புறம் பேசும் பெண்களை பற்றி முக்கியமாக கணவனின் குறையை பேசும் பெண்களின் மறுமையின் நிலமை எவ்வாறு இருக்கும்???
புறம் பேசும் பெண்களை பற்றி முக்கியமாக கணவனின் குறையை பேசும் பெண்களின் மறுமையின் நிலமை எவ்வாறு இருக்கும்???
🌹பதில்🌹
நீங்கள் ஒருவரின் குறையை அடுத்தவர்களிடம் பேசுவதுதான் புறம் பேசுவது ஆகும்.
அவர்களிடம் இல்லாத ஒரு குறையை கூறினால் அது அவதூறு ஆகும்.
புறம் பேசுவது என்பது இஸ்லாத்தில் மிக மிக கண்டிக்கத்தக்க,நரகத்திற்க்கு அழைத்துச்செல்லும் ஒரு விஷயமாகும்.
ஒரு பெண், தொழுகை,நோன்பு போன்ற மார்க்க விஷயங்களை பேணி நடந்து, கணவனைப் பற்றி குறைகூறித் திரிந்தால் என்றால்,அந்த ஒரு விஷயமே அவளை நரகத்திற்க்கு அழைத்துச் சென்று விடும்.,எனவே இது மிக மிக கண்டிக்கத்தக்க ஒரு விஷயமாகும்.,
உண்மையிலேயே கணவனிடம் குறை இருந்து அந்த குறையை மனைவி மறைத்தாலானால் அவளின் குறைகளை அல்லாஹ் மறுமையில் மறைப்பான்.,
எனவே இஸ்லாம் கூறிய முறைப்படி குறைகூறி,புறம் பேசாமல் நரகத்திலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும்.
📚📖ஆதாரங்கள்
📕يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ ۖ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًا ۚ أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ ۚ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَّحِيمٌ ﴿49:12﴾
49:12. முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.
📕وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ ﴿104:1﴾
104:1. குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.
304. “ஹஜ்ஜுப் பெருநாளன்றோ நோன்புப் பெருநாளன்றோ தொழும் திடலிற்கு நபி(ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்று, “பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது“ என்று கூறினார்கள். “இறைத்தூதர் அவர்களே! ஏன்“ என்று அப்பெண்கள் கேட்டதற்கு, “நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றி விடக்கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது “இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கக் கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன“ என்று பெண்கள் கேட்டனர். “ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?“ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டததற்கு, “ஆம்“ என அப்பெண்கள் பதில் கூறினர். “அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது; ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு விடுவதில்லையா?“ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கும் “ஆம்!“ எனப் பெண்கள் பதில் கூறினர். “அதுதான் பெண்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்” என்று நபி(ஸல்) கூறினார்கள்” என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 6. மாதவிடாய்
📕29. “எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது, “இறைவனையா அவர்கள் நிராகரிக்கிறார்கள்?“ எனக் கேட்கப்பட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “கணவனை நிராகரிக்கிறார்கள். உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்தது, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் “உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை“ என்று பேசிவிடுவாள்“ என்றார்கள்” என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை
5048. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), ”புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், ”அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”நீர் உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக் கூறுவதாகும்” என்று பதிலளித்தார்கள். அப்போது, ”நான் சொல்லும் குறை என் சகோதரரிடம் இருந்தாலுமா? (புறம் பேசுதலாக ஆகும்), கூறுங்கள்” என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”நீர் சொல்லும் குறை உம்முடைய சகோதரரிடம் இருந்தால்தான், நீர் அவரைப் பற்றிப் புறம் பேசினீர் என்றாகும். நீர் சொன்ன குறை அவரிடம் இல்லாவிட்டாலோ, நீர் அவரைப் பற்றி அவதூறு சொன்னவராவீர்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 45. பெற்றோருக்கு நன்மை செய்வதும், உறவைப் பேணி வாழ்வதும்
📕إِنَّ الَّذِينَ جَاءُوا بِالْإِفْكِ عُصْبَةٌ مِّنكُمْ ۚ لَا تَحْسَبُوهُ شَرًّا لَّكُم ۖ بَلْ هُوَ خَيْرٌ لَّكُمْ ۚ لِكُلِّ امْرِئٍ مِّنْهُم مَّا اكْتَسَبَ مِنَ الْإِثْمِ ۚ وَالَّذِي تَوَلَّىٰ كِبْرَهُ مِنْهُمْ لَهُ عَذَابٌ عَظِيمٌ ﴿24:11﴾
24:11. எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது; மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு.
📕5049. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் ஓர் அடியாரின் குறையை இவ்வுலகில் மறைத்துவிட்டால், அதை அவன் மறுமை நாளிலும் மறைக்காமல் இருப்பதில்லை. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 45. பெற்றோருக்கு நன்மை செய்வதும், உறவைப் பேணி வாழ்வதும்
நன்றி : https://mkbgroup.wordpress.com/page/2/
.jpg)
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!