புறம் பேச மாட்டார்
உண்மை முஸ்லிம் தனது சகோதரர்கள், நண்பர்களின் கௌரவத்தைப் பேணிப் பாதுகாத்துக் கொள்வார். அவர்களைப் பற்றி புறம் பேச மாட்டார். ஏனெனில் புறம் பேசுவது ஹராம் என்பது அவருக்குத் தெரியும். அல்லாஹ் தனது அருள்மறையில் கூறுகிறான்:"
உங்களில் ஒருவர் மற்றெவரையும் புறம் பேச வேண்டாம். உங்களின் எவனும் தன்னுடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவானா? அதனை நீங்கள் வெறுப்பீர்களே! (புறம் பேசுவதும் அவ்வாறே). அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பாவத்திலிருந்து) விலகுவோரை அங்கீகரிப்போனாகவும் கிருபை செய்வோனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் 49:12)
இறையச்சமுள்ள முஸ்லிம் இஸ்லாமிய நற்பண்புகளைப் பின்பற்றுபவர். புறம் பேசுபவருக்கு திருமறை காட்டும் உதாரணத்தைக் கண்டவுடன் அவரது மேனி சிலிர்த்துவிடும். ஆம்! இறந்துவிட்ட சகோதரனின் இறைச்சியை உண்ணும் தைரியம் அவருக்கு எப்படி வரும்? அதனால் அல்லாஹ், புறம் பேசுவது பற்றிய வசனத்தின் கீழ் குறிப்பிடுவது போன்று அல்லாஹ்வின் அச்சத்தால் தௌபாவின் பக்கம் விரைந்தோடுவார். தவறுகள் ஏற்பட்டிருந்தால் தூய்மையான தௌபாவின் மூலம் பரிகாரம் தேடிக்கொண்டு தனது நாவையும் கட்டுப்படுத்திக் கொள்வார். தனது சகோதரர்களைப் பற்றி நல்லதைத் தவிர வேறெதையும் பேசத் துணியமாட்டார்.
நபி (ஸல்) அவர்கள், "புறம் பேசுதல் என்றால் என்னவென்பதை அறிவீர்களா?" என்று வினவினார்கள். தோழர்கள் கூறினர்: "அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிந்தவர்கள்." நபி (ஸல்) அவர்கள், "உமது சகோதரர் வெறுக்கும்படியான ஒன்றை நீ பேசுவது" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களிடம், "நான் சொல்வது என் சகோதரரிடம் இருந்தால் (அதுபற்றி) என்ன கருதுகிறீர்கள்?" என்று ஒருவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "நீர் சொல்வது உம்முடைய சகோதரரிடமிருந்தால் நீர் புறம் பேசிவிட்டீர். அது அவரிடம் இல்லை யென்றால் அவரைப் பற்றி அவதூறு கூறிவிட்டீர்," என்று கூறினார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்)
இறையச்சமுள்ள முஸ்லிம் மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ புறம் பேசுவதிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தனது இறந்த சகோதரனின் இறைச்சியைத் தின்று தனது நாவு தன்னை நரகில் தள்ளிவிடுவதை அஞ்சி, தவிர்ந்து கொள்வார்.
நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரழி) அவர்களிடம் தமது நாவைப் பிடித்தவர்களாகக் கூறினார்கள்: "இதை உம் மீது தடுத்துக் கொள்வீராக!" முஆத் (ரழி), "அல்லாஹ்வின் தூதரே! நாம் பேசும் பேச்சின் காரணமாக மூன்டிக்கப்படுவோமா?" என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், "உமது தாய் உன்னை இழக்கட்டும்! மனிதர்களை முகம் குப்புற நரகில் தள்ளுவதெல் லாம் அவர்களது நாவுகள் அறுவடை செய்ததைத் தவிர வேறெதுவாக இருக்க முடியும்" என்று கூறினார்கள்.
