தங்க ஓடை: மனிதனின் பேராசை

 


தங்க ஓடை: மனிதனின் பேராசை


உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக நபித்தோழர் அனஸ் அவர்கள் அறிவிக்கிறார்கள் : ஆதமுடைய மகனுக்கு தங்கத்தில் ஒரு ஒடயிருந்தால் இரு ஓடை வேண்டும் என்று விரும்புவான். அவனது வாயில் மண்ணறையின் மண்னைத்தவிர வேறு ஒன்றும் நிரப்பாது. தவ்பா செய்பவனின் தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.


மற்றொரு ஹதீஸில் இவ்வாறு வருகிறது  ஒரு ஓடை நிறைய பொருள் இருந்தால் அது போன்று இன்னொரு ஓடை கிடைக்க வேண்டும் என்று விரும்புவான்.






மனிதனின் மனோநிலைக் குறித்து இந்த ஹதீஸ்கள் மிக அற்புதமாக விளக்குகிறது. இந்த ஹதீஸ்களின் வார்த்தைகள் தான் வேறுபடுகிறதே தவிர அதன் கருத்துக்களின் எள்ளளவும் எவ்விதமான மாற்றமும் இல்லை.


பொதுவாக மனிதன் பொருளாதார விசயத்தில் பேராசை கொள்வது இயற்கையே, இன்னும் வேண்டும் வேண்டும் என்ற அவனுடைய ஆவல்கள் அவனின் மரணம் வரை தொடர்கதைத்தான். உண்மையில் மனிதன் நிம்மதி வேண்டியும், இவ்வுலகில் வாழ்க்கையில் நிரந்தரம் வேண்டியும் தான் மனிதன் பொருள் சேர்ப்பதை ஆசிக்கிறான்.


குர் ஆனின் கூற்றுப்படி � மனிதன் பொருளாதாரத்தை சேர்த்துவைக்கிறான், இன்னும் எண்ணி எண்ணி அதன் எண்ணிக்கையை பார்த்துக்கொள்கிறான். இன்னும் அவன் மனோநிலை இப்படி இருக்கிறது இந்த பொருளாதாரம் அவனை எவ்வித (கவலை, குறை, நோய்) இல்லாம் இவ்வுலகில் நிம்மதியாக வாழவைத்துவிடும் என்று.

அந்தோ அவன் நினைத்து போன்று இல்லை என்று தொடர்கிறது அந்த குர்ஆனிய வசனம்...


உண்மையில் நிறைய சேர்க்க வேண்டும் என்ற ஆசையோ அல்லது நிறைய பொருளை சேர்ந்து வைப்பதோ மனிதனுக்கு ஒரு காலமும் நிம்மதியை பெற்றுத்தராது. உண்மையான இன்பமும், நிம்மதியும் செலவழிப்பது கொண்டுதான் இருக்கிறது என்று குர் ஆனும் நபிவழியும் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன.


உண்மையில் இழப்புகள் தான் மனிதனை செவ்வைப்படுத்துகின்றன.

சில நீர் துளிகளின் இழப்புதானே மனிதனை உருவாக்குகிறது

கருவறையின் இழப்புதானே ஒரு மனித உயிரை உலகிற்க்கு கொடுத்தது

அறியாமையின் இழப்புதானே ஒரு மனிதனுக்கு அறிவைக்கொடுத்து

வருடங்களின் இழப்புதானே வயதைக்கொடுத்தது

உடலின் உழைப்பு என்ற இழப்புதானே மனிதனுக்கு பொருளைக்கொடுக்கிறது.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஹஸனுல் பஸரி என்ற ஒரு அறிஞர் பொருளாதாரம் பற்றி கூறிய கூற்று போற்ற தகுந்தது.


பொருளாதாரம் என்பது உங்களின் அழகிய தோழன் அது உங்களுக்கு பிரையோஜம் தராது அது உங்களை விட்டு பிரியாத வரை.

உங்களின் பொருளாதார இழப்புகள் தானே உங்களின் அழகிய வீடுகளாய், மதிப்பு மிக்க கார்களாய், உங்களின் மேனி தழுவும் ஆடைகளாய்........... இத்தியாதி இத்தியாதி


இழக்க வேண்டிய பொருட்கள் இழக்க வேண்டிய நேரத்தில் முடியாது என்று கூறினால் பின் அனைத்தையும் அல்லவா இழக்க வேண்டி வரும்.


