RECENT POSTS

சுவனவாசிகளின் இன்பகரமான வாழ்க்கை (திருமறையில் கூறப்பட்டது)

 


சுவனவாசிகளின் இன்பகரமான வாழ்க்கை


(திருமறையில் கூறப்பட்டது)


(அந்நாளில்) கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின் பால் அழைத்து வரப்படுவார்கள். அங்கு அவர்கள் வரும் சமயத் தில், அதன் வாயில்கள் திறக்கப்பட்டு, அதன் காவலாளிகள் அவர்களை நோக்கி, ''உங்களுக்கு சாந்தியும், சமாதானமும் உண்டாவதாகுக! என்றென்றுமே (இதில்) தங்கிவிடுங்கள்" என்று கூறுவார்கள்.


"நீங்களும் உங்களுடைய மனைவிமார்களும் மகிழ்ச்சி யுடன் சுவனபதியில் நுழைந்து விடுங்கள்" என்று கூறப் படும். பலவகை ஆகாரங்களும், பானங்களும் நிறைந்த பொற்தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றி இருந்து கொண்டேயிருக்கும். அங்கு அவர்கள் மனம் விரும் பியவையும் அவர்களுடைய கண்களுக்கு இரம்மியமானவை யும் அவர்களுக்குக் கிடைக்கும்.


ஹூருல் ஈன்களையும் நாம் அவர்களுக்குத் திருமணம் செய்து வைப்போம். முந்திய மரணத்தைத் தவிர, அதில் அவர்கள் வேறு யாதொரு மரணத்தையும் அனுபவிக்க மாட்டார்கள்.


பரிசுத்தவான்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியின் உதாரணமாவது: அதில் தீங்கற்ற (பரிசுத்தமான) நீரருவிகள் இருக்கின்றன. குடிப்போருக்குப் பேரின்பமளிக்கக் கூடிய திராட்சை ரச ஆறுகளும் இருக்கின்றன. மேலும் தெளிவான தேனாறுகளும் இருக்கின்றன. அன்றி, அதில் அவர்களுக்கு சகல விதமான கனிவர்க்கங்களும் தங்கள் இறைவனின் மன்னிப்பும் (அவர்களுக்கு) உண்டு, (இத்தகைய இன்பங்களை அனுபவிப்பவனுக்கு) நரகத்தில் என்றென்றும் தங்கியிருந்து, கொதிக்கும் ஜலம் புகட்டப்பட்டு, குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடக் கூடியவன் ஒப்பாவானா?


(பொன், வைர) வேலைபாடுள்ள உன்னத சிம்மாசனங்கள் மீது ஒருவரையொருவர் முகம் நோக்கி அதன் மீது சாய்ந்தவர் களாக இருப்பார்கள். அவர்களுடைய (ஒளியின்) பிரகாசம் அவர்களுக்கு முன்னும் அவர்களுடைய வலது பாரிசத்திலும் சென்று கொண்டிருக்கும். அதன் விஸ்தீரணமோ, வானம் பூமியின் விஸ்தீரணத்தைப்போல் இருக்கின்றன. (அவர்கள்) நிலையான சுவனபதிகளுக்குச் சென்று விடுவார்கள், முத்து பதித்த பொற் காப்புகள் அங்கு அவர்களுக்கு (விருதாக அணி விக்கப்படும். அதில் அவர்களுடைய ஆடைகளெல்லாம் (மிருதுவான) பட்டுகளாலேயே இருக்கும்.


அன்றி (அவர்கள்) " எங்களை விட்டு (சகல) கவலைகளை யும் அப்புறப்படுத்திய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும். நிச்சயமாக எங்கள் இறைவன் மிக்க மன்னிப் போனும் நன்றி அறிவோனுமாக இருக்கின்றான்'' என்று புகழ்ந்து கூறுவார்கள்.


