முக்கியச் செய்தி
மார்க்கப் பதிவுகள் சேகரிக்கப்படுகின்றன...

இஸ்லாமிய நூலகம்

சொடுக்கி வழிகாட்டியைத் திறக்கவும் ➔
தொடர்ந்து படிக்க Education
Recent Posts
15 பதிவுகள்
Pages
25 பக்கங்கள்
Random Posts
15 பதிவுகள்
All Tags
அனைத்து லேபிள்கள்
Connecting to the creator
Best Articles
Best Friends
Gaza People
Best Topics

பதிவுகள்

ஏற்றப்படுகிறது...

திசை மாறும் சில இளைஞர்கள் !


 திசை மாறும் சில இளைஞர்கள் !


அல்லாஹ்வின் திருப்பெயரால் ........


இன்று சில இளைஞர்களும், இளைஞிகளும் தடுமாறிக்கொண்டியிருப்பதை பார்க்கிறோம். சிலர் மார்க்க விடயத்தில்; இன்னும் சிலர் போதை விடயத்தில் ; ஒருசிலர் அரசியல்  விடயத்தில். 


முதலாவது இடத்தில் இருப்பவர்களை இன்ஷாஅல்லாஹ்   முழுமையாக இஸ்லாத்தில் நுழைய , பேணுதலாக இருக்க அவர்களுக்கு ஒரு தீர்வு , ஒரு வழியை ஏற்படுத்திவிடலாம். இரண்டாம் இடத்தில் உள்ளவர்கள் கொஞ்சம் சிரமம் ஆனால் , இன்ஷாஅல்லாஹ்   முயற்சி செய்து அவர்களை அந்த கெட்ட செயல்களிலிருந்து மீட்டுவிடலாம்.. இறுதியான மூன்றாம் இடத்தில் இருப்பவர்கள் , அவர்கள் இஸ்லாத்தை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகி ''கடவுள் மறுப்பாளராக மாறிவருகிறார்கள் . இவர்களின் நிலை ரொம்ப மோசமான நிலை! இரண்டு உதாரணம் கொடுக்கிறேன் ... ஒன்று பெரியார் கொள்கை வழியில் , இரண்டாவது அரசியல் 'நம் தமிழர் கட்சி'' இதன் மூலமாக மூளை சலவை செய்து கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாத்தை விட்டு வெளியேறி வருகிறார்கள் . ஆதாரம் இல்லாமல் எதுவும் சொல்லவில்லை. 

பகுத்தறிவு பேசிக்கொண்டு பெரியார் கொள்கையில் சில இளைஞர்கள் இருக்கிறார்கள். இன்னும் சிலர் 'நாம் தமிழர் கட்சியில் ' சில முஸ்லீம் ஆண்களும் , பெண்களும் இருக்கிறார்கள் . இவர்கள் பெயரளவில் முஸ்லிம்கள்  ! இவர்களை மீட்டெடுப்பது ரொம்ப கடினம் . போனவர்களை பற்றி கவலை படுவதை விட்டு விட்டு ; இனிமேல் யாரும் அப்படி போகாமல் இருக்க இன்ஷாஅல்லாஹ்  ஒவ்வொரு ஊரிலும் ஜமாஅத் ஒரு நல்ல தீர்வு கொண்டுவரவேண்டும்! இளைஞர்கள் , இளைஞிகள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்! 


இஸ்லாத்தில் ஆன்மிகம் மட்டுமில்லாமல் , அரசியலும் , சமுதாய நலனும் இருக்கிறது. இன்று இருக்கக்கூடிய கேடுகெட்ட அரசியல் போன்றோ , சமுதாய நலனோ போன்றோ இல்லை . மாறாக ஒரு அழகான அமைதியான , நேர்மையான அரசியலும், சமுதாய நலனும் நமக்கு கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறது  ! இஸ்லாத்துக்கு எதிராக எந்த அரசியலாக இருந்தாலும் , அது சாக்கடையாக தான் இருக்கும்! 


இன்ஷாஅல்லாஹ் நம் பிள்ளைகளை ரொம்ப கவனமாக விழிப்புடனும் அவர்களை நம் வளர்க்கவேண்டும்! இவர்கள் எதிர்காலத்தில் ஒரு நல்ல முஸ்லிமாக வாழவேண்டும் ! அவர்கள் முஸ்லிமாக மரணிக்கவேண்டும்! இது சொற்பகால வாழ்க்கை . இன்ஷாஅல்லாஹ் நமக்கு மறுமைதான் குறிக்கோள்  ! அதுதான் நிலையான வாழ்க்கை ! இதை மனதில் ஆழமாக பதிய வையுங்கள்.


