வழிகேடு தலைதூக்கும் மூன்று வழிகள்

 


வழிகேடு தலைதூக்கும் மூன்று வழிகள்


உண்மையில் எங்கிருந்து குஃப்ர் - வழிகேடு தலைதூக் குகிறது என்பதை இப்போது உங்களுக்கு நான் காண்பிக்கப் போகிறேன். இந்தக் கொடிய பீடை புகுவதற்கு மூன்று வழிகள் இருக்கின்றன என்று திருக்குர்ஆன் நமக்குக் காட்டு கிறது.


1. ஆசைகளுக்கு அடிமைப்படுதல்


மற்றும்


"மேலும், அல்லஹ்வின் வழிகாட்டலின்றி தன்னுடைய மன இச்சைகளை மட்டுமே பின்பற்றி வாழ்கின்றவனைவிட வழிகெட்டவன் யார்? இத்தகைய கொடுமைக்காரர்களுக்கு அல்லாஹ் ஒருபோதும் நேர்வழி காட்டுவதில்லை."


(திருக்குர்ஆன் 28:50)


எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு மனிதனை அவனது ஆசா பாசங்களே வழி கெடுக்கின்றன என்பதே இந்த இறை வசனத்தின் கருத்து. ஒருவன் தன் ஆசைகளுக்கு அடிமையாகி விட்டால், இறைவனுக்கு அடிமையாவது சாத்தியமே இல்லை! 'எந்தச் செயலில் எனக்குப் பணம் கிடைக்கும்? எந்தச் செயலில் எனக்குக் கண்ணியமும் புகழும் கிடைக்கும்? எந்தச் செயல் எனக்கு இன்பத்தையும் சுவையையும் கொடுக்கும்? எந்தச் செயலைச் செய்தால் எனக்கு நல்வாழ்வும் அமைதியும் கிடைக்கும்?' என்றுதான் அவன் எப்போதும் பார்ப்பான். இவற்றில் எந்தச் செயலாக இருந்தாலும், அதனை இறைவன் மறுத்தாலும் சரி, அதனைத்தான் அவன் தேர்ந் தெடுப்பான். இவையல்லாத செயலைச் செய்யும்படி இறைவன் கட்டளையிட்டாலும் சரி, அவன் அறவே செய்ய மாட்டான்! இப்படிப்பட்ட மனிதனுக்கு அல்லாஹ் இறைவனாக இருக்கமாட்டான். மாறாக, அவனுடைய மனமே அவனுக்கு இறைவனாகிவிட்டது! அவனுக்கு எப்படி நல்வழி கிடைக்க முடியும்? இதே கருத்து திருக்குர்ஆனில் வேறோரிடத்தில் பின்வருமாறு விளக்கப்பட்டிருக்கிறது:


‎‫ارَعَيْتَ مَنِ اتَّخَذَ الهَهُ هَوْهُ أَفَأَنْتَ تَكُوۡنُ عَلَيْهِ وَكِيلًا أَمۡ تَحَّأَيْكَ‬‎ ‎‫عُوْنَ اَوْ يَعْقِلُوْنَ إِنْ هُمْ إِلَّا كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ سَبِيلًا‬‎


"தனது மன இச்சையைத் தன் கடவுளாக்கிக் கொண்டவனின் நிலை குறித்து என்றேனும் நீர் சிந்தித்ததுண்டா? இத்தகை யவனை நேர்வழியில் கொண்டு வரும் பொறுப்பை நீர் ஏற்க முடியுமா? என்ன இவர்களில் பெரும்பாலோர் செவியேற் கின்றார்கள் என்றோ, புரிந்து கொள்கின்றார்கள் என்றோ நீர் கருதுகின்றீரா? இவர்களோ கால்நடைகளைப் போன்றவர்கள் ஆவர். ஏன், அவற்றை விடவும் இவர்கள் மிகவும் தரம் கெட்ட வர்களாவர்!"


(திருக்குர்ஆன் 25: 43,44)


மனத்திற்கு அடிமைப்பட்டவன் மிருகங்களைவிடத் தரத்தில் தாழ்ந்து போவது எவ்விதச் சந்தேகத்திற்கும் இடமில்லாத ஒன்று. தனக்கென்று இறைவனால் ஏற்படுத்தப் பட்டிருக்கிற எல்லையைத் தாண்டிச் செல்கிற எந்த மிருகத்தையும் உங்களால் பார்க்கமுடியாது. தனக்கென்று இறைவன் தயார் செய்து வைத்திருக்கிற பொருள்களைத் தான் ஒவ்வொரு மிருகமும் தின்கிறது. தனக்காக எவ்வளவு வேலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளனவோ அவ்வளவு வேலைகளைத்தான் அது செய்கிறது. ஆனால் மனிதன் எனும் இந்தப் பிராணி தன் ஆசைகளுக்கு அடிமையாகும் போது, ஷைத்தான் கூட வெட்கப்படும் அளவுக்குப் பாதுகாப்புத் தேடக்கூடிய வேலைகளைச் செய்து திரிகிறான். வழிகேடு வருவதற்கான முதற்பாதை இது.


2. முன்னோர்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல்


இரண்டாம் பாதை: தந்தையார், பாட்டனாரிடமிருந்து வழி வழியாக வந்திருக்கிற ஆசாரங்கள், கொள்கைகள், கருத் தோட்டங்கள், வாழ்க்கை முறைகள் ஆகியவற்றிற்கு மனிதன் அடிமையாகி, அவற்றை இறைவனின் கட்டளைகளுக்கு மேலாகக் கருதுவது; அவற்றிற்கு முரண்பட்ட இறைச்சட்டம் அவனுக்கு முன்பு வைக்கப்படும்போது "என்னுடைய தந்தையாரும் பாட்டனாரும் செய்துவந்ததைத்தான் - என் குடும்பத்தினரின் ஆசாரங்களைத்தான் நான் பின்பற்றுவேன்” என்று கூறுவது. இந்த நோய்க்குப் பலியானவன் எப்படி இறைவனுக்கு அடிமையாக இருக்க முடியும்? அவனுடைய தந்தையார்- பாட்டனாரும் குடும்பத்தாரும்தாம் அவனுடைய கடவுள்கள்! எனவே 'நான் ஒரு முஸ்லிம்' என்று உண்மைக்கு மாறுபட்ட விதத்தில் வாதிட அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது? திருக்குர்ஆனில் இதுபற்றி அறிவிப்புக்


கொடுக்கப்பட்டிருக்கிறது:


மற்றும் انَ أَبَاؤُهُمْ لَا يَعْقِلُوْنَ‎ ‎‫شَيًّا وَلَا يَهْتَدُوْنَ‬‎


"அல்லாஹ் இறக்கியருளிய (வேதத்)தைப் பின்பற்றுங்கள்!" என்று அவர்களிடம் கூறப்பட்டால் “இல்லை! எங்கள் தந்தையார், பாட்டனார் எந்த வழியைப் பின்பற்றியதாகக் கண்டோமோ அதனையே நாங்கள் பின்பற்றுவோம்" என்று மறுமொழி கூறுகின்றார்கள். அப்படியானால் அவர்களின் தந்தையார், பாட்டனார் எதையும் சிந்தித்து உணராதவர்களாயும் நேர்வழி பெறாதவர்களாயும் இருந்தாலுமா இவர்கள் அவர் களைப் பின்பற்றுவார்கள்?" (திருக்குர்ஆன் 2:170)

கருத்துகள்