(ஸுனன் இப்னு மாஜா)
புறம் பேசுவது கீழ்த்தரமான குணமாகும். இது இரட்டை நாவுடைய இழி மக்களின் பண்பாகும். இரட்டை நாவு உடையவன் மக்களுக்கிடையே தனது சகோதரர்களைப் பற்றியும், நண்பர்களைப் பற்றியும் புறம் பேசுவான். அவர்களைச் சந்தித்தால் முகமலர்ச்சியுடனும், நேசத்துடனும் அன்பை வெளிப்படுத்தி உரையாடுவான். எனவே உண்மை முஸ்லிம், புறம் பேசுவதிலிருந்தும் இரட்டை வேடத்திலிருந்தும் முற்றிலும் விலகியிருப்பார். இஸ்லாம் அவருக்கு வீரத்தையும்,மன உறுதியையும் கற்றுக் கொடுத்து சொல்லிலும் செயலிலும் தக்வாவை (இறையச்சத்தை) வலியுறுத்தி, நயவஞ்சகத்தையும் இரட்டை நாவையும் வெறுப்புக்குரியதாக ஆக்கியுள்ளது. எனவே இவ்வாறான இழி செயல்களிலிருந்து முஸ்லிம் வெருண்டோடுவார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மறுமை நாளில் அல்லாஹ்விடம் மிகக் கெட்ட மனிதன் இரட்டை முகமுடையவன். அவன் இவர்களிடம் ஒரு முகத்துடனும், அவர்களிடம் மற்றொரு முகத்துடனும் வருவான்."
(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
உண்மை முஸ்லிம் இரட்டை முகமுடையவர் அல்லர். அவர் ஒரே முகமுடையவர். அவரது முகம் தெளிவான பிரகாசம் உடையது. ஒவ்வொரு பிரிவினருக்கும் வெவ்வேறு முகத்தைக் காட்டாமல் மனிதர்கள் அனைவருக்கும் ஒரே முகத்தைக் காட்டுவார். ஏனெனில் இரட்டை வேடம் போடுவதுதான் நயவஞ்சகத்தனம் என்பதை அவர் அறிவார். இஸ்லாமும் நயவஞ்சகத்தனமும் ஒருபோதும் ஒன்றிணையாது. இரட்டை நாவ உடையவன் நயவஞ்சகனாவான். நயவஞ்சகர்கள் நரகின் கீழ்ததட்டில் வீசப்படுவார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உமது சகோதரருடன் தர்க்கம் செய்யாதீர்; பரிகாசம் செய்யாதீர்; ஒரு வாக்குறுதியை அளித்துவிட்டு அதற்கு மாறு செய்யாதீர்."
(அல் அதபுல் ஃமுப்ரத்)
தர்க்கம் செய்வது நன்மையைத் தராது. அவ்வாறே மனதைக் காயப்படுத்தும் பரிகாசம் பெரும்பாலும் வெறுப்பை ஏற்படுத்திவிடும். வாக்குறுதி அளித்துவிட்டு அதற்கு மாறு செய்வது இதயத்தில் சஞ்சலத்தை ஏற்படுத்தி அன்பை அகற்றிவிடும். உண்மை முஸ்லிம் இதற்கெல்லாம் அப்பாற்பட்டு நிற்க வேண்டும்.
தன்னை விட தனது சகோதரரைத் தேர்ந்தெடுக்கும் உயர்ந்த மனிதர்
உண்மை முஸ்லிம் வாரி வழங்கும் வள்ளலாகத் திகழ்வார். தனது தோழர்களுக்கும் சகோதரர்களுக்கும் உதவுவதற்கு கரங்களை எப்போதும் திறந்து வைத்திருப்பார். இறையச்சமுள்ள முஃமின்களே அவருடைய நண்பர்களாக இருப்பார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "முஃமினைத் தவிர வேறு எவருடனும் தோழமை கொள்ளாதே! உமது வீட்டு உணவை இறையச்சமுடையவரைத் தவிர வேறு எவரும் உண்ண வேண்டாம்."