இன்பந்தரும். சுவனபதிகளில், நோகள்ள) மஞ்சங்களில் ஒருவர் மற்றொருவரை முகம் நோக்கி (உல்லாசமாப் ஒருவர்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள் குவாகத் தெளி வான) ஊற்றுக்களின் பானம் நிறைந்த குவளைகள் அவர் களைச் சுற்றிக் கொண்டு வரப்படும். (அது) மிக்க வெண்மை யானதாகவும், குடிப்போருக்கு மிக்க இன்பமானதாகவும் இருக்கும், அதில் மயக்கமும் இராது; அதனால் அவர் கள் போதையுறவும் மாட்டார்கள். அவர்களிடத்தில் கீழ் நோக்கிய (அடக்கமான) பார்வையுடைய (ஹூருல்ஈன் என்னும்) கண்ணழகிகளும் இருப்பார்கள். அவர்கள் (இறக் கைகளில் )மறைக்கப்பட்ட (நெருப்புக்கோழியின் இலேசான மஞ்சள் வர்ணமுடைய) முட்டைகளைப் போலிருப்பர்.


அவர்களுக்காக (அதன்) வாயல்கள் (எந்நேரமும்) திறக்கப்பட்டிருக்கும். அதில் (உள்ள தலையணைகளின் மீது) சாய்ந்தவண்ணமாக, ஏராளமான கனிவர்க்கங்களையும் (இன்பமான) குடிப்புகளையும் கேட்டு (வாங்கி அருந்தி புசித்து)க் கொண்டிருப்பார்கள் அவர்களிடத்தில் கீழ் நோக்கிய பார்வைகளுடைய ஒத்த வயதுடைய கன்னிகைகள் பலருமிருப்பார்கள்.


(சுவனபதியில் ) அடுக்கடுக்காக உள்ள மேல்மாடிகள் (கொண்ட) மாளிகைகள் உண்டு. அவற்றில் நீரருவிகள் சதா ஓடிக்கொண்டே இருக்கும்.


நிச்சயமாக எவர்கள், "எங்கள் இறைவன் அல்லாஹ் தான்" என்று கூறி (அதன் மீது) உறுதியாக நிலைத்துமிருந் தார்களோ அவர்களிடம் நிச்சயமாக மலக்குகள் வந்து (அவர்களை நோக்கி) ''நீங்கள் எதற்கும் பயப்படாதீர்கள்: பதியைக் எதீர்கள்; உங்களுக்கு தற்குகளிக்கப்பட்டாதீர்வன வாழ்க்கைாண்டு சந்தோஷமடையுக்களிக்கப்பட்டள் உலை உங்களுக்கு உதவியாளர்களாக இருந்தோம்; மறுமையிலும் (உங்களுக்கு உதவியாளர்களே) சுவனபதியில் உங்கள் மனம் விரும்பியதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்; (குற்றங்களை) மன்னித்து கிருபை செய்வோனிட மிருந்து விருந்தாகக் கிடைக்கும்" என்று (மலக்குகள்) கூறுவார்கள்.


இவர்களுக்கு நிலையான சுவனபதிகள் உண்டு. அவற்றில் நீரருவிகள் சதா ஓடிக்கொண்டேயிருக்கும். அங்கு அவர்களுக்குப் பொற் கடகம் அணிவிக்கப்படும். மெல்லிய தாகவோ அழுத்தமானதாகவோ பசுமையான பட்டாடைகளை அணிவார்கள். அங்குள்ள ஆசனங்களிலுள்ள தலையணைகள் மீது சாய்ந்து இருப்பார்கள். இவர்களுடைய கூலி மிக்க நன்றே; இவர்கள் இன்பம் சுகிக்கும் இடமும் அழகானது. மிக்க


அச்சுவனபதிகள் என்றென்றும் நிலையானவை. மறை வாக இருக்கும் அவற்றை, ரஹ்மான் தன் (நல்ல) அடியார் களுக்கு வாக்களித்திருக்கிறான். நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி நடைபெற்றே தீரும். ஸலாம் என்பதைத் தவிர வீணான வார்த்தைகளைக் கேட்க மாட்டார்கள். அங்கு அவர்களுக்கு காலையிலும் மாலையிலும் (மிக்க மேலான) ஆகாரம் அளிக்கப்படும். இத்தகைய சுவனபதியை நம் அடியார்களில் பயபக்தியுடையவர்களுக்கு நாம் அனந்தர மாக்கி விடுவோம்.


