Italian Trulli

பொறாமை என்றால் என்ன?

 


பொறாமை என்றால் என்ன?


அருட்கொடையைப் பின்பற்றித்தான் பொறாமை உண்டாகி றது. உன் சகோதரனுக்கு இறைவன் அருட்கொடைகளை அளித்தி ருக்கலாம்; செல்வத்தையோ கல்வியையோ கொடுத்திருக்கலாம். அவனுக்குக் கிடைத்திருக்கும் செல்வத்தையோ கல்வியையோ பார்த்து நீ பொறாமை கொள்ள முடியும். இப்படி ஏற்படும் பொறாமையுணர்ச்சியை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.


1. அவனுக்குக் கிடைத்திருக்கும் இறையன்பளிப்பை நீ வெறுப்பாய். அது அவனிடமிருந்து பறிக்கப்பட வேண்டும் என்று ஆவல் கொள்வாய். இது முதல் பிரிவு. இதைத்தான் நாம் பொறாமை என்று குறிப்பிடுகிறோம். இறையருளை வெறுப்ப நும் அது நீங்கிவிட வேண்டும் என்று ஆவலுறுவதும்தான் பொறாமையின் அடிப்படைகள்


2. இது இரண்டாவது பிரிவு. இவ்விரண்டிற்கு மிடையில் வேற்றுமையுண்டு. இந்த நிலையில் நீ இருக்கும்போது பிறருக்குக் கிடைத்திருக்கும் செல்வம் குறித்து ஒரு வித உணர்ச்சியைப் பெறுவாய். அதை வெறுக்க மாட்டாய். அது அறுந்து போக வேண்டும் என்று எண்ணமாட்டாய்; என்றாலும் அவனுக்கு கிடைத்தது போன்று உனக்கும் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பாய்; ஆவல் கொள்வாய். இதைப் 'போட்டியுணர்ச்சி' என்று குறிப்பிடலாம். சில சமயங்களில் போட்டியுணர்ச்சியையே பொறாமையுணர்ச்சி என்று குறிப்பிடுவதும் உண்டு. பெயர்களில் ஒன்றுமில்லை. எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ள லாம். அவற்றின் பொருளைத்தான் நல்ல முறையில் உணர்ந்து கொள்ள வேண்டும்.


"உண்மை முஸ்லிம் போட்டியுணர்ச்சியால் உந்தப்படுகி றான்; நயவஞ்சகன் பொறாமையுணர்ச்சியால் பாதிக்கப்படுகி றான்" என்று திருநபியவர்கள் கூறியுள்ளார்கள்.


மேலே இரண்டு பிரிவுகளைப் பார்த்தோம். அவற்றில் முந்தியது தவறு; ஹராம் பொறாமை கொள்வது எக்காரணம் கொண்டும் கூடாது. ஆனால் கொடுஞ் செயல் புரிபவர்கள் நேர்மை மார்க்கத்தைப் பின்பற்றாதவர்கள் அடைந்திருக்கும் பாக் இயம் குறித்துப் பொறாமை கொள்ளலாம். ஏனெனில் அவர்கள் தங்கள் செல்வத்தைத் தவறான வழிகளில் உபயோகப்படுத்துவார் கள். இதனால் நாட்டின் அமைதி குலையும்; புரட்சியும் கலகமும் வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதைப் பொறாமை என்று சுட்டிக் காட்டுகிறான்.


"தங்களைப் போன்று நீங்களும் இறைவனுக்கு மாறுசெய்ய வேண்டும் என்று அவர்கள் எதிர் பார்க்கிறார்கள். அப்போது நீங்களும் அவர்களும் சரிசமமானவர்களாகி விடுவீர்களல்லவா?" என்கிறது திருமறை.


நபி யூசுப்(அலை) அவர்களின் அழகு பொறாமைக்கு நிலைக் களனாக அமைந்தது. அவர்களது சகோதரர்கள் அவர்கள்மீது பொறாமை கொண்டார்கள். "எங்களைவிட யூசுப் எங்கள் தந் தைக்கு மிகவும் உவப்பானவர் என்று இறைவன் கூறுகிறான். தந்தை யூசுபை அதிகமாக விரும்புவது அவரது சகோதரர்களுக்குப் பிடிக்கவில்லை. அந்த அன்பு அறுந்து போக வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். அதற்கு முனைந்தார்கள்.