நம்முடைய உண்மையான எதிரிகளை அடையாளம் கண்டுகொள்ளலாம்! ஆனால் , நம்முடன் இருந்துகொண்டு 'நமக்காக ஆதரவாக இருப்பது போன்று  பாவனை செய்து கொண்டுயிருப்பவர்களை நாம் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியாது! இவர்கள்தான் அவர்களை விட மோசமானவர்கள்! நமக்கு அல்லாஹ் போதுமானவன் ! நமக்கு அல்லாஹ்தான்  பாதுகாவலன் ! அவன்தான் நமக்கு அருளும், உதவியும் செய்வான்! இன்றைய அரசியலில் யாரையும் நம்பிவிடக்கூடாது! யார் முதுகில் குத்துவார்கள், யார் நெஞ்சில் குத்துவார்கள் என்று தெரியாது! நமக்கு முன்னாள் இருப்பவர்களை நம் கண்டுகொள்ளமுடியும்! ஆனால் , நமக்கு பின்னல் நின்று கொண்டு இருப்பவர்களை நம்மால் அறிந்துகொள்ள முடியாது! அவர்களின் தந்திரங்களை நாம் புரிந்துகொள்ளமுடியாது! அவர்களிடம் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும்!


நம்முடைய தேசம் இந்தியா ! நம்முடைய மார்க்கம் இஸ்லாம்! நம்முடைய மொழி  தமிழ் !  நமக்கு தேசப்பற்று இருக்கிறது! மார்க்கப்பற்று இருக்கிறது! மொழிப்பற்று இருக்கிறது! மாறாக தேசவெறியோ அல்லது மொழிவெறியோ  இருக்கக்கூடாது!  அல்லது மதவெறியோ கூடாது! 


கடந்தகால அரசியல் முஸ்லீம் தலைவர்களை தவிர (1980 முன்னாள் ) 


இன்று உள்ள முஸ்லீம் அரசியல் தலைவர்கள் , முஸ்லீம் சமுதாயத்துக்காக எந்த நலனும் செய்யவில்லை என்று தான் சொல்லவேண்டும். அவர்களின் நோக்கம் பதவிதான்!   அவர்கள் ஒரு சீட்டு அல்லது இரண்டு, மூன்று சீட்டுக்காக எந்த காட்சியிலும் கூட்டணியாக சேருவார்கள்! அவர்கள் எதையும் பார்க்கமாட்டார்கள்! முஸ்லீம் நலனுக்காக எதையும் சிந்திக்கமாட்டார்கள்! 


சில பெயர்தாங்கி முஸ்லிம்கள் இருக்கிறார்கள் , அவர்கள் ஈமானை இழப்பார்கள் ஒழிய அவர்களுடைய தலைவர் சீமானை இழக்கமாட்டார்கள்.அவருக்கு பின்னால் சில அப்பாவி முஸ்லிம்கள் ! பாவிகளாக மாறிவருகிறார்கள்! அதுதான் ஒரு பெரிய வேதனை! அல்லாஹ் பாதுகாக்கவேண்டும்!  


இறுதியாக , பெரியார் பற்று கொள்கை என்று ஒரு கூட்டம் இருக்கிறது . இவர்கள் மூடநம்பிக்கைக்கு எதிராகவும், கடவுள் கொள்கைக்கு எதிராகவும் இருப்பவர்கள்! இவர்களுக்கு பின்னால் சில முஸ்லீம் இளைஞர்கள் இருக்கிறார்கள் .  அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மூளை சலவை செய்து , இஸ்லாத்தை விட்டு வெளியேறுகிறார்கள்! இவர்கள் நமக்கு எதிரிகள்அல்ல ! மாறாக இவர்களின் கொள்கை தான் நமக்கு எதிராக இருக்கிறது! இதில் போய் விழுந்துவிடாமல் இருப்பதற்குத்தான் இந்த பதிவு. 


அல்லாஹ் நம் அனைவரையும் ஈமானுடன் மரணிக்கும் கூட்டத்தில் சேர்ப்பானாக ! ஒரு நல்ல ஸாலிஹான முஸ்லிமாக மரணிக்க செய்வானாக..முஸ்லிமாக வாழ்ந்து, முஸ்லிமாக மரணிக்க செய்வானாக .

ஆமீன் ..  


 

கருத்துரையிடுக

0 கருத்துகள்