Italian Trulli

பொறாமைக்கு காரணங்கள் யாவை? 🕯💸

 


பொறாமைக்கு காரணங்கள் யாவை?

🕯💸



வேறு சில சமயங்களில் அது உலகியல் விவகாரங்களின் பாற்பட்டதாயிருக்கலாம். உலகில் பேரின்பம் அடைய வேண்டும் என்ற எண்ணத்தின் காரணமாகவே இது விஷயத்தில் போட்டியு ணர்ச்சி உண்டாகிறது. இவற்றைப் பற்றி விளக்கிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.


நம் தலைப்பு பொறாமையில் நிற்கிறது. அதை நன்கு


ஆராய்வோம். பொறாமை உண்டாவதற்கு ஒன்று இரண்டல்ல;


பல வழிகள் இருக்கின்றன. எனினும் அவற்றை ஏழு காரணங்க


ளில் கட்டுப்படுத்தலாம். பொறாமையுணர்ச்சி எங்கு — எப்போது


ஏற்பட்டாலும் அதற்கு மேற்குறிப்பிட்ட ஏழு காரணங்களில் ஒன்று கண்டிப்பாய் இருந்தாக வேண்டும். பகைமை தற்பெருமை முதலியவை இதற்குக் காரணங்களாக அமைய முடியும். தன் விரோதி ஒருவன் சிறப்பும் செல்வாக்கும் அடைந்திருப் பதைப் பார்த்து மனிதன் பொறாமை கொள்கிறான். இந்தப் பொறாமைக்குக் காரணம் பகைமைதான். தன் பகைவனுக்கு


எத்தகைய நன்மையும் ஏற்படுவதை அவன் விரும்ப மாட்டான்.


தன் செல்வத்தையும் செல்வாக்கையும் எடுத்துக் கூறி ஒருவன் பெருமைப்படுவதுண்டு. இதைப் பார்த்த மற்றொருவனுக்கு அவன் மீது பொறாமை ஏற்படுகிறது. அவன் செல்வமும் செல் வாக்கும் சூறையாடப்பட்டு விட்டால் அவன் பெருமையடித்துக் கொள்ள மாட்டான் என்று எண்ணுகிறான் ... இப்படியே செல்கி றது.


முதல் காரணம்: பொறாமை ஏற்படுவதற்குரிய முதல் கார ணம் பகைமையல்லவா? இது மிகவும் பிரதானமான காரணம். உன்னை ஒரு மனிதன் ஏதோ ஒரு காரணத்துக்காகத் துன்புறுத்தி னான் என்று வைத்துக்கொள். அவனை நீ வெறுக்கிறாய்; அவன் மீது சினம் கொள்கிறாய். உன் உள்ளம் கொதிக்கிறது. இதனால் உன் உள்ளத்தின் அடித்தளத்தில் "பழிக்குப்பழி" என்ற குரல் எழும்புகிறது; அவனை வஞ்சம் தீர்க்கச் சந்தர்ப்பத்தை எதிர்பார்க் கிறாய்.


ஆனால் இந்த எண்ணம் எல்லா நேரங்களிலும் நிறைவேறி விட முடியாது. அப்படி உன் எண்ணம் வீணாகும்போது "என் னால் அவனைத் தண்டிக்க முடியாவிட்டாலும் காலம் அவனைத் தண்டிக்கட்டும். அதைப் பார்த்து நான் இன்புறுகிறேன்!" என்று எண்ணிக் கொள்கிறாய். இப்படி நீ வஞ்சம் தீர்க்கும் எண்ணத்தை வேறு வகையில் திருப்பிக் கொள்ளும்போது இறைவனிடத்தில் உனக்குச் சிறப்பு ஏற்பட வழியுண்டாக முடியும்.


இரண்டாம் காரணம்: மற்றவர்கள் தன்னைவிட அந்தஸ்தில் உயரக் கூடாது என்ற எண்ணம். இது இரண்டாம் காரணம். உன் நண்பர்களில் ஒருவன் உயர்பதவியை அல்லது சிறப்பான அறிவை அல்லது திரண்ட செல்வத்தை அடைந்துவிட்டால் அது குறித்து நீ முகத்தைச் சுளிக்கிறாய்; அவன் உன்னைவிட அந்தஸ்தில் உயர்ந்து விடுவானோ என்று அஞ்சுகிறாய்; அவனுடைய பாக்கி யங்களைப் போன்று உன்னிடம் எதுவும் இல்லையே என்று வருந்துகிறாய். ஏனெனில் அவன் உனக்குச் சரிசமமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறாய். இதனால் அவன் உயர்வதை நீ வெறுக்கிறாய்.


மூன்றாம் காரணம்: பெருமை எண்ணம். ஒருவன் இயற்கை யிலேயே பெருமையடிப்பவனாக இருக்கலாம். மற்றவர்களை இழிவாகவும் மட்டரகமாகவும் மதிக்கும் மனப்பான்மை அவனி டம் குடி கொண்டிருக்கலாம். இத்தகைய மனிதனுக்குச் சிறப்பம் சம் ஏதேனும் கிடைத்துவிட்டால் அவனது பெருமையுணர்ச்சி பல மடங்காகப் பெருகிவிட முடியும் என்று நீ எண்ண இட முண்டு. எனவே அவனுடைய பாக்கியம் குறித்து உனக்குப் பொறாமை உண்டாகிறது.


