நல்லெண்ணம்
நிய்யத் எனும் வடிவில் அல்லாஹுத்தஆலா ஈமானுடையவர்களுக்காக தந்துள்ள பொக்கிஷம் எத்தகையதென்றால் அதன் மூலம் ஒவ்வொரு முஸ்லிமும் சிறு கவனத்தினால் மண்ணையும் தங்கமாக மாற்றிக்கொள்ள முடியும், நபி (ஸல்) அவர்களின் ஓர் பொன்மொழி இவ்வாறு வந்துள்ளது “ எல்லாசெயல்களின் அடிப்படை எண்ணங்கள்தான் ” .
சிலர் இந்த வாசகத்தை , நல்லெண்ணத்தால் தவறான காரியமும் நன்மையாக மாறிவிடுகிறது , பாவமும் நன்மையாக போய்விடுகிறது என விளங்கிக்கொள்கிறார்கள் , இது முற்றிலும் தவறான விஷயமாகும். பாவம் எல்லா நிலைமைகளிலும் பாவமாகத்தான் இருக்கும். எத்தனை நல்லெண்ணத்தில் அதை செய்யப்பட்டாலும் அது ஆகுமானதாக ஆகி விடப் போவதில்லை உதாரணமாக ஒருவர் ஒருவரின் வீட்டில் திருடுகிறார், அவருடைய எண்ணம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு தான தர்மம் செய்வேன் என்பதுதான் , இந்த நிய்யத்தின் காரணமாக அவரின் திருட்டு குற்றம் மன்னிக்கப்படாது , ஆகவே நபி (ஸல்) அவர்களின் மேற்கூறப்பட்ட பொன்மொழியின் கருத்து இதுதான்,அதாவது
1) ஒரு நற்காரியம் அதனை நல்லெண்ணத்தோடு செய்யப்படாதவரை அதற்கான நன்மை கிடைக்காது . தொழுகையுடைய நன்மை அல்லாஹ்வின் பொருத்ததிற்காக அத்தொழுகை தொழப்பட்டால் மட்டும் தான் கிடைக்கும். அதனை பிறருக்கு காட்டுவதற்காக தொழுதால் அதன் நன்மை இல்லாமல் போகும், நன்மைக்கு பதில் பாவம் உண்டாகும்.
2) இரண்டாவது கருத்து, இது தான் நாம் கூறவந்ததும் கூட, அது யாதெனில் ஆகுமான அனுமதிக்கப்பட்ட செயல்கள் யாவற்றின் அசல்நிலை அவற்றை செய்வதால் நன்மையையும் கிடைக்காது , விடுவதால் தீமையும் ஏற்படாது என்பது தான், ஆனால் அந்த ஆகுமான காரியத்தையே நல்லெண்ணத்தோடு செய்யப்பட்டால் அவை வணக்கமாக மாறிவிடுகின்றன, அவற்றிற்காக நன்மையையும் கிடைக்கின்றது , உதாரணமாக உணவு உண்ணுதல் ஆகுமான காரியங்களில் ஒன்று, யாரேனும் உணவை , நான் உணவு உட்கொண்டால் அதன் மூலம் ஆற்றல் கிடைக்கும், அந்த ஆற்றலை நான் அல்லாஹ்வின் வழிபாட்டு காரியங்களில் பயன்படுத்துவேன் என்ற எண்ணத்தோடு உணவு உட்கொண்டால் அதுவே நன்மையாக மாறிவிடும், அல்லது அல்லாஹ் என்னுடைய உடலுக்காகவும் நான் செய்ய வேண்டிய கடமைகள் சிலவற்றை வைத்துள்ளான் , அவற்றை நிறை வேற்றுவதற்காக நான் உண்ணுகிறேன் என்ற எண்ணத்தோடு அல்லது நான் உண்ணும் ருசியான இன்பமான உணவால் நான் உள்ளத்தால் இறைவனுக்கு நன்றி செலுத்துவேன் என்ற எண்ணத்திலோ அவ்வுணவை உட்கொண்டால் இந்த எண்ணங்களினால் உணவு உண்பதிலும் நன்மை கிடைக்கும்.
ஆக வாழ்க்கையின் எந்த ஒரு ஆகுமான காரியமாக இருந்தாலும் அவற்றை நல்லெண்ணத்தின் மூலம் வணக்கமாகவும், நன்மைக்குரியதாகவும் மாற்றி விட முடியும். நம் தினசரி வாழ்க்கையின் காரியங்களை நன்மையாக மாற்றிக் கொள்ளும் படியான நல்லெண்ண செயல்களின் சில உதாரணங்கள் கீழே தரப்படுகின்றன.
· சம்பாதிப்பது அது வியாபார வடிவில் இருந்தாலும், கூலி வேலை வடிவில் இருந்தாலும், விவசாயமாக இருந்தாலும், வேறு எந்த தொழிலாக இருந்தாலும் இவைகளில் மனிதன் அல்லாஹ் என்னுடைய பொறுப்பில் என்னுடைய, என் குடும்பத்தார்களுடைய கடமைகளை வைத்துள்ளான், அவற்றையெல்லாம் மிகச்சரியான முறையில் நிறைவேற்றுவதற்காக சம்பாதிக்கின்றேன் என நிய்யத் வைத்துக்கொண்டால் பொருளீட்டுவதின் இந்த எல்லா துறைகளும் வணக்கமாக , நன்மையாக மாறிவிடும்.
