நல்லடியார்களாக வாழ்வதால் கிடைக்கும் ஈருலகப் பயன்கள்
இறை படைப்புக்களில் மனிதன் அதி சிறந்த படைப்பாவான். அவன் கண்ணியம் நிறைந்தவன். அவனது மானம் மரியாதை, இரத்தம் சொத்துக்கள் என்பன மிகப் பெறுமதியானவை. அவற்றை யாரும் இலகுவாக எடை போட முடியாது.
மனிதன் கண்ணியமிக்க, உயர்ந்த அல்லாஹ்வுக்கு கட்டுப்படவே அல்லாஹ் அவனை படைத்துள்ளான்.
அல்லாஹ் அவனை வீணாகப் படைக்கவில்லை.
மாறாக, அல்லாஹ்வை உரிய முறையில் மதித்து நடக்கவே படைத்துள்ளான்.
அதனாலேயே அவனது அடிமைத்துவத்தை அழகாக அவனால் நிரூபிக்க முடியும். அதன் மூலமே இறை திருப்தியை அவன் பெற முடியும்.
அதன் பயன்பாடு பற்றிய சுருக்கம் இங்கு தரப்படுகின்றது.
மன நிம்மதியான உலக வாழ்வு:
இது இறை நம்பிக்கை, மற்றும் நல்லமல்கள் செய்வோருக்கு மாத்திரம் அல்லாஹ் வழங்குகின்ற உலகியல் பாக்கியமாகும்.
ஒரு முஸ்லிம் கூழ்தான் குடித்து வாழ்பவனாக இருந்தாலும் அவன் தனது வாழ்வில் இதன் யதார்த்தம் பற்றி உணர்வான்.
( مَنْ عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ ) النحل/ 97)
ஆண், அல்லது பெண் யாரானாலும் அவர் இறைவிசுவாசியாக இருக்கும் நிலையில் நல்லறம் புரிவாராயின் நிச்சயமாக நாம் அவரை சுகமான வாழ்வைக் கொண்டு வாழ்வளிப்போம். மேலும் அவர்கள் செய்வதற்குரிய அதி சிறந்த கூலியையும் நாம் அவர்களுக்கு வழங்குவோம்.( அந்நஹ்ல்- 97)
மேற்படி வசனத்திற்கு மாறான நிலையில் இருந்து தூரமான அனைவரும் ஒரு வகையில், நிம்மதி இழந்து தடுமாற்றத்தில் இருப்போரே.
மரணத்தின் போது சுவனத்தைக் கொண்டு நற்செய்தி:
இது ஒரு அடியானின் உலக வாழ்வில் முதல் மகிழ்ச்சியாகும். அதைப் பெறாமல் மரணிப்பது மாபெரும் கேசேதமாகும் .
إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ (فصلت/ 30)
எவர்கள் அல்லாஹ்தான்
எங்கள் இரட்சகன் எனக் கூறி, (அந்த ஓரிறைக் கொள்கையில்) நிலைத்திருந்தார்களோ அவர்களிடம் வானவர்கள் (மரணவேளையில்) இறங்கி நீங்கள் அச்சப்படவோ, கவலைப்படவோ
வேண்டாம். நீங்கள் வாக்களிக்கப்பட்ட சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் அடையுங்கள் எனக் கூறுவார்கள்.(ஃபுஸ்ஸிலத்- 30)
குறிப்பு:- சூறா யாசீன் மற்றும் அல்ஃபஜ்ர் மற்றும் பல அத்தியாயங்களில் இன்னும் மேலதிகமான செய்திகள் காணப்படுகின்றன.
இறை நேசமும் பாசமும்:
اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَيَجْعَلُ لَهُمُ الرَّحْمٰنُ وُدًّا (مريم/٩٦)
எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல செயல்களையும் செய்கின்றார்களோ
நிச்சயமாக அவர்களுக்கு அர்ரஹ்மான் (தனது) நேசத்தை ஏற்படுத்துவான். (மர்யம்.96)
ஈமானுடன் நல்லறம் செய்பவர் இறையன்புக்கு உரித்தாகுவார் என்பதற்கு மேலுள்ள வசனமும் ஒரு சான்றாகும்.
இன்பம் நிறைந்த சுவன வாழ்வு:
இது ஒரு முஃமினின் இறுதி
இலட்சியமாகும்.
அல்குர்ஆன் இது பற்றி நிறையவே பேசி உள்ளது.
அந்த இடங்களில்
إن الذين آمنوا وعملوا الصالحات
எவர்கள் ஈமான் கொண்டு, நல்லமல்கள் புரிந்தார்களோ எனத் தொடங்கி பின் அவர்களின் கூலியை ஒவ்வொரு விதமாக அறிவிக்கின்றது.
அவைகளில்
جنات الفردوس نزلا
அவர்கள் "அல்பிர்தவ்ஸ்" என்ற சுவனச் சோலைகளில் விருந்தினராக அமர்த்தப்படுவர்.
جنات عدن التي وعد الرحمن عباده بالغيب.
அர்ரஹ்மான் தனது அடியார்களுக்கு மறைவில் வாக்களித்த அத்ன் என்ற சுவனச் சோலைகள் உண்டு என மற்றோர் இடத்திலும்,
எவர்கள் ஈமான் கொண்டு, நல்லமல்கள் புரிந்து, தொழுகையை நிலை நிறுத்தி, ஸகாத்தையும் வழங்கி வந்தார்களோ அவர்களுக்கு
لاخَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ}
எந்த பயமும் இல்லை, அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்,
அவர்கள் சுவனவாதிகள் என்று இன்னொரு இடத்திலும் குறிப்பிடுகின்றது.