குறைஷிகள் அண்ணலவர்களை இப்படித்தான் மதித்தார்கள். அண்ணலவர்களுக்குக் கிட்டிய அருளைப் பார்த்துப் பொறாமை கொண்டார்கள்.


"சாதாரண மனிதர் அவர். எங்களுக் கெதிரில் அவர் எப்படி வரமுடியும்?" என்றார்கள். திருமறை அருளப்பட்டதும் அவர்க ளின் பொறாமையுணர்ச்சி பல மடங்கானது.


"திருமறையை இறைவன் அவருக்குத்தானா அருள வேண் டும்? சிறந்த மனிதர் ஒருவருக்கு அதை அருளியிருக்கக் கூடாதா?" என்றார்கள்.


நான்காம் காரணம்: விந்தையுணர்ச்சியாலும் பொறாமை ஏற்படுவதுண்டு.


திருத்தூதர்களைப் பார்த்து, "நீங்கள் எங்களைப் போன்ற மானிடர்கள் தானே?" என்று மக்கள் கேட்டார்கள்.


"உங்களைப் போன்ற மனிதர்களை நீங்கள் பின்பற்றி நடந்


தால் பின்னர் நீங்கள் வருந்துவீர்கள்!" என்று தங்களுக்குள்


உபதேசம் பண்ணிக் கொண்டார்கள். அவர்கள் அதிசயப்பட்டார்


கள் - தங்களைப் போன்ற ஒரு மனிதனுக்கு நபித்துவம் கிடைக்க பாராட்டையும் புகழுரையையும் கேட்டு இன்பமடைகிறான். சிறந்த அறிஞன், நிகரற்ற மேதை" என்று மக்கள் அவனைப் பாராட்டும்போது அவன் உள்ளம் மகிழ்ச்சியில் நீந்துகிறது.


ஆனால் இந்தச் சமயத்தில் மற்றொரு கவிஞன் மேதை தோன்றிவிட்டால் அவன்மீது முன்னவன் பொறாமை கொள்கி றான். தன்னுடைய தனித் தன்மைக்குப் பங்கம் ஏற்பட்டு விட் டதே என்று எண்ணிச் சினமுறுகிறான். ஒன்று அவன் இரண்டாம வனுக்கு எதிரில் வாழப்பி பிடிக்காமல் மரணத்தை வரவேற்கிறான். அல்லது இரண்டாமவனின் பெருமை குன்றிப் போவதை எதிர் பார்க்கிறான். வீரம், இறைவணக்கம், அறிவு தொழில் நுட்பம், அழகு முதலிய எல்லா இனங்களிலும் இத்தகைய பொறாமை ஏற்பட முடியும். இந்தப் பொறாமைக்குரிய மூலக்காரணம் பதவி மோகம் தனித்து விளங்க வேண்டும் என்ற ஆசை!


யூத அறிஞர்கள் அண்ணலவர்களை நன்கு அறிந்திருந்தார்கள் என்றாலும் தங்களுக்கிருக்கும் மதிப்பும் மரியாதையும் குன்றிவி டுமோ என்றும் அஞ்சினார்கள். எனவே அண்ணலை மறந்தார்கள். "அவர் நபியல்லர்!" என்று வாதாடினார்கள். இதற்குக் காரணம் அவர்களின் உள்ளத்தில் குடிகொண்டிருந்த பதவி மோகம் அந்தஸ்து ஆர்வம்!


ஏழாம் காரணம்: இயற்கையிலேயே அமைந்திருக்கும் மனக் கறை, இத்தகைய மனக்கறை சிலருக்குண்டு. எத்தனையோ பேர்களை நீ கண்டிருப்பாய். அவர்கள் பதவியை விரும்ப மாட்டார்கள். அதை அடையப் பாடுபட மாட்டார்கள். பொருள் சேர்ப்பதிலோ மதிப்பை உயர்த்துவதிலோ அவர்கள் ஆர்வம் காட்டமாட்டார்கள்.


ஆனால் அவர்களிடம் ஒரு மனிதனுக்கு இறைவன் அளித்தி ருக்கும் பொறாமையைப் பற்றிக் கூறினால் அவர்கள் வெறுப்ப டைவார்கள். அவனது துன்பத்தைக் கண்டு இன்புறுவார்கள். இவர்கள் என்றைக்குமே இறையருளை வெறுப்பவர்கள்; இறைய ருள் மற்றவர்களுக்குக் கிடைக்கக்கூடாது என்பது இவர்கள் எண் ணம்; தங்களுக்கு உரிமையான அருள் பறிக்கப்பட்டது போன்று இவர்கள் வருந்துவார்கள். ஒரு மனிதன் தன் பொருளைப் பிறருக் குக் கொடுக்காவிடில் அவனைக் 'கஞ்சன்' என்று குறிப்பிடுகி றோம். இவர்கள் இறைவனின் பொருளில் அவன் அருளில் கஞ்சத் தனத்தைக் காட்டுகிறார்கள். மற்றவர்கள் அதை அடையக் கூடாது என்று எதிர்பார்க்கிறார்கள்.

கருத்துகள்