RECENT POSTS

நல்ல மனிதர்களின் அடையாளங்கள்✨️👍

 


நல்ல மனிதர்களின் அடையாளங்கள்✨️👍



1) இவ்வுலகத்தின் மீதுள்ள பிரியத்தையும் பாசத்தையும் குறைத்து மறு உலக வாழ்க்கையின் மீது பிரியம் வைத்தல்.


பெருமானார் (ஸல்) அவர்கள் அருளினார்கள்: "எவ னொருவன் தன்னுடைய கஷ்ட நிலைமையைக் குறித்து மனிதர் களுக்கு மத்தியில் முறையிடுவானோ அவனுடைய கஷ்ட நிலையில் மாற்றம் ஏற்படாது. மேலும் எவனொருவன் தன் னுடைய கஷ்ட நிலைமையைக் குறித்து அல்லாஹ்விடம் முறையிடுவானோ அவனது கஷ்ட நிலைமையிலிருந்து வெகு விரைவில் அல்லாஹ் விடுதலையளித்து அவனது தேவைகளை யும் நிறைவேற்றி வைப்பான்.




2) நற்கிரியைகளை அதிகமாக செய்தல், குர்ஆன் ஷரீபை பிரியத்துடன் ஓதுதல், அதிகமாக திக்ரு செய்தல் மற்று முண்டான நல்ல அமல்களின் பக்கம் கவனம் செலுத்துதல்.


3) ஐங்காலத் தொழுகைகளை அதனதன் நேரத்தில் பய பக்தியுடனும் பேணுதலுடனும் தொழுது வருவதோடு மற்றுமுண்டான சுன்னத்தான, நபிலான தொழுகை களையும் நிறைவேற்றுதல்.


4) நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையை எல்லா காரியங்களிலும் பின்பற்றுதல்,திருமணம், வியாபாரம்,விவசாயம், உத்தியோகம், உணவுஅருந் துதல், பானங்கள் குடித்தல், மலஜலம் கழித்தல், தூக் கம் இன்னும், காலையில் தூக்கத்திலிருந்து எழும்பி னது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை சுன்னத் தான வழியை பின்பற்றுதல்.


5) மார்க்க அறிஞர்கள், தீனுக்காக சேவைசெய்யக்கூடிய பெரியோர்களின் சபைகளில் அமர்ந்து தீனுடைய அறிவைப் பெறுதல். மேலும் தஃலீமுடைய சபை களில் அமர்ந்து தீனுடைய விளக்கங்களை அறிய ஆசை கொள்ளுதல்.


6) ஹராமான (மார்க்கத்தில் விலக்கப்பட்ட) பொருள் களையும் சந்தேகத்திற்கிடமான பொருள்களையும் உண்ணாமலும் உபயோகம் செய்யாமலுமிருத்தல்.


7) அவசியமில்லாத காரியங்களை விட்டும் ஒதுங்கி இருத்தல்.


8) தேவையான அளவு மட்டும் வார்த்தையாடுதல் (சம் பாஷித்தல் - பேசுதல்)




9) ஏழைகள், இயலாதவர்கள் மீது அன்பு கொள்ளுதல் மற்றும் எல்லாப் படைப்பினங்கள்மீதும் இரக்கமுள்ள வராக இருத்தல்.


10) அதிகமாக மரணத்தையும், கப்ருடைய வாழ்க்கையும் நினைத்தல்,


11) மார்க்க அறிஞர்களுக்கு சங்கை செய்தல், பெரியோர் களுக்கு மரியாதை செய்தல், சிறியவர்மீது அன்பு கொள்ளுதல்.


12) யார் யாருக்கு என்னென்ன கடமைகளை செய்ய வேண்டுமோ அவைகளை சரியான முறையில் செய்தல் (தாய், தந்தையர்,மனைவி, மக்கள், சகோதர, சகோதரிகள், அண்டை வீட்டார் மற்றும் உறவினர் களுக்கு செய்ய வேண்டிய கடமைகள்.)


13) தீமை செய்தோரை மன்னித்து நேசனாக ஆக்கிக் கொள்வதுடன் அவர்களுக்கு உதவியும் உபகாரமும் செய்தல்.


14) தன்னால் இயன்ற வரை தர்மம் செய்தலும் மற்றும் மார்க்க சம்பந்தமான காரியங்களுக்கு பொருளுதவி செய்தலும்.


15) எந்த காரியம் செய்தாலும் பெருமைக்காகவும், புகழ்ச்சிக்காகவும் இல்லாமல் அல்லாஹ்வினுடைய பொருத்தத்தை மட்டும் நோக்கமாகக் கொள்ளுதல்.


16) நன்மையான காரியங்களை எவிக் கொண்டும், தீமை யான காரியங்களை விட்டு விலகிக் கொண்டும் இருத் தல் (தீனுடைய சேவை செய்தல் தஃலிம் தப்லீக்)




17) இலாபம் வந்தால் சந்தோஷப்படாமலிருத்தல், நஷ்டம் வந்தால் கவலைப்படாமலிருத்தல்.


18) எல்லாத் தேவைகளைக் குறித்தும் அல்லாஹு தஆலா விடமே பிரார்த்தனை செய்து கொண்டே இருத்தல்


19) சோதனைகள் வரும்போது பொறுமையுடன் சகித்துக் கொள்ளுதல்.


20) எல்லா நிலைமைகளிலும் பயபக்தியோடிருத்தல்.

கருத்துகள்