"இறைவன் அவர்களுக்களித்த பாக்கியங்களைக் கண்டு மக்கள் பொறாமை கொள்கிறார்களா?"


என்று இறைவன் மறுத்துரைக்கிறான்.


"அவர்கள் உண்மையை அறிந்து கொண்ட பிறகுதான் பிள வுண்டு விட்டார்கள் - பகைமையின் காரணமாக" என்கிறான் இறைவன். மக்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும்; இறை வழியில் ஒன்று சேர்ந்து செயலாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இறைவன் அறிவினங்களை உண்டாக்கினான். "எல்லோரும் ஒன்றுபட்டு வாழுங்கள்" என்று கட்டளையிட்டான். ஆனால் மக்கள் அப்படிச் செய்யவில்லை. ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளத் துவங்கினார்கள். தலைமைத்துவத்தைத் தேடி விரைந் தார்கள்.


அண்ணல் நபியவர்களை எல்லோரும் அறிவார்கள். அவர் கள் இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததியில் உதித்தார்கள். அவர்கள் உண்மையான திருத்தூதர்தாம் என்றும் மக்களுக்குத் தெரியும். தெரிந்திருந்தும் அவர்களைப் பின்பற்றத் தவறிவிட்டார் கள்.


"எங்களுக்கு விரைவில் ஒரு திருத்தூதர் வருவார்” எங்கள் கிரந்தம் கூறுகிறது. "அவரிடம் நாங்கள் உதவி கோருவோம்" என்று யூதர்கள் போராடும் நேரங்களில் கூறுவார்களாம். அந்த நபி - திருத்தூதர் வரத் தவறவில்லை. குறிப்பிட்ட காலத்தில் வந்துவிட்டார். அது யூதர்களுக்கும் தெரியும். ஆனால் அவர்கள் அவரைப் பின்பற்றத் தவறி விட்டார்கள். இதற்குக் காரணம் என்ன தெரியுமா? பொறாமை.


திரண்ட செல்வம் கிடையாது. இவன் முன்னவனைப் பார்த்து ஆவல் கொள்ளலாம். "இறைவனே! எனக்கும் அவனைப் போன்ற திரண்ட செல்வத்தைத் தந்தருள்வாயாக! நானும் அவ னைப் போன்று நற்காரியங்கள் செய்கிறேன்!" என்று உண்மை யோடு இறைஞ்சலாம்.



ஒருவனுக்கு இறைவன் திரண்ட செல்வத்தை மட்டும் அளித் திருக்கிறான். அவனிடம் தேவையான அறிவு கிடையாது. அவன் தன் செல்வத்தை தவறான வழிகளில் செலவிடுகிறான். மற்றொரு வனுக்கு இறைவன் இவ்விரண்டையுமே கொடுக்கவில்லை. இவனிடம் பணமுமில்லை. அறிவுமில்லை. இவன் முன்னவ னைப் பார்த்து பொறாமைப்படுவதுண்டு. "இறைவா! அவனைப் போன்று எனக்கும் திரண்ட பொருளைத் தருவாயாக! அவனைப் போன்று நானும் செயலாற்றுகிறேன்!" என்று அவன் இறைஞ்ச முடியும். இவ்விருவருக்கும் கிடைப்பது ஒரே தண்டனை.


நற்காரியங்கள் செய்வதற்காகப் பணத்தை எதிர்பார்ப்பதில் தவறில்லை. அதைத் திருநபியவர்கள் மறுத்துக் கூறவில்லை; இழித்துரைக்கவில்லை. ஆனால் தீய காரியங்கள் செய்வதற்காகச் செல்வத்தை எதிர்பார்ப்பது தவறு. அதைத் திருநபியவர்கள் மறுத்துரைத்திருக்கிறார்கள்! இழித்துக் கூறியிருக்கிறார்கள். ஆக இறையருள் நீங்கிப் போகவேண்டும் என்று எதிர்பார்ப் பது தவறாயிருப்பினும் அதே போன்ற இறையருள் தனக்கும்


கிட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை.