அவர்கள் செய்த (நற்) கிரியைகளுக்குக் கூலியாக, அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண் குளிரக் கூடிய (சன்மானத்)தை எவராலும் அறிந்துகொள்ள முடியாது. அவர்கள் செய்யும் (நற்) கருமங்களின் காரண மாக சுவனபதி தங்குமிடமாகி (அதில்) விருந்தாளியைப் போல் உபசரிக்கப்படுவார்கள்.




எவன் தன்னுடைய வலக் கையில் வினைச் சீட்டு கொடுக்கப்படுகின்றானோ, அவன் இதோ என்னுடைய வினைச்சீட்டு. இதனை நீங்கள் படித்துப்பாருங்கள் என்றும் நிச்சயமாக என்னுடைய கேள்வி கணக்கை சந்திப்பேன் என்றே நம்பி இருந்தேன் என்றும் கூறுவான். ஒருவரை ஒருவர் முகம் நோக்கி, அதன் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.


மாறாத இளமையுடைய இளைஞர்கள் (வேலை செய்வதற் காக எந்த நேரமும்) இவர்களை சுற்றிக் கொண்டே இருப் பார்கள்; இன்பமான பானம் நிறைந்த குவளைகளையும், கெண்டிகளையும், கிண்ணங்களையும் தூக்கிக் கொண்டு (அவர் களை சுற்றிக் கொண்டே இருப்பார்கள்.)


இவர்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய கனிகளையும், விரும்பிய பட்சிகளின் மாமிசத்தையும் (அந்த இளைஞர்கள்) தாங்கித் திரிவர். (அங்கு இவர்களுக்கு ஹூருல் ஈன்களும் இருப் பார்கள்.)


அங்கு இவர்கள் தீயவார்த்தைகளையும், வீணான பேச்சுக் களையும் கேட்கமாட்டார்கள். ஆயினும் ஸலாம் ஸலாம் என்ற சப்தத்தையன்றி,


முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும், குலை குலை யாகத் தொங்கும் வாழை மரத்தின் கீழும் அடி சாயாத நிழலிலும் இருப்பார்கள். (அங்கு எப்போதும் ) ஓடிக் கொண்டே இருக்கும் நீரும், ஏராளமான கனிவர்க்கங்களும் (உண்டு) அதனுடைய கனிகள் (புசிப்பதற்கு ) தடுக்கப்பட மாட்டாது, (பறிப்பதால்) குறையவும் செய்யாது.


உயர்ந்த மேலான விரிப்புகளில் (அமர்ந்திருப்பார்கள்) அங்குள்ள சிம்மாசனங்களின்மீது சாய்ந்து கொண்டிருப் பார்கள். அதில் சூரிய வெப்பத்தையும், பனியின் கொடிய குளிர்ச்சியையும் காணமாட்டார்கள்.




அதிலுள்ள (விருட்சங்களின்) நிழல்கள் அவர்கள் மேல் கவிழ்ந்து கொண்டிருக்கும். அதன் வரும். கனிகள் தாழ்ந்து


பளிங்குக் கெண்டிகளும், வெள்ளிக் கிண்ணங்களும் அவர்கள் முன் சுற்றிக் கொண்டே இருக்கும். (அவைப் பளிங்குகளல்ல) வெள்ளியினால் பளிங்குகளைப் போன்று செய்யப்பட்டது.


( இஞ்சி கலந்த) 'ஜஞ்ஜநீல்' என்னும் பானமும் அவர் களுக்கு அங்கு புகட்டப்படும். அது (அங்குள்ள) ஓர் ஊற் றின் ஜலம், அதற்கு 'ஸல்ஸபீல்' என்ற பெயர் கூறப்படும்.


