எந்த சக்தியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்
நான்கு விஷயங்களின் மீதுள்ள நம்பிக்கையை உள்ளத் திலிருந்து எடுத்துவிட்டு அல்லாஹ்வின் மீது மட்டும் நம்பிக்கை வைக்க வேண்டும்.
1) தன்னுடைய பொருளின்மீது,
2) தன்னுடைய உடலின் சக்தியின்மீது,
3) மற்றவர்களின் பொருளின் மீது,
4) மற்றவர்களின் உடலின் சக்தியின்மீது,
(மேற்கண்டவைகளின் மீது கூடாது) நம்பிக்கை வைக்கக்
1-வது தன்னிடம் எவ்வளவுதான் பொருளிருந்தாலும் என்றோ ஒருநாள் நம்மை விட்டும் அது பிரிந்து விடும் அல்லது நாம் அதை விட்டுவிட்டு மரணித்து விடுவோம் நாம் மரித்தவுடனேயே வேறு உரிமையாளர்கள் அதை அடைந்துகொள்வார்கள்.
2-வது நாம் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கின் றோம். எனவே,எந்தக் காரியத்தையும் சாதித்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் நமக்கு திடீரென்று ஏதாவது வியாதி ஏற்பட்டு அந்த வியாதியின் காரணமாக ஒரு சிறிய வேலையைக்கூட செய்ய முடியாமலாகி விடலாம்.
3-வது மற்றவர்களின் பொருளின் மீது நம்பிக்கை வைப்பதும் ஏமாற்றம்தான். நம்முடைய பொருள் அழிந்து விடுவது போன்று அவருடைய பொருளும் எப்படியும் ஒரு நாள் அழிந்துவிடும்.
4-வது மற்றவர்களின் உடலின் சக்தியின் மீது நம்பிக்கை வைப்பதும் கூடாத விஷயமே. காரணம், நமக்கு வியாதி ஏற்பட்டது போன்று அவருக்கும் வியாதி ஏற்பட்டு எதுவுமே செய்ய முடியாமலாகிவிடும்.
எனவே, அழிவே இல்லாத எல்லாம் வல்ல இறைவ னுடைய சக்தியின் மீது மட்டும் நம்பிக்கை வைத்து அவனி டமே தமது தேவைகளைப் பூர்த்தி செய்து தரும்படி ஒவ்வொரு நேரமும் பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கவேண்டும்.
இவ்வுலக வாழ்க்கை வீண் விளையாட்டும் வேடிக்கையும்தான்!
இவ்வுலக வாழ்க்கை வீண் விளையாட்டும் வேடிக்கையும் தான் அன்றி வேறில்லை என அல்லாஹு தஆலா கூறு கின்றான். உண்மையிலேயே இவ்வுலக வாழ்க்கையைப் பற்றி நன்றாகச் சிந்தித்துப் பார்க்கின்றபோது சிறு பிள்ளைகளின் விளையாட்டு போன்றுதான் தோன்றுகிறது. சில கிராமங்களில் சிறு பிள்ளைகள் ஒன்றாகக்கூடி விளையாடுவதை நாம் பார்க்க முடியும். அப்பிள்ளைகள் சிறு சிறு பானைகளையும் சட்டிகளையும் அடுப்புகளையும் வைத்திருப்பார்கள். அப்பிள்ளைகள் இரு கூட்டமாகப் பிரிந்து மாப்பிள்ளை வீட்டாரென்றும், பெண் வீட்டாரென்றும் தனித்தனியாக இருந்து சமைத்து சாப்பிடும் விளையாட்டை விளையாடுவார்கள், அவர்கள் வைத்திருக்கும் அச் சிறு பானைகளில் மண்ணைப் போட்டு சோறு என்றும் சட்டி யில் சிறு சிறு கற்களைப் போட்டு கறி என்றும் இலைகளை கீரை யென்றும் சொல்லிக் கொள்வார்கள். மேலும் ஈர மண்ணை எடுத்து சிறு சிறு வீடுகளைப் போன்றும் கட்டிக் கொள்வார்கள். பெண் வீட்டாரிடத்தில் பெண்ணைப் போன்று துணியினால் செய்யப்பட்ட ஒரு பொம்மையும், மாப்பிள்ளை வீட்டாரிடம் மாப்பிள்ளையைப் போன்று ஒரு பொம்மையுமிருக்கும்- பெண் பேசி திருமணமும் நடைபெறும். குழந்தையும் பிறந்து விடும். இம்மாதிரியான விளையாட்டுகளை பிள்ளை கள் விளையாடிக் கொண்டிருக்கும்போது அவர்களின் உற வினர்கள் அப்பிள்ளைகளைச் சாப்பிடுவதற்காக அழைத்தால் அப்பிள்ளைகள் போக மறுத்து விளையாட்டிலேயே ஈடுபட் கொண்டே இடுப்பார்கள் . ஆனால் அவர்களின் உண்மையான வீடோ பெரியது. பளபளப்பான பீங்கானில் சோறு வைக்கப் பட்டிருக்கும், கறி சமைத்து பளபளப்பான தட்டையிலும் பாலும் பழமும் இன்னும் பல வகையான சுவையான உணவுகளையும் வைத்துக் கொண்டு அழைத்தாலும் அப் பிள்ளைகள் போக மறுத்து விளையாட்டிலேயே இருந்து விடு வார்கள். இதைப் போலவே உண்மையான உணவும், உடைகளும், இருப்பிடமும் மறுமையில் இருக்கிறது. அது தான் சொர்க்கம். அதை அடைவதற்காக முயற்சி செய்யுங் கள். மேலும் இவ்வுலக வாழ்க்கை வீண் விளையாட்டு வேடிக்கைதான் என்று கூறினால் அச்சிறு பிள்ளைகள் விளை யாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைப் போன்று எங்க ளுக்கு சொர்க்க வாழ்வு வேண்டாம், இந்த உலக வாழ்ப் கையே போதும் என்று கூறுவர் தீனுடைய அறிவை பெறாதவர்கள் .
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!