RECENT POSTS

ஏகத்துவவாதிகளில் பாவிளுக்கு நிரந்தர நரகம் கிடையாது


 ஏகத்துவவாதிகளில் பாவிளுக்கு நிரந்தர நரகம் கிடையாது


 நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்: "சொர்க்கவாசிகள் சொர்க்கத்திலும் நரகவாசிகள் நரகத்திலும் நுழைந்து விடுவார்கள். அதன் பிறகு எவருடைய உள்ளத்தில் கடுகு அளவு ஈமான் உள்ளதோ அவரை (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள் என்று அல்லாஹ் கூறுவான். அவர்கள் அதிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். அவர்கள் கருகிப் போய் இருப்பார்கள் பிறகு "ஹயாத்” எனும் ஜீவநதியில் போடப்படுவார்கள். அதனால் அவர்கள் வெள்ளம் பாயும் ஓடைக் கரையில் விதைகள் தளிர்ப்பதுபோல பொலிவடை வார்கள். அவை வளைந்து மஞ்சள் நிறமாக இருப்பதை நீர் பார்த்ததில்லையா?"


அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூல்: புகாரி-22


அடிப்படைக் கொள்கை பற்றி சில பாடங்கள்



இந்நபிமொழியில் அடங்கியுள்ள கருத்துக்கள் வருமாறு:


மனிதர்களிடையே ஈமானில் ஏற்றத் தாழ்வு காணப்படும். ஈமான் கொண்டவர்களில் பாவம் செய்தவர்கள் நரகத்தில் நிரந்தரமாக இருக்க மாட்டார்கள். ஒரு முஸ்லிம், தான் செய்த பாவங்களின் காரணமாக நரகம் செல்வான். நற்செயல்கள் ஈமானைச் சேர்ந்ததாகும். ஈமான் அதிகரிக்கவும் செய்யும் குறையவும் செய்யும். ஒரு அடியான் எந்த நன்மையையும் அற்பமாகக் கருதக் கூடாது. எளிதில் உணர்ந்து கொள்ளக் கூடிய விஷயங்கள் மூலம் கருத்துக்களை தெளிவுபடுத்துவது. மறுமையில் செயல்கள் நிறுக்கப்படும். மக்களுக்குத் தெரிந்த விஷயங்களைக் கொண்டு உவமானம் கூறுவது. நரகில் கடுமையான வேதனை உண்டு. (அதனை விட்டும் அல்லாஹ் நம்மை காப்பாற்றுவானாக!) சிறிதளவு நற்செயல் காரணமாக சிலரை அல்லாஹ் நரகத்திலிருந்து வெளி யேற்றினான் எனும் வகையில் தன் அடியார்கள் மீதுள்ள அல்லாஹ்வினுடைய விசாலமான கருணை இங்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.


 "எவர் தமது உள்ளத்தில் ஒரு வார்க்கோதுமை அளவு


நன்மையிருக்கும் நிலையில் வணக்கத்திற்குரிய இறைவன்


அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை


எனக்  கூறினாரோ அவர் நரகிலிருந்து வெளியேறிவிடுவார். மேலும்




எவர் தமது இதயத்தில் ஒரு மணிக்கோதுமை அளவு நன்மை


யிருக்கும் நிலையில் வணக்கத்திற்குரியன் அல்லாஹ்வைத்


தவிர வேறு யாருமில்லை எனக் கூறினாரோ அவரும்


நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார். மேலும் எவர் தமது


உள்ளத்தில் ஒரு அணு அளவு நன்மையிருக்கும் நிலையில் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை எனக் கூறினாரோ அவரும் நரகிலிருந்து வெளியேறி விடுவார்" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி-44, முஸ்லிம்-193


கருத்துகள்