நான் காலையில் குடித்த ஜூஸ்வும், சிற்றுண்டியும் தான் எனக்கு சக்தியை கொடுத்தது என்பதற்காக நான் சிறுநீர், மலம் கழிக்கமாட்டேன் அவற்றை என் வயிற்றிலே பாதுகாத்துவைப்பேன் என்று கூறினால். பாதுகாகவேண்டிய நம் உயிறையல்லவா இழக்கவேண்டி வரும்.


ஒரு ஹதீஸின் கருத்து இப்படி எடுத்துரைக்கிறது. நீங்கள் சேர்த்துவைப்பதேல்லாம் உங்கள் பொருள் இல்லை, இறைபாதையில் நீங்கள் இழந்தவைத்தான் உங்கள் சேமிப்பாக நாளை நிற்கும்.


உண்மையில் நீங்கள் சேமிப்பாக நினைத்தவை எல்லாம் உங்களின் வாரிஸ்களின் சொத்தாக ஆகிப்போகும்.�

இழக்க வேண்டியவைகளை அந்தந்த நேரங்களில் இழப்பதுதான் வாழ்க்கையை தேடித்தரும். இழந்து விட்டோம் என்று வருந்த வேண்டியது இல்லை அதனால் தான் வாழ்கிறோம்.


அப்படியானால் நான் எப்படித்தான் செலவழிப்பது, எனக்கொன்று நான் செலவு செய்வது கூடாதா? அல்லது எவ்வளவு தான் செய்யலாம் என்ற கேள்வி எழும்


கடந்த வார எங்கள் கல்லூரியில் ஒரு தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. அதன் தலைப்பு ( Quran and Science, A national level seminar ) அதில் இந்த ஹதீஸ் விளக்கத்தோடு தொடர்புடையது சில விஷயங்கள் பகிரப்பட்டது .

இன்ஷா அல்லாஹ் தொடரலாம் நம் பயணத்தை அவ்விளக்கங்களோடு............



தேசிய அளவிலான கருத்தரங்கம்


கடந்த 20.12.2011 அன்று எங்கள் கல்லூரியில் (ஜமால் முஹம்மது கல்லூரியில் , திருச்சி) ஒரு தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் குர் ஆனும் அறிவியலும் ( Quran and Science - A National Level Seminar்) என்ற தலைப்பில் ஆய்வரங்கம் நடைபெற்றது. அகில இந்திய அளவில் பல்வேறு அறிஞர்கள் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர். அதில் 40 மேற்பட்ட ஆய்வறிக்கைகள் ஆங்கலத்திலும், அரபி மொழியிலும் சமர்ப்பிக்கப்பட்டன. பல்வேறுபட்ட தலைப்புகளில் அருமையான இன்னும் ஆக்கப்பூர்வ செய்திகள் பரிமாறப்பட்டன.


சிறப்பு அழைப்பாளர்களாக Dr.P. நிசார் அஹ்மது ( முன்னாள் துறைத்தலைவர், அரபி , உருது, பாரிஸி மொழித்துறை - சென்னை பல்கலைக்கழகம்), மற்றும் எழுத்தாளர். ரஹ்மத் ராஜகுமாரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதில் சொல்லப்பட்ட கருத்துகள் சில நாம் முந்திய ஹதீஸுக்கு தொடர்புடையது என்பதால் இங்கு பதிவுசெய்ய ஆசைப்படுகிறேன்.


குர் ஆனும் உளவியலும் ( Quran and Psychology) என்ற தலைப்பில் ஒரு ஆய்வேடு வாசிக்கப்பட்டது.

அதன் சாரத்தை இங்கு தருவது மிகச்சரியாக இருக்கும்


இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. (3:133)


இந்த வசனத்தில் குறிப்பிடப்படுள்ள பயபக்தியுடையோர் என்றால் யார் என்பதை பற்றி அதன் அடுத்து வரும் வசனம் இப்படி தெளிவுபடுத்துகிறது.


(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.(3:134)


நாம் நீண்ட நாளாக தேடிக்கொண்டிருக்கிற முத்தகீன் என்ற நிலைக்கு இந்த குர் ஆனிய வசனம் இப்படி விளக்கம் கொடுக்கிறது. மேலே குறிப்பிட பட்ட வசனத்தில் மூன்று வித உளவியல் ( மனோநிலை) நிலைக்குறித்து இவ்வசனம் பேசுகிறது.


நன்றி தமிழ் இஸ்லாமிய மீடியா 

கருத்துகள்