இவ்வாறு பல்வேறு பட்ட நற்செய்திகளைக் கொண்டு நன்மாராயம் கூறியுள்ளது.
மறுமையில் பின்வருமாறு அழைக்கப்படுவார்கள்:
உலகில் ஈமான் கொண்டு நல்லமல்கள்
புரிந்த மக்கள் மறுமையில் பின்வரும் சுபசோனத்தோடு அழைக்கப்படுவர்.
ٱدْخُلُواْ ٱلْجَنَّةَ أَنتُمْ وَأَزْوَٰجُكُمْ تُحْبَرُونَ (الزخرف - 70)
நீங்களும், கூடவே உங்கள் மனைவியரும் சுவனத்தில் நுழையுங்கள். நீங்கள் சுகபோகம் அளிக்கப்படுவீர்கள். (என்று கூறப்படும்)
(அஸ்ஸுக்ருக்ஃப்- 70)
மற்றொரு இடத்தில்;
மறுமை நாளில்
جَنَّاتُ عَدْنٍ يَدْخُلُونَهَا وَمَن صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ ۖ وَالْمَلَائِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِم مِّن كُلِّ بَابٍ ● سَلَامٌ عَلَيْكُم بِمَا صَبَرْتُمْ ۚ فَنِعْمَ عُقْبَى الدَّارِ (الرعد / ٢٣- ٢٤ )
அவர்கள் அவர்களின் மனைவியர், மற்றும் (நடத்தையில்) நல்லவர்களாக நடந்த அவர்களின் மூதாதையர், அவர்களின் சந்ததிகளோடு "அத்ன்" என்ற சுவனச் சோலைகளில் நுழைவார்கள். வானவர்கள் அவர்களை ஒவ்வொரு வாயில்களும் கண்டு நீங்கள் பொறுமை காத்ததற்காக
உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும் எனக் கூறி, அவர்கள் மீது ஸலாம் உரைப்பார்கள். (வீடுகளில்) இறுதியான அந்த வீடே மிகவும் சிறந்ததாகும். ( அர்ரஃத்-23,24)
சுவனத்தில் அல்லாஹ்வை நேரடியாகப் பார்த்து மகிழ்தல்:
இது அல்லாஹ்வின் நேசர்கள் என்ற அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட நபியை நேசிக்கின்ற முஃமின்களாக வாழ்ந்து மரணித்தவர்களுக்கு மாத்திரம் உரியத்தான ஒரு நிகழ்வாகும்.
அதுவே ஒரு முஃமினுக்கு சுவனத்தில் சொல்லப்படும் இறுதி நற்செய்தியாகவும் விளங்கும் என்பது நபி மொழி.
۞ لِّلَّذِينَ أَحْسَنُوا الْحُسْنَىٰ وَزِيَادَةٌ ۖ وَلَا يَرْهَقُ وُجُوهَهُمْ قَتَرٌ وَلَا ذِلَّةٌ ۚ أُولَٰئِكَ أَصْحَابُ الْجَنَّةِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ (يونس /٢٦)
நன்மை புரிந்தோருக்கு (உரிய கூலி) நன்மையும், மேலும் அதைவிட (இறைமுகத்தைப் பார்த்து மகிழும் பாக்கியமும்) அதிகமும் கிடைக்கும்; அவர்களின் முகங்களை இருளோ, இழிவோ சூழ்ந்திருக்காது, அவர்கள் தாம் சவனபதிக்கு உரியவர்கள் - அதிலேயே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.( யூனுஸ்-26).
மேற்படி வசனத்தில் வரும் زيادة என்ற வார்த்தைக்கு அல்லாஹ்வை மகிழ்ச்சியோடு நேரடியாகக் காணுதல் என அறிஞர்கள் விளக்கமளித்துள்ளனர்.
தெளிவு
---
மறுமை நாளில் சொல்லப்படும் பின்வரும் அறிவிப்பானது உலகில் சிலரால் இறை நேசர்கள் என தெரிவு செய்யப்பட்டு, மார்க்க வரையறைகளையும் மீறி அவர்களுக்கு தெய்வீகத் தன்மையும் வலித்தன்மையும் வழங்கப்பட்டு வணங்கப்படும் அடியார்களை மாத்திரம் உள்ளடக்கியது கிடையாது.
மாறாக, அல்லாஹ்வின் பார்வையில் இறை விசுவாசிகள் என அறியப்பட்ட ஈமானில் உயர் மற்றும் தாழ் நிலை அடைந்த அனைவருக்கும் பொதுவானதாகும்.
يَٰعِبَادِ لَا خَوْفٌ عَلَيْكُمُ ٱلْيَوْمَ وَلَآ أَنتُمْ تَحْزَنُونَ. (الزخرف - 68)
எனது அடியார்களே! இன்றைய தினம் நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. நீங்கள் கவலைப்படவும் மாட்டீர்கள். (அஸ்ஸுக்ருஃப்- 68)
மறுமையில் அச்சமற்ற வாழ்வு, பயம், பீதி, கலக்கம், நடுக்கம் போன்ற மன உளைச்சல்களோடு தொடர்பான பண்புகள் அற்ற நிலை அவ்லியாக்களுக்கு மாத்திரமின்றி, முஃமின்கள் அனைவருக்கும் பொதுவானதாகும்.
அதனை இறை நேசர்கள் சிலருக்கு மாத்திரம் உரித்தானது எனக் கூறி அவர்களை வணங்குமாறு அழைப்பது மிகப் பெரும் அபத்தமாகும் .
اللهم اجعلنا ووالدينا والمسلمين والمسلمات جميعا من أهل الجنة .
- எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி
நன்றி இஸ்லாமியபுரம் .
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!