ஈமான் அதிகரிப்பதும் குறைவதும்

 


ஈமான் அதிகரிப்பதும் குறைவதும்


 "என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! நீங்கள் என்னிடம் இருக்கும்போது எந்த நிலையில் இருந்தீர்களோ அந்த நிலையிலும் இறைநினை விலும் நீடிப்பீர்களானால் உங்கள் படுக்கைகளிலும் (நீங்கள் செல்லும்) வழிகளிலும் வானவர்கள் உங்களுடன் கை கோர்த்துக் கொள்வார்கள். ஆயினும் ஹன்ழலாவே! சிறிது நேரம் இறைநினைவிலும் சிறிது நேரம் உலகக் 

களிலும் என இருந்துகொள்!" என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஹன்ழலா (ரலி) அறிவிக்கிறார்கள். (ஹதீஸின் சுருக்கம்) நூல்: முஸ்லிம்-2750, திர்மிதி- 2514


இந்நபிமொழி கூறும் செய்திகள் பின் வருமாறு:


முஃமினின் நிலை வேறுபடுகின்றது. சிறிது பராமுகம் அவனுக்கு அவசியம் ஏற்பட்டுவிடுகின்றது. நபித்தோழர்களின் நிலைகளில் பெரும்பாலானது நபிகள் நாயகத்தின் அவையில் அவர்கள் அமர்ந்திருந்த நிலைதான். பாவம் செய்வது அடியானுக்கு அவசியம் போன்றது. அதனால் அவனுடைய பெறுமை நீங்கி, அவனது அடிமைத்தனம் உறுதி பெறும். தன் எஜமானிடம் அவன் மன்னிப்புக் கோருவான். படைப்பினங்களை உருவாக்குவதும் அழிப்பதும் அல்லாஹ்வுக்கு எளிதானது. முஃமின்களில் உத்தமர்கள் சில வேளை மலக்குகளைக் காண்பார்கள். சிலவேளை அவர்களுடன் கைகுலுக்குவார்கள். இது சில நல்லடியார்களுக்கு நடந்துள்ளது. மலக்குகள் நல்லோர்களை அவர்களது வீடுகளில் தரிசிப்பார்கள்.


45. நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்: "ஆடை இத்துப் போவதைப்போல உங்களில் ஒருவரது உள்ளத்தில் ஈமான் இத்துப் போய்விடுகிறது. எனவே உங்கள் உள்ளங்களில் ஈமானைப் புதுப்பிக்குமாறு அல்லாஹ்விடம் கேளுங்கள்."


அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அமர்(ரலி), நூல்: தப்ரானி கபீர், ஸில்ஸில...ஸஹீஹா-1585


இந்நபிமொழியின் கருத்துக்கள் வருமாறு:


பாவம் செய்வதனால் ஈமான் பலவீனமடைகிறது. (இறை நினைவை விட்டும்) பாராமுகமாவதால் உள்ளத்தில் ஈமான் இத்துப் போய்விடுகிறது. திக்ர், துஆ, திருக்குர்ஆன் ஓதுதல், பொதுவாக நற்செயல் புரிதல் ஆகியவற்றின் மூலம் ஈமான் புதுப்பிக்கப்பட வேண்டும்- ஆடை புதுப்பிக்கப்படு வதுபோல. அடியான் தன் இறைவனிடம் ஈமான் அதிகரிப்பதற்கும், அதில் உறுதியுடன் நிரந்தரமாக இருப்பதற்கும் இறைஞ்ச வேண்டும்.


46."ஒருவன் விபச்சாரம் செய்யும்போது அவனிடமிருந்து ஈமான் வெளியேறி (அவனுக்கு மேல்) மேகத்தைப் போல் நிற்கும். பிறகு அவன் அதிலிருந்து (தவ்பாச் செய்து) மீண்டு விட்டால் அந்த ஈமான் அவனிடம் திரும்பிவிடும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),


நூல்: அபூதாவூத்-4690, ஸில்ஸில...ஸஹீஹா-509


இந்நபிமொழியில் அடங்கியுள்ள கருத்துக்கள் வருமாறு:


பாவங்கள் புரிவதன் கெடுதி விளக்கப்பட்டுள்ளது. அது ஈமானின் பரிபூரணத்தைக் கெடுத்து அதில் குறையை ஏற்படுத்திவிடும். ஈமான் சில நேரங்களில் அகன்று விடுகிறது. பாவம் செய்வதால் ஈமானுக்கு எந்த இடைஞ்சலும் கிடையாது எனக் கூறுகின்ற முர்ஜிஆக்களுக்கு இந்த ஹதீஸில் மறுப்பு இருக்கிறது. ஈமான் அதிகரிக்கவும் செய்யும் குறையவும் செய்யும் என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுன்னத் ஜமாஅத்தினரின் வழிமுறையும் இதுவேயாகும்.


