் பொருத்து அமைகின்றன.


விளக்கம் : முடிவுகள் நல்லதாக இருந்தால் செயல்களும் ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டன என்று புரிந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் அவை வீணானவையாகும்.


‎‫أَوْصِيكُمْ بِالْجَارِ‬‎


14 - ஊஸீக்கும் பில் ஜாரி


பொருள் : அண்டை வீட்டாருடன் நல்லமுறையில் நடந்து கொள்ளுமாறு நான் உங்களுக்கு வலியுறுத்திக் கூறுகிறேன்.


விளக்கம் : நகரத்தில் நாகரிகத்தை உருவாக்குவதற்கும், அமைதியை நிலைநாட்டுவதற்கும் இது ஒரு மிகச்சிறந்த வழிமுறையாகும்.


‎‫اكْرِمُوا أَوْلَادَكُمْ‬‎


15 - அக்ரிமூ அவ்லாத(க்)கும்


பொருள் : உங்கள் குழந்தைகளுக்கு கண்ணியமளியுங்கள்.


விளக்கம் : அப்போதுதான் அவர்களிடம் தன்னம்பிக்கை உருவாகும். தீய விஷயங்களிலிருந்தும் தீயவற்றிலிருந்தும் தப்பித்திருப்பார்கள். குழந்தைகளை எப்பொழுதும் நீதான், உன்னால்தான் என்று கூறுவதும் பொருத்தமற்றதாகும்.


‎‫الْأَمَانَةُ عِنْ‬‎ ‎‫عز‬‎


16 - அல் அமானத்து இஸ்ஸுன்


பொருள் : நம்பி ஒப்படைப்பது கண்ணியத்திற்குரியதாகும்.


விளக்கம் : நம்பிக்கைகுரியவருக்கு உலகில் எவ்வளவு கண்ணியம் இருக்கிறதென்றால், ஒவ்வொரு இறை தூதரும் தம் சமுதாயத்திடம் இன்னீ லக்கும் ரஸூலுன் அமீன் (நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய ஓர் இறை தூதராக இருக்கிறேன்) என்று கூறி முதலில் தமது கண்ணியத்தை ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறார்கள். அதன் பிறகே உண்மை தூதுச் செய்தியை எட்ட வைத்தார்கள்.


‎‫الْأَيْمَنُ فَالْأَيْمَنُ‬‎


17 - அல் அய்மனு ஃபல் அய்மனு


பொருள் : வலப் பக்கம் இருப்பவர் வலப் பக்கம் இருப்பவர்தான்.


விளக்கம் : சபையில் வலப் பக்கம் இருப்பவர்கள் அதிக உரிமை கொண்டவர்களாகவும், முன்னுரிமை பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களை கவனத்திற் கொள்ளுங்கள். உதாரணமாக உணவு பரிமாறுதல், ஆலோசனை கேட்டல் போன்றவற்றில்.


‎‫يَجِلُوا الْمَشَائِخ‬‎


18 - பஜ்ஜிலுல் மஷாயிஹ


பொருள்: சான்றோரை மதியுங்கள்.


விளக்கம் : ஏனெனில் அவர்களின் அறிவும் அனுபவமும் இளைஞர்களைவிட அதிகமாக இருக்கிறது.


‎‫تَهَادُّوا تَحَابُوا‬‎


20 தஹாத்தூ தஹாப்பூ


பொருள் : ஒருவருக்கொருவர் அன்பளிப்பு கொடுங்கள். அதனால் உங்களுக்கிடையிலுள்ள அன்பு அதிகமாகிறது.


விளக்கம் : ஒருவருக்கொருவர் அன்பை வளர்த்துக் கொள்வதற்கு மிகச் சிறந்த வழி அன்பளிப்பு வழங்குவதுதான்.


‎‫التَّعْزِيَةُ مَرَّةً‬‎


21 அத்தஃஸிய(த்)து மர்ர(த்)துன்


பொருள் : ஒரு முறை துக்கம் விசாரிப்பது போதுமானது.


விளக்கம் : ஒருவர் மரணித்து விட்டால் அங்கு சென்று ஒரு


முறை துக்கம் விசாரித்தல் போதுமானதாகும். அடிக்கடி சென்று விசாரித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. மேலும் 40 நாட்கள் வரை சென்று பார்க்க வேண்டிய அவசியமுமில்லை. இவையெல்லாம் இஸ்லாத்திற்கு புறம்பான சம்பிரதாயங்களாகும்.


நாற்பது நபிமொழிகள்


14


‎‫الْخَالَةُ وَالِدَةُ‬‎


22 -அல் ஹால (த்)து வாலித(த்)துன்


பொருள் : சிற்றன்னையும் அன்னைதான்.


விளக்கம் : சிறிய தாயாருக்கும் தாயைப் போன்றே


கண்ணியமளிக்க வேண்டும்; தொண்டு செய்ய வேண்டும். இரண்டாவது, ஒரு தாய், குழந்தைகளை விட்டு விட்டு மரணித்து விட்டால் அந்தத் தாயின் சகோதரியை மறுமணம் செய்வது என்பது குழந்தைகளுக்கு தாய் திரும்பக் கிடைத்தது போன்றதாகும்.


கருத்துகள்