· மேலும் தான் சம்பாத்தித்ததை தனக்கும் தன் வீட்டார்களின் தேவைக்கும் செலவு செய்த பிறகு எது மிஞ்சுமோ அதிலிருந்து ஏழைகளுக்கு உதவி செய்தல் மற்றுமுள்ள நல் வழிகளில் செலவு செய்வேன் என நிய்யத்வைத்துக்கொண்டால் மேலும் நன்மைகள் கிடைக்கும்.
· ஒருவர் இப்போது தான் கல்வி கற்றுக்கொண்டு இருக்கிறார், நான் இந்த கல்வியின் மூலம் மக்களுக்கு சேவை செய்வேன் என நிய்யத்வைத்துக்கொண்டால் உதாரணமாக ஒருவர் தீனுடைய கல்வியை கற்றுக் கொண்டிருந்தால் அவர் மக்களுக்கு தீனை எத்திவைப்பேன் என நிய்யத் வைத்துக் கொள்ளவேண்டும். மருத்துவ துறை , அறிவியல் துறை மாணவராக இருந்தால் அவர் மருத்துவத்தின் மூலம் நோயாளிகளுக்கு சேவை செய்வேன் என நிய்யத் வைத்துக்கொள்ளவேண்டும். பொறியியல் மாணவராக இருந்தால் நான் இக்கலையின் மூலம் சமுதாயத்திற்கு சேவை புரிவேன் என நிய்யத் வைத்துக்கொள்ளவேண்டும். வேறு எந்த விதமான தொழிலை கற்றுக் கொள்வதானாலும் அவற்றின் மூலம் தேவையுள்ள மனிதர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக கற்கிறேன் என நிய்யத்வைத்துக்கொள்ளவேண்டும். . இவ்வாறெல்லாம் நிய்யத் வைத்துக் கொண்டு இவைகளில் ஈடுபட்டால் எத்தனை காலம் அவற்றில் ஈடுபட்டிருப்பாரோ அதற்கான நன்மைகளை அவர் பெற்றுக்கொள்வார்.
· பின்னர் அவர் எந்த தொழிலை மேற்கொண்டாலும் அதில் அவர் இவ்வாறு எண்ண வேண்டும் , ரிஜ்க்வுடைய பொறுப்பை அல்லாஹ் தன் கையில் வைத்துள்ளான். ஏதாவது ஒரு வகையில் அது கண்டிப்பாக கிடைத்தே தீரும். அதை பெறுவதற்கு பல வழிகள் உள்ளன. நான் இந்த வழியை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் இதன் மூலம் நான் அல்லாஹ்வின் படைப்புகளுக்கு சேவை செய்வதற்காகத்தான் என்று நிய்யத் வைத்தால் அவருடைய அந்த தொழிலும் நன்மைக்குரியதாக மாறிவிடும்.
· உதாரணமாக ஒருவர் மருத்துவராகி தான், ரிஜ்க்வுடைய பல வழிகளில் இந்த பாதையை தேர்ந்தெடுப்பதற்கு காரணம் இதன் மூலம் சிரமப்படும் மனிதர்களுக்கு உதவி செய்வதற்காக என்று நிய்யத் வைத்துக்கொண்டால் , அவர் தான் செய்த மருத்துவத்திற்காக நோயாளிகளிடமிருந்து நியாயமான கட்டணம் வசூலித்தாலும் கண்டிப்பாக இன்ஷா அல்லாஹ் அவருக்கு நன்மை கிடைக்கத்தான் செய்யும், உண்மையிலேயே அவருடைய எண்ணம் இவ்வாறு இருக்குமேயானால் ஏதேனும் எளிமைபட்டவரை கண்டு அவருக்கான மருத்துவத்தை எவ்வித கட்டணமும் பெறாமல் அல்லது பலத்த சலுகைகளோடு செய்வதற்கான சந்தர்ப்பங்களும் வரத்தான் செய்யும்.
· மேலும் உதாரணமாக ஒருவர் துணி வியாபாரம் செய்ய விரும்புகிறார், அவர் நிய்யத் வைத்துக்கொண்டார் , ஒவ்வொரு மனிதனும் ஷரிஅத் அடிப்படையில் ஆடை அணிவது அவசியமாகும். நான் பல தொழில்களில் இந்த தொழிலை ஏன் தேர்ந்தெடுத்துள்ளேன் என்றால் இதன் மூலம் மக்கள் அந்த கடைமையை நிறைவேற்றுவதற்கு உதவி புரிவதற்குத்தான் என்ற எண்ணம் இருந்தால் இன்ஷா அல்லாஹ் இந்த தொழிலும் நன்மைக்கு காரணமாகி விடும் .
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!