புலனுணர்வுக்கு உட்படாத விஷயங்கள் சிலபோது புலனுணர்வுக்கு உட்பட்ட விஷயங்களின் வடிவில் எடுத்துச் சொல்லப்படும். விபச்சாரத்தின் தீங்கு இங்கு சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. அது பாவங்களில் மிக மோசமான பாவமாகும். ஒரு அடியான் தனது ஈமானை, அது விலகிப் போவதை விட்டும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பாவங்களிலிருந்து விலகிக் கொள்வதன் மூலமும், தூய்மையான முறையில் தவ்பா செய்வதன் மூலமும் ஈமானைப் பாதுகாக்கலாம்.


47."விபச்சாரம் செய்பவன் விபச்சாரம் செய்யும்போது முஃமினாக இருப்பதில்லை. மது அருந்துபவன் மது அருந்தும் போது முஃமினாக இருப்பதில்லை. திருடுபவன் திருடும்போது முஃமினாக இருப்பதில்லை. மக்கள் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க-மதிப்பு மிக்க பொருளை கொள்ளையடிப்பவன், கொள்ளையடிக்கும் நேரத்தில் முஃமினாக இருப்பதில்லை" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.


நூல்: புகாரி-5578, முஸ்லிம்-57


இந்நபிமொழியில் அடங்கியுள்ள கருத்துக்கள் வருமாறு:


பெரும் பாவங்கள் பொதுவாக பரிபூரணமான ஈமானுக்கு எதிரானதாகும். ஈமான் ஒரு முஃமினை பாவங்களை விட்டும் தடுக்கிறது. பாவங்கள் ஈமானில் பாதிப்பை ஏற்படுத்தாது என முர்ஜிஆக்கள் கூறுவதற்கு இதில் மறுப்பு இருக்கிறது. பெரும் பாவங்களைச் செய்பவர்களுக்கு இதில் கடுமையான எச்சரிக்கை உள்ளது. பாவங்களில் பெரும் பாவங்களும் சிறு பாவங்களும் உள்ளன.


லாஇலாஹ இல்லல்லாஹ்வின் நிபந்தனைகள்


48. அபூஹுரைரா (ரலி) அறிவிப்பதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களைச் சுற்றி அமர்ந்திருந்தோம். எங்களுடன் அபூபக்ரும் உமரும் இன்னும் சிலரும் இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு மத்தியிலிருந்து எழுந்து வெளியே சென்றார்கள். வெகு நேரமாகியும் அவர்கள் திரும்பவில்லை. எதிரிகளிடமிருந்து ஏதேனும் தீங்கு நேர்ந்துவிட்டதோ என நாங்கள் அஞ்சினோம். உடனே நாங்கள் (அவ்விடத்தி லிருந்து) எழுந்தோம். முதலில் நான் தான் பயந்தேன். நான் நபி (ஸல்) அவர்களைத் தேடிச் சென்று இறுதியில் பனூ நஜ்ஜார்களான அன்ஸார்களுக்குரிய ஒரு தோட்டத்திற்கு வந்தேன். அங்கு (உள்ளே நுழைவதற்கு) ஏதாவது வாசல் இருக்கிறதா? என்று தேடிப் பார்த்தேன்; கிடைக்கவில்லை.


அப்போது வெளியே உள்ள ஒரு கிணற்றிலிருந்து தோட்டத்தினுள் செல்லக்கூடிய வாய்க்கால் ஒன்று இருந்தது. அதன் வழியே குள்ள நரி பதுங்கிச் செல்வதுபோல் பதுங்கிச் சென்று நபி(ஸல்)அவர்களிடம் சென்றேன். "அபூஹுரைராவா?" என்றார்கள். "அல்லாஹ்வின் தூதரே! ஆம்! (நான் தான்)' என்றேன். நபி (ஸல்) அவர்கள், "என்ன விஷயம்' என்றார்கள். 'நீங்கள் எங்களிடையே இருந்தீர்கள்; (திடீரென்று) எழுந்து சென்று விட்டீர்கள். வெகு நேரமாகியும் நீங்கள் திரும் வில்லை. உங்களுக்கு எதிரிகளிடமிருந்து ஏதேனும் துன்பம் நேர்ந்து விட்டதோ என நாங்கள் அஞ்சினோம். நான் தான் முதலில் பயந்தேன். எனவே இந்தத் தோட்டத்திற்கு வந்தேன். குள்ள நரி பதுங்குவது போல பதுங்கிப் பதுங்கி (உள்ளே) வந்தேன். மக்கள் எனக்குப் பின்னால் காத்திருக்கிறார்கள் என்று கூறினேன்.

கருத்துகள்