(ஸுனன் அபூதாவூத்)
முஸ்லிம் அவசியத்திற்கேற்பவும் சூழ்நிலைகேற்பவும் தனது கொடைத் தன்மையை வெளிப்படுத்துவார். அதற்கு எந்தவொரு வரம்பையும் நிர்ணயித்துக் கொள்ளமாட்டார். அதில் தனது சகோதரர்களையும் தோழர்களையும் கவனத்தில் கொள்வார். அநியாயக்காரர்களின் வரம்பு மீறுதலுக்கும், தீமைகளுக்கும் அஞ்சியோ அல்லது அவர்களது அதிகாரத்துக்குப் பயந்து, அவர்களது நேசத்தை விரும்பியோ எதையும் கொடுப்பதற்கு ஒப்பமாட்டார். தகுதியற்ற இடங்களில் செலவழித்து தன்னைத்தானே பாராட்டிக் கொள்வதையும் அல்லது பிறரால் பாராட்டப்படுவதையும் ஏற்கமாட்டார்.
மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம் வாரி வழங்கும் வள்ளலாக இருப்பதுடன் உரிய வகையில் செலவிடவும் அறிந்திருக்க வேண்டும். கொடைத்தன்மை இஸ்லாமின் அடிப்படைப் பண்பாகும் அது முஸ்லிமை உயர்வடையச் செய்து அவரை அழகுபடுத்துகிறது. மக்களுக்கு அவர் மீது நேசம் உண்டாகி, அவர்களை அவரிடம் நெருங்கி வரச் செய்கிறது.
147
கடைவீதிக்கு வந்து ஓர் அடிமையை வாங்கி உரிமை விடுவதை விட எனக்கு மிகவும் விருப்பமானதாகும்.
விருந்துக்காக ஏற்படுத்தப்படும் சந்திப்புகள் சகோதரர்கள், நண்பர்களுக்கிடையே நேச உறவுகளை வளர்க்கிறது. நவீன கலாச்சாரத்தின் விளைவாக மனிதகுலம் இழந்து நிற்கும் அன்பை வாழ்வில் மலரச் செய்கிறது.
இந்நவீனகால கலாச்சாரத்தில் மனிதன் தனது முன்னேற்றத்தையும், சுயநலத்தையும் தவிர வேறெதனையும் இலட்சியம் செய்வதில்லை. இக்கலாச்சாரம் வாடிப்போன ஆன்மாவையும், வறண்டு போன உள்ளத்தையும் உருவாக்குகிறது. தூய்மையானவர்களின் நட்பை அலட்சியம் செய்யும் போக்கை வளர்த்துவிடுகிறது.
இது பொருளாதாரத்தை வாழ்க்கை நெறியாகக் கொண்ட குறுகிய மனிதநேயத்தின் அடையாளமாகும். அதனால்தான் மேற்கத்திய குடும்பங்களில் நாய்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.
பிரான்ஸ் நாட்டைப் பற்றி ஒரு கட்டுரை வெளியானது. அதில் 5.2 கோடி மக்கள் தொகையைக் கொண்ட பிரான்ஸில் நாய்களின் எண்ணிக்கை 70 லட்சம். அங்கு நாய்கள் அம்மக்களுடன் நெருங்கிய உறவினரைப் போன்று வாழ்கின்றன. பாரீஸ் நகர ஓட்டல்களில் நாயும் அதன் எஜமானனும் ஒரே தட்டில் உணவருந்துவது சாதாரண காட்சியாகும். பாரிஸில் உள்ள பிராணிகள் வளர்ப்போர் சங்கத்தாரிடம் "பிரான்ஸ் தேச மக்கள் நாய்களை தங்களுக்கு இணையாக பராமரிக்கிறார்களே காரணமென்ன?" என்று வினவப்பட்டபோது, அதற்கு கிடைத்த பதில் பின்வருமாறு: "அந்நாட்டு மக்கள் தாங்கள் பிறரால் நேசிக்கப்படுவதை விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் மனிதர்களில் தங்களை உண்மையாக நேசிப்பவர் யாரென்பதைக் கண்டறிய முடியவில்லை." கிழக்காயினும் மேற்காயினும் உலகாதாய வாழ்வைக் கொண்டுள்ள மனிதன் தனது சமூகத்தில் தூய அன்பையும் நேசத்தையும் தம் மீது பொழியும் மனிதர் எவரையும் கண்டுகொள்ள முடியாது. அதனால் அம்மனிதனுக்கு தன்னைச் சுற்றி வாழும் மனிதர்களை விட நேசமாக நடந்து கொள்ளும் விலங்கினங்களுடன் இணைந்து போக முடிகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!