இறையருள் பலவகைப்படும். இறை நம்பிக்கை ஏற்படுதல், இறை வணக்கங்களில் ஆர்வம் பிறத்தல் இவையும் இறையருள் களே. இவை போன்றவற்றில் போட்டியுணர்ச்சி பூண்டு செயலாற் றுவது ஆகுமான காரியம் மட்டுமல்ல, அவசியமான காரியமும் கூட! இதுபோன்ற உயர்குணங்கள் தன்னிடமும் குடிகொண்டி ருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது, ஆவலுறுவது அத்தியாவசி யம். இவற்றை ஒரு மனிதன் வரவேற்கவில்லை என்றால் அவன் இவற்றின் எதிர்பதங்களாகிய இழியுணர்ச்சிகளை வரவேற்கிறான் என்றுதான் பொருள். இது தவறு: 'ஹராம்!'


இன்னும் சில சமயங்களில் இறையருள் மேற் குறிப்பிட்ட வற்றைத் தவிர்த்து இதர நற்காரியங்களில் பிரதிபலிப்பதுண்டு.


தானதர்மம் செய்யும் மனப்பான்மை, பிறருக்கு உதவி புரியும்


நன்னோக்கம் -இப்படி ஏற்படுவதுண்டு. இவையும் இறையருள்


கள் தாம். இத்தகைய விஷயங்களில் போட்டியுணர்ச்சி கொள்வது


அவசியமாக இல்லாவிட்டாலும் விரும்பப் படுவதுதான்.



இதனால்தான் மேலே நான் குறிப்பிட்டது போல் போட்டியு ணர்ச்சியையே சிலர் பொறாமையுணர்ச்சி என்று குறிப்பிடுகிறார் கள். இது விஷயத்தல் மிகவும் கவனமாய் இருக்க வேண்டும். இது அபாயகரமான வழி. ஒவ்வொரு மனிதனும் தன்னைவிடக் குலத்திலோ செல்வத்திலோ உயர்ந்தவர்களைக் காணத்தான் செய் கிறான். அவர்களின் அந்தஸ்துக்கு நிகராகத் தன் மதிப்பை உணர்த்த வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அதற்கு முனைகி றான். இந்த ஆசையும் முயற்சியும் பயனற்றுப் போகும்போது அவன் உள்ளத்தில் இயற்கையின் அடிப்படையில் பொறாமையு ணர்ச்சி நிலைதூக்குகிறது. ஆனால் இப்படி எல்லோர்க்கும் ஏற்பட் டுவிடாது. உறுதியான மத நம்பிக்கையற்றவர்கள்தாம் இதற்கு இரையாகிறார்கள். அவர்கள் இந்த இக்கட்டான நிலையிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள். அவர்களைப் போலவே இறையச்சம் பூண்டவர்களும் தப்பித்துக் கொள்வார்கள். மேலே உள்ள ஒன்றை உன்னால் ஏறியடைய முடியாவிடில், அதைக் கீழே கொணர்ந்தா யினும் அடைய விரும்புகிறாயல்லவா? மரத்திலுள்ள கனியை மரத்தில் ஏறி அடைவது உனக்குச் சாத்தியமில்லாவிடில், அதைக் கல்லால் அடித்துக் கீழே கொண்டு வருகிறாயல்லவா?


நீ விரும்புவது சமத்துவம். மற்றவர்களும் உன் அந்தஸ்தி லேயே இருக்க வேண்டும் என்பது உன் எண்ணம். அவர்களில் ஒருவன் உன்னைவிட அந்தஸ்தில் உயரும்போது அதற்குக் காரண மான செல்வத்தை அல்லது அறிவை நீயும் அடைய முற்படுகி றாய். அதனால் மறுபடியும் சமத்துவம் ஏற்பட்டுவிடுமல்லவா? இது சாத்தியமில்லாமற் போகும்போது அவன் அந்தஸ்தைப் பொறாமை எனும் கல்லாலடித்து வீழ்த்த முனைகிறாய். இது பெரியதொரு தவறு. இதில் பல விளைவுகள் மறைந்து கிடக்கின் றன. மார்க்கத்தில் இதற்கு ஒரு சிறிதும் அனுமதி கிடையாது. இது 'ஹராம்'. மார்க்க விஷயத்திலும் உலகியல் விவகாரத்திலும் இது மறுக்கப்பட்டதுதான். ஆனால் இந்த உணர்ச்சியின் காரணமா கத் தவறான நடவடிக்கைகள் ஏற்படாமலிருந்தால் போதுமானது. இறைவனிடம் மன்னிப்படைய முடியும்.


இதுதான் பொறாமையின் அந்தரங்கம், இதை ஓரளவு விளக் கியாகி விட்டது.


கருத்துகள்