RECENT POSTS

நான் அப்படிச் செய்தேன் இப்படி செய்தேன்.

 


இறைவன் தான் நம் அனைத்து நிலைகளையும் சரிசெய்கிறான், ஆனால் மனிதன் தான் என்னவோ சாதனைகள் புரிந்து விட்டது போன்று “நான் அப்படிச் செய்தேன் இப்படி செய்தேன். எல்லாம் என் அறிவு, புத்தி கூர்மையில் தான் இவ்வளவும் நடந்தது என்று தப்பட்டம் அடிக்கிறான்". அந்தோ பரிதாபம்! திரைக்கு பின்னால் இருந்து திறப்பட செயல்படுத்திக் கொண்டிருக்கும் அந்த திறமையின் பலம் புரியவேண்டுமே! இந்த ஆத்மாவிற்கு அந்த நிலை புரியவே ஆத்மாக்களுக்கு அழைப்பு கொடுக்கிறது மேலே உள்ள நபிமொழி.


இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கூறிய உபதேச வார்த்தைகள் இன்னும் காதில் ரீங்காரமிடுகின்றன


ஒ குழந்தாய், நான் உனக்கு சில வார்த்தைகளை கற்றுத் தருகிறேன்,


அல்லாஹ்வின் சட்ட வரம்புகளை பாதுகாப்பாயாக! இறைவனின் பாதுகாப்பு உனக்கு இருக்கும்.


உணர்வுகளுக்கு அடிமையாகிவிடாமல் இறைவனின் உன் உணர்வுகளை அடிமையாக்குவாயாக! இறைவனை உனக்கு முன்னால் பெற்றுக்கொள்வாய்! 


நீ எதைக்கேட்டாலும் இறைவனிடம் மட்டுமே கேட்பாயாக! 


நீ உதவிதேடினால் இறைவனிடம் மட்டுமே உதவி தேடுவாயாக! 


இந்த உலகமே சேர்ந்து உனக்கு ஒரு நன்மையை நாடினாலும் இறைவன் எழுதி வைத்ததை தவிர வேறு எந்த ஒரு நன்மையும் அவர்களால் செய்ய முடியாது. 


இந்த உலகமே சேர்ந்து ஒரு தீமை உனக்கு செய்ய நாடினாலும் இறைவன் எழுதி வைத்ததை தவிர வேறு எந்த ஒரு தீமையும் அவர்களால் செய்ய முடியாது.


இமாம் அஹ்மது (ரஹ்) அவர்களின் ஹதீஸில் இன்னும் சில வாசங்கள் இந்த் ஹதீஸில் உள்ளது


நீ சிறப்பாக இருக்கிறபோது இறைவனை நினைவில் வை! நீ சிரமத்தில் இருக்கும் போது அவன் உன்னை நினைவில் வைப்பான்.


நீ மிகுந்த சிரமம் எடுத்து முயற்ச்சித்தும் உனக்கு கிடைக்காதவை உன்னுடையதல்ல! 


நீ வேண்டாம் என்று நினைத்தும் உன்னை வந்து அடைந்திருப்பவை தவறாக வந்தடைந்தவையுமில்லை!


புரிந்து கொள்!


பொறுமைக்கு பின் தான் உதவியிருக்கிறது! 


சிரமத்திற்கு பின் தான் மகிழ்ச்சி இருக்கிறது! 


கஷ்டத்திற்கு பின் தான் இலகு இருக்கிறது!


எத்துணை அற்புதமான நபி பெருமான் (ஸல்) அவர்களின் வார்த்தை! சந்தோசத்தை நன்றி செலுத்துதலாலும், கஷ்டத்தை பொருமையாலும் எதிர்கொண்டு வென்றேடும்போம் இருலக வாழ்வின் வெற்றிகளை நமதாக்குவோம்!



நன்றி தமிழ் இஸ்லாமிய மீடியா 

கருத்துகள்