என்றுமே மாறாத இளமையுடையவர்கள் அவர்களைச் சுற்றிக்கொண்டே இருப்பார்கள், (நபியே!) நீர் அவர்களைப் பார்ப்பீரானால் அவர்களைச் சிதறிய முத்துக்களென்றே மதிப்பீர்.


பின்னும் கவனித்துப் பார்த்தால், பெரிய அரச மாளி கையிலுள்ள சுகபோகங்களை யெல்லாம் நீர் காண்பீர். அவர்கள் தேகத்தின்மேல் மெல்லிய பச்சை பட்டா டையோ, அ லது திறமான பட்டாடையோ இருக்கும், வெள்ளிக் காப்புகளும் அவர்களுக்கு அணிவிக்கப்படும். பரிசுத்தமான ஒரு பானத்தையும் அவர்களின் இறைவன் அவர்களுக்குப் புகட்டி நிச்சயமாக இது உங்களுக்குக் கூலி யாகக் கொடுக்கப்பட்டது. உங்களுடைய பிரயாசையும் அங்கீகரிக்கப்பட்டது. (என்றும் கூறுவான்.)


நிச்சயமாக தக்வா உடையவர்கள் (அந்நாளில்) நிழல் களிலும் ஊற்றுகளிலும் இருப்பார்கள். அவர்கள் விரும்பிய பழ வகைகள் அவர்களுக்குண்டு. (அவர்களை நோக்கி) நீங்கள் செயல்களின் செய்து கொண்டிருந்த (நற்) காரணமாக மிக தாரளமாக 76


இவைகளைப் புசித்துப் பருகிக் கொண்டிருங்கள் (என்று கூறப்படும்.)


அதன் கனிகள் (இவர்கள் அமர்ந்திருந்தாலும் படுத் திருந்தாலும் எல்லா நிலைகளிலும் கைக்கு எட்டக்கூடியதாக இவர்களை) நெருங்கி இருக்கும்.


அந்நாளில் நிச்சயமாக சுவனவாசிகள், மகிழ்ச்சியில் நிலைத்திருப்பார்கள். அவர்களும், அவர்களுடைய மனைவி மார்களும் நிழலின் கீழ் கட்டில்களின் மேல் சாய்ந்து கொண் டிருப்பார்கள். அதில் அவர்களுக்கு (வகை வகையான) பழ வர்க்கங்களுடன் அவர்கள் கேட்பதெல்லாம் கிடைக்கும்.


அவர்களின் முகங்களைக் கொண்டே அவர்களின் சுக வாசத்தின் செழிப்பை (நபியே) நீர் அறிந்து கொள்வீர்.


முத்திரையிடப்பட்டிருக்கும் கலப்பற்ற திராட்சை ரசம் அவர்களுக்குப் புகட்டப்படும். அது கஸ்தூரியால் முத்திரை யிடப்பட்டிருக்கும். ஆசிப்போர் அதனையே ஆசிக்கவும், அதில் தஸ்னீம் என்ற (வடிகட்டிய) பானமும் கலந்திருக்கும். சமீப மானவர்கள் அருந்துவதற்கென ஏற்பட்ட ஒரு சுனையின் நீராகும்.


திண்டு தலையணைகள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும், உயர்ந்த விரிப்புகள் விரிக்கப்பட்டிருக்கும்.


''திருப்தியடைந்த ஆத்மாவே ! நீ உன் இறைவன்பால் செல் ! அவனைக் கொண்டு நீ திருப்தியடை ! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கிறான். நீ என்னுடைய நல்லடி யார்களில் சேர்ந்து, சுவனபதியிலும் நீ நுழைந்து விடு" (என்று) கூறுவான்.


அல்லாஹ் நம் அனைத்து முஸ்லீம் ஆண் /பெண் அனைவருக்கும் சுவனம் செல்லும் பாக்கியத்தை அருள் செய்வானாக ஆமீன்...